Saturday, July 31, 2010 4:06 AM IST
Click
திண்டுக்கல்
மாணவர்களுக்கு இலவச குறுந்தகடு வழங்கல்

First Published : 11 Mar 2010 10:30:38 AM IST


கொடைக்கானல்,​​ மார்ச் 10:​ அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது குறித்த குறுந்தகடு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி கொடைக்கானலில் நடைபெற்றது.

​ ​ ​ தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும்,​​ ஆசிரியர்களும் இணைந்து 10-வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது எப்படி என அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு வெற்றி நிச்சயம் என்ற குறுந்தகட்டை தயார் செய்து, கொடைக்கானல் தாலுகாவிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி கொடைக்கானல் ஆர்.டி.ஓ.​ அலுவலகத்தில் நடைபெற்றது.

​ ​ ​ இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ.​ வீரபாண்டியன் தலைமை வகித்து குறுந்தகடை வெளியிட்டார்.​ கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

​ ​ ​ அரசு ஊழியர் சங்கச் செயலர் ஜெயராஜ் வரவேற்றார் ஆசிரியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சூசைஜான் முன்னிலை வகித்தார்.

​ ​ ​ நிகழ்ச்சியில் சத்துணவு ஊழியர் சங்கத் துணைத் தலைவர் ஜெயசீலன்,​​ அரசு ஊழியர் சங்கத் தலைவர் சரவணன்,​​ நெடுஞ்சாலைத் துறை சங்கத் தலைவர் ரவிச்சந்திரன்,​​ பொருளாளர் முருகன்,​​ சத்துணவு சங்கத் துணைத் தலைவர் மணியன்,​​ ஆசிரியர்கள் தேடா செல்வம்,​​ ஹெப்சிபா,​​ தலைமை ஆசிரியர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்