மகளிர் கிரிக்கெட் ஐசிசி தரவரிசை:முதலிடத்தில் ஜுலன், மிதாலி
First Published : 11 Mar 2010 04:27:26 AM IST
Last Updated :
துபை, மார்ச் 10: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள மகளிர் ஒருதின கிரிக்கெட் போட்டியின் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ஜுலன் கோஸ்வாமி முதல் இடத்தில் உள்ளார். ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி 777 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் பேட்டிங் தரவரிசையில் 823 புள்ளிகளுடன் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார்.