மருத்துவமனை தினவிழா
First Published : 11 Mar 2010 10:31:00 AM IST
Last Updated :
பழனி, மார்ச் 10: பழனி அருகே, ஆயக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை தினவிழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, தலைமை மருத்துவர் டாக்டர் சி. பூங்கொடி தலைமை வகித்தார். டாக்டர் வீரசேகரன் வரவேற்றார். மாவட்ட சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ. ஆசைத்தம்பி விழாவின் நோக்கம் பற்றி பேசினார். ஆயக்குடி பேரூராட்சித் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பழனி எம்எல்ஏ மா. அன்பழகன் கலந்துகொண்டு, கடந்த ஆண்டு சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவத் துறை அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் கலை நிகழ்ச்சி, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பழனி அன்னை பாரா மெடிக்கல் கல்லூரி நிர்வாக அலுவலர் பி. பிரேம்குமார், அமரபூண்டி சுகாதார ஆய்வாளர் வகாப் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆயக்குடி சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் தியாகேசன் நன்றி கூறினார்.