Saturday, July 31, 2010 4:08 AM IST
Click
முக்கியச் செய்திகள்
பெண் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்

First Published : 11 Mar 2010 06:38:52 AM IST

Last Updated : 11 Mar 2010 10:47:45 AM IST

அரூர்,​​ மார்ச்.​ 10: பெண் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என மாவட்ட உரிமையியல் நீதிபதி சி.எம்.சரவணன் கேட்டுக் கொண்டார்.

அரூரில் வட்ட சட்டப் பணிகள் குழு,​​ தொண்டு நிறுவனங்கள் இணைந்து புதன்கிழமை நடத்திய உலக மகளிர் தின விழாவில் அவர் பேசியது:​ ​

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு.​ பெண் குழந்தைகளை புறக்கணிக்காமல் ஊக்குவித்து கட்டாயம் கல்வி கொடுக்க வேண்டும்.​ பெண்களுக்கு எதிரான வன்கொடுமை,​​ பெண் சிசுகொலை,​​ இளம்வயது திருமணம்,​​ வரதட்சணைக் ​ கொடுமைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.​​ முதியோரை பராமரிப்பது நமது கடமை.​ முதியோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு ​ சட்ட ரீதியாக தண்டனையும் உண்டு.​ மகளிர் குழுக்கள் வங்கியில் கடனுதவி பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்த கூடாது.​

சமூக வளர்ச்சி,​​ சமூக முன்னேற்றத்திலும் ஆர்வம் காட்ட வேண்டும்.​ ​ ​பெண்கள் அனைத்து சட்ட உதவிகளை இலவசமாக பெறலாம்.​ பெண்கள் தங்களுக்கு ​ கிடைத்திருக்கும் உரிமைகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.ஆனந்தன்,​​ தொண்டு நிறுவன இயக்குநர்கள் கோ.கிருஷ்ணசாமி,​​ மனோகரன்,​​ சத்தியவாணி மணி உள்ளிட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்துகொண்டனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்