பேராவூரணி அருகே கோஷ்டி மோதல்: 3 பேர் கைது
First Published : 09 Feb 2010 08:29:01 AM IST
Last Updated :
09 Feb 2010 09:52:43 AM IST
பேராவூரணி, பிப்.8: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே முன் விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக இரு தரப்புகளைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்குப்பதியப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேதுபாவாசத்திரம் காவல் சரகம் தில்லங்காட்டைச் சேர்ந்த பூமாலை, ரெங்கநாதன் ஆகியோரிடையே இடப் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ரெங்கநாதன், பஞ்சாட்சரம்,ரோகினி ஆகியோருக்கு வெட்டு விழுந்து, தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் பூமாலை கொடுத்த புகாரின் பேரில் ரெங்கநாதன்,முணியன்,சரிதா,ரோகினி உள்ளிட்ட 7 பேர் மீதும் ரெங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் வீரத்தமிழன்,பூமாலை,உதயகுமார் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிந்து உதயகுமார்,வீரராஜன்,கார்த்தி உள்ளிட்டோரை போலீஸôர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.