பழனி அருகே கள் விற்ற 7 பேர் கைது
First Published : 10 Mar 2010 11:11:39 AM IST
Last Updated :
பழனி, மார்ச் 9: பழனி அருகே கள் விற்ற ஏழு பேரை போலீஸôர் கைது செய்தனர்.பழனியை அடுத்த ஆயக்குடி நந்தவனக்குளத்தின் கரையில் பச்சளநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (40), கணக்கன்பட்டியைச் சேர்ந்த மகாராஜன் (55) ஆகியோரும், அய்யம்புள்ளியில் கொடைக்கானல் வரட்டாறைச் சேர்ந்த ஆறுமுகம் (42), பெருமாள் புதூரைச் சேர்ந்த மணி (21) ஆகியோரும், பொருந்தல் கரையில் பெருமாள் புதூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (28), லட்சுமி (54), கரிக்காரன்புதூரைச் சேர்ந்த கருப்புசாமி (31) ஆகியோரும் கள் விற்றுள்ளனர். இவர்களைக் கைது செய்த போலீஸôர், அவர்களிடமிருந்து தலா 5 லிட்டர் கள்ளை கைப்பற்றி கொட்டி அழித்தனர். இது குறித்து, ஆயக்குடி, பழனி தாலுகா போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.