Tuesday, February 09, 2010 7:28 PM IST
Click
தமிழகம்
பஸ் கண்ணாடிகளில் விளம்பரம் செய்ய தடை: உயர் நீதிமன்றம்

First Published : 24 Nov 2009 12:59:58 AM IST


விளம்பர வாசகங்களுடன் காணப்படும் பஸ். இடம்: அண்ணாநகர், நாள்-திங்கள்கிழமை.
சென்னை, நவ. 23:  அரசு பஸ்களில் ஜன்னல் மற்றும் பின்பக்க கண்ணாடிகளில் விளம்பரம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

  கோவை நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த கதிர்மதியோன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

  அரசு பஸ்களில் அனைத்துப் பக்கங்களிலும் விளம்பரம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டது.

  இந்த மனு நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாய, நீதிபதி ஆர். சுதாகர் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

  மனுவை விசாரித்த பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

  பஸ்களில் உள்ளே இருப்பவர்களை மறைக்கும் விதத்தில் பக்கவாட்டுகளிலும், பின்பக்கக் கண்ணாடிகளிலும் விளம்பரம் செய்யப்படுகிறது.

  வாகன ஓட்டிகள் மற்றும் சாலைகளைப் பயன்படுத்துபவர்களின் கவனம் சிதறும் வகையில் பெரும்பாலான விளம்பரங்கள் அமைந்துள்ளன. இதன்காரணமாக, சாலை விபத்துகள் ஏற்படக்கூடும். சட்டப்படி, வாகனங்களில் விளம்பரம் செய்ய உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அரசு பஸ்களில் விளம்பரம் செய்வதற்கு எந்த அனுமதியும் பெறவில்லை என்று தெரிகிறது.

  இதுபோன்ற விளம்பரங்களால் பஸ்களின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது. இதைப் பயன்படுத்தி தீவிரவாதிகளும், சமூக விரோதிகளும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடும்.

  அதேபோல், இந்த பஸ்களில் இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகலாம்.

  எனவே, சட்டத்தை மீறி பஸ் ஜன்னல் மற்றும் பின்பக்க கண்ணாடிகளில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற வேண்டும்.

  பஸ்களுக்கு உள்ளேயும், ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பின்பக்க கண்ணாடிகளுக்கு கீழேயும் விளம்பரம் செய்ய அனுமதி அளிக்கலாம். இதுபோன்ற விளம்பரங்களுக்கு போக்குவரத்து கழகங்கள் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

  பஸ்களில் செய்யப்படும் விளம்பரங்கள் ஆபாசமாகவோ, மற்றவர்களைப் புண்படுத்தும் வகையிலோ இருக்கக் கூடாது. இதற்கு ஏற்ற வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்த வேண்டும்.

  மேற்கூறிய பரிந்துரைகள் கண்டிப்பாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்

mohan neenga sonna ellam seivaha ana kattanam mattdu aukaga solurathu than athalam nega solla kudathu

By raja
11/24/2009 10:56:00 AM

12. அனைத்து பேருந்து நிலையத்திலும் கழிவறை சுத்தமாக பேண வேண்டும். பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் இலவசமாக கொடுக்க வேண்டும். தொண்டு நிறுவனம் அல்லது பெரிய கம்பெனி மூலம் இதை நிர்வாகப் படுத்தி, இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கம்பெனி விளம்பரங்கள் வைத்து செலவு ஈடு கட்டலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலைய கழிவறைகளும் மிகவும் மோசமாக உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் மாதம் ஒரு முறை கண்காணிப்பது நல்லது. அனைத்து பேருந்து மற்றும் பேருந்து நிலையத்தை இரவு நேரத்தில் சுத்தப்படுத்த வேண்டும். 13. பேருந்துகளில் ரீசார்ஜ் கார்ட் மூலம் பயணசீட்டு கொடுக்கும் நடைமுறையை அமல்ப்படுத்த வேண்டும். இதனால் சில்லறை பிரச்சினைய்யை தவிர்க்கலாம். பேருந்து, பேருந்து நிலையம் மற்றும் பயணசீட்டுகளில் விளம்பரம் செய்து பேருந்து கட்டணத்தை குறைக்கலாம்.

By Mohan
11/24/2009 10:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்