Saturday, July 31, 2010 4:08 AM IST
Click
முக்கியச் செய்திகள்
வேலைவாய்ப்பற்ற உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை

First Published : 10 Mar 2010 11:44:16 AM IST


சிவகங்கை, மார்ச் 9:  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஒராண்டுக்கும் மேலான உடல் ஊனமுற்றோர் அனைவருக்கும 10 ஆண்டுகள் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் இப் புதிய திட்டம் தொடர்பாக சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்கும திட்டத்தில் பார்வையற்றோருக்கு வழங்கப்படுவதைப்போல் அனைத்து வகையான உடல் ஊனமுற்றோருக்கும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

2009-2010ம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிட்ப்பட்டுள்ளது. தகுதிகள்: பயன்தாரர் உடல் உறுப்பு நலன் குன்றியவராகவோ, செவிப்புலன் இழந்தவராகவோ, மனநலம் குன்றியவராகவோ இருந்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஒராண்டிற்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் அவசியம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது உச்ச வரம்பு 45. மற்றவர்களுக்கு 40. குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ. 50 ஆயிரம். பள்ளி, கல்லூரி மாணவர்களாக இருத்தல் கூடாது.

அரசுப் பணி மற்றும் சுயதொழிலில் ஈடுபட்டிருக்கக் கூடாது. தமிழகத்தில் குறைந்தது 15 ஆண்டுகள் வசித்து இருக்க வேணடும். இவற்றை உறுதி செய்து வருவாய்த்துறையினரிடம் ஒருங்கிணைந்த சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் 10-ம் வகுப்பு அல்லது அதற்கும் குறைவாக படித்தவர்களுக்கு மாதம் ரூ. 300, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ. 375, பட்டதாரிகளுக்கு ரூ. 450 மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும். தொடர்ந்து  10 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். ஏற்கெனவே பொது உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற்றாலும் எஞ்சிய ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

இதில் பயன்பெற விரும்புபவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்பபு  அலுவலகத்தை அணுகுமாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்