Saturday, July 31, 2010 4:14 AM IST
Click
முக்கியச் செய்திகள்
நிர்வாகப் பணியில் தினகரன் ஈடுபட உயர் நீதிமன்ற நீதிபதி எதிர்ப்பு

First Published : 11 Mar 2010 01:21:04 AM IST

Last Updated : 11 Mar 2010 10:42:22 AM IST

பெங்களூர்,​​ மார்ச் 10:​ நிர்வாகப் பொறுப்பிலிருந்தும் நீங்கள் விலகியிருக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.டி.தினகரனுக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார் உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.சைலேந்திரகுமார்.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள தினகரன் மீது நில ஆக்கிரமிப்பு புகார் ​ உள்ளது.​ இதுதொடர்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமித்த குழு விசாரணை நடத்தி வருகிறது.​ மேலும் தினகரன் மீது மாநிலங்களவையில் ​ கண்டன தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஈடுபட வேண்டாமó என தினகரனுக்கு கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.​ இதையடுத்து அவர் 2009-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி முதல் வழக்கு விசாரணையில் ஈடுபடவில்லை.​

ஆனால் நீதிமன்ற நிர்வாகப்பணிகளை கவனித்து வருகிறார்.​ இவ்வாறு தினகரன் நிர்வாகப் பணியை கவனித்து வருவதற்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள டி.வி.சைலேந்திருமார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அவர் இந்த கருத்தைத் தெரிவித்திருந்தார்.​ இப்போது மீண்டும் அவர் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார்.​ இதுதொடர்பாக தனது இணையதளத்திலும் வெளியிட்டுள்ளார்.​ மேலும் தினகரனுக்கும் பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,​​ "நீங்கள் நீதிமன்ற நிர்வாகப் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்க வேண்டும்.​ இது எனது விருப்பமும் தாழ்மையான வேண்டுகோளும் ஆகும்.​

மேலும் வழக்கு விசாரணையில் ஈடுபடாத பட்சத்தில் முழு அளவிலான சம்பளத்தைப் பெறுவதும்,​​ உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கான சலுகைகளை அனுபவிப்பதும் சரியல்ல.​ ​

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கான பணிகளை நீங்கள் மேற்கொண்டால் இந்த வசதிகளைப் பெறுவதில் தவறு இல்லை,​​ ஆனால் அந்தப்பணியை நீங்கள் செய்யவில்லை,​​ மேலும் கண்டன தீர்மானத்தையும் எதிர்கொண்டு உள்ளீர்கள் என்று ​ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

' மேலும் தினகரன் நில ஆக்கிரமிப்புப் புகார் தொடர்பாக இந்திய சர்வே ஆணையம் மேற்கொண்ட விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.​

இதில் நில ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சில பத்திரிகைளில் செய்தி வெளியாகியுள்ளது.​ நீதிபதி சைலேந்திரகுமார் இதையும் குறிப்பிட்டு,​​ நீதிபதி தினகரன் உயர்நீதிமன்றத்தில் எந்தப் பணியிலும் ஈடுபடக்கூடாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.​

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்