மகளிர் தினத்தில் 115 வயது மூதாட்டிக்கு ரொக்கப் பரிசு
First Published : 11 Mar 2010 10:03:46 AM IST
Last Updated :
11 Mar 2010 10:32:07 AM IST
தஞ்சாவூர், மார்ச் 10: மகளிர் தினத்தையொட்டி 115 வயது மூதாட்டிக்கு ரூ. 10,000 ரொக்கப்ப பரிசை தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் அண்மையில் வழங்கினார்.தஞ்சாவூர் சீனிவாசபுரம் ராஜராஜசோழன் நகரில் வசிக்கும் அந்த 115 வயது மூதாட்டியின் பெயர் வேதவள்ளி. ரொக்கப்பரிசு பெற்ற அவர் அதிமுக பொதுச் செயலர் ஜெ. ஜெயலலிதாவிற்கும், ஆர். வைத்திலிங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலர் எம். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தொகுதி செயலர்கள் துரை. திருஞானம் (தஞ்சாவூர்), எம்.ஜி.எம். சுப்பிரமணியன் (திருவையாறு), ஒன்றியச் செயலர் துரை. வீரணன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர்கள் கு. பரசுராமன், வே. அறிவுடைநம்பி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.