மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு
First Published : 12 Mar 2010 01:29:46 AM IST
Last Updated :
புது தில்லி, மார்ச் 11: வியாழக்கிழமை மாலை நடைபெறுவதாக இருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்துடன் இணைந்து நடத்தப்பட இருந்த பொருளாதார விவகாரங்களுக்கான காபினட் கமிட்டி கூட்டமும், உள் கட்டமைப்பிற்கான காபினட் கமிட்டி கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டு, முறையாக அலுவல்கள் நடைபெறவில்லை. இதன் காரணமாக மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் எடுத்துக்கொள்ளபப்பட தாமதம் ஏற்பட்டு வியாழக்கிழமை மாலை விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அன்று மாலை நடைபெற இருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.