Saturday, July 31, 2010 4:08 AM IST
Click
தற்போதைய செய்திகள்
லண்டனில் தீ விபத்து

First Published : 11 Mar 2010 05:29:13 PM IST


லண்டன்,மார்ச் 11: மத்திய லண்டன் பகுதியிலுள்ள கட்டடம் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கட்டடத்திலிருந்த உணவுவிடுதியும், அலுவலகமும் சேதமடைந்தன.

20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக லண்டன் தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் கட்டடத்தின் தரைத்தளம் மற்றும் முதல்தளம் ஆகியவை சேதமடைந்தன. இருப்பினும் உயிர்ச்சேதம் பற்றி தகவல் ஏதும் இல்லை.

தீ விபத்து காரணமாக லண்டனிலுள்ள பிரதான சாலைகள் சிலவற்றில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது கட்டடத்தில் மக்கள் யாரேனும் இருந்தனரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என அங்கிருந்து வரும்

செய்திகள் தெரிவித்தன.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்