Saturday, July 31, 2010 4:07 AM IST
Click
வணிகம்
பங்குச் சந்தை செயல்பாட்டை ஆய்வு செய்ய குழு நியமனம்

First Published : 09 Feb 2010 12:00:00 AM IST


மும்பை,​​ பிப்.8:​ பங்குச் சந்தைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய தனிக் குழுவை இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் ​(செபி)​ ஏற்படுத்தியுள்ளது.​ இந்தக் குழுவின் தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் நியமிக்கப்பட்டுள்ளார்.​ ​பங்குச் சந்தைகள் அனைத்தும்,​​ வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்குள் செயல்படுகின்றனவா என்பதை இக்குழு ஆராயும்.​ ​

 பங்குச் சந்தையில் உரிய கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பதையும் இக்குழு ஆராயும் என்று "செபி' வெளியிட்ட அறிக்கையில் ​ தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ஏற்கெனவே செயல்பட்டு வரும் பங்குச் சந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கண்டறிவதோடு,​​ எதிர்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட உள்ள பங்குச் சந்தைகளில் இத்தகைய பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை இக்குழு அளிக்கும் என்று சிஎன்ஐ ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குநர் கிஷோர் ஆஸ்ட்வால் தெரிவித்தார்.​ ​

பங்குச் சந்தையில் உறுப்பினர்களின் பங்கு 51 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என ஏற்கெனவே அரசு அனைத்து பங்குச் சந்தைகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தது.​

புதிதாக அமைக்கப்பட்ட குழுவில் நிதி அமைச்சக இணைச் செயலர் கே.பி.​ கிருஷ்ணன்,​​ டாடா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் கிஷோர் செüகர்,​​ கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோடக்,​​ தேசிய செக்யூரிட்டீஸ் வர்த்தக மையத்தின் சிறப்பு அதிகாரி ஜி.​ சேது,​​ செபியின் முழு நேர இயக்குநர் கே.எம்.​ ஆப்ரஹாம்,​​ செபி செயல் இயக்குநர் ஜேஎன் குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்