புதிய 2 ரூபாய் நாணயம் வெளியீடு
First Published : 09 Feb 2010 12:00:00 AM IST
Last Updated :
09 Feb 2010 01:57:22 AM IST
சென்னை, பிப். 8: புதிய 2 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.கண் பார்வையற்றவர்களுக்கான "பிரெய்லி' முறை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய லூயி பிரெய்லியின் (1809}2009) 200}வது பிறந்தநாள் விழாவை நினைவுகூரும் வகையில் இந்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த நாணயம் 27 மில்லி மீட்டர் விட்டம், 5.62 கிராம் எடை அளவுடன் துருப்பிடிக்காத எவர்சில்வரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 83 சதவீதம் இரும்பும், 17 சதவீதம் குரோமியமும் கலந்துள்ளன.நாணயத்தின் பின்புறத்தில் லூயி பிரெய்லியின் படம் நடுவில் பொறிக்கப்பட்டிருக்கும். மேற்புறத்தில் அவரது பெயர் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். படத்தின் கீழ்புறம் அவரது பெயர் "பிரெய்லி' முறையில் எழுதப்பட்டிருக்கும்.முன்புறத்தில் நாணயத்தின் முகம் இரு படுக்கைக் கோடுகளால் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். நடுப்பகுயின் இடதுபுறம் அசோகா தூணின் சிங்க முகம் பொறிக்கப்பட்டிருக்கும். நடுப்பகுதியின் வலப்புறத்தில் நாணயத்தின் மதிப்பு இலக்கம் "2' என்பது சர்வதேச எண் அளவில் பொறிக்கப்பட்டிருக்கும்.மேற்புறத்தில் இந்தியா என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் என்று ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் எம்.எம். மாஜி அறிவித்துள்ளார்.