Saturday, July 31, 2010 4:16 AM IST
Click
திண்டுக்கல்
வத்தலகுண்டு அருகே மனித நேய விழா

First Published : 08 Feb 2010 10:08:47 AM IST


வத்தலகுண்டு, பிப். 7: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மனித நேய திருவிழா நடந்தது. அதில் மதுரை மண்டல பேராயர் கலந்து கொண்டார்.

     வத்தலகுண்டு அருகே உள்ளது அந்தோணியார்பட்டி என்ற சின்னுபட்டி. இங்கு ஆண்டுதோறும் அந்தோணியார் திருவிழா 2 நாள் நடைபெறும். அதேபோல, இந்த ஆண்டும் நடந்தது. முதல் நாள் புனித அந்தோணியார் கோயிலில்  சிறப்புத் திருப்பலி நடந்தது.  பேராயர் பீட்டர் பெர்னாண்டோ திருப்பலியை நடந்தினர்.    இதில், வத்தலகுண்டு வட்டார அதிபர் ஜெயராஜ், அன்னை வேளாங்கண்ணி பள்ளி முதல்வர் ரெக்ஸ் பீட்டர், வத்தலகுண்டு திருச்சிலுவை கான்வென்ட் சகோதரிகள், அமலவை கான்வென்ட் சகோதரிகள், நெல்லூர் மரிய அன்னை கான்வென்ட் சகோதரிகள், ஊர்ப் பிரமுகர்கள் அருள்சாமி, மரியலூயிஸ், ஜான், பிரான்சிஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  பின்னர் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து மதத்தினரும் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தினர்.  

    புனித அந்தோணியாரின் தேர் ஊர்வலம் வந்தது.

2-ம் நாள் விளையாட்டுப் போட்டிகள், பொங்கல் நிகழ்ச்சி ஆகியவை நடந்தன.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்