வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்
First Published : 11 Mar 2010 10:31:10 AM IST
Last Updated :
ஒட்டன்சத்திரம்,மார்ச் 10: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் விழிப்புணர்வுமுகாம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கனரா வங்கியின் மாவட்ட முன்னோடியும்,மேலாளருமான பி.ஜம்புநாதன் முகாமுக்குத் தலைமை வகித்துத் தொடக்கிவைத்தார். கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி டி. ஹெரால்டு ஜாக்ஸன் வரவேற்றார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.சாமுவேல் நாகேந்திரன்,மதுரை கதர் கிராமத் தொழில்கள் ஆணைய வளர்ச்சி அதிகாரி இரா.பெ. அசோகன், திண்டுக்கல் மாவட்டத் தொழில்மைய பொதுமேலாளர் சிவ. அய்யன்னன்,திண்டுக்கல் கதர் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குநர் எல். சுதாகர்,கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் ஜான்சன் கிறிஸ்டோபர்,கீரனூர் ஊராட்சிமன்றத் தலைவரும்,டி.டி.எப்.சி உறுப்பினருமான ஏ.எம். நாட்டுத்துரை,கல்லூரி இயந்திரவியல் துறை தலைவர் ஆர். நாச்சிமுத்து ஆகியோர் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் நோக்கங்களையும்,விழிப்புணர்வையும் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துக்கூறினர். மதுரை கதர் கிராமத் தொழில் ஆணைய வளர்ச்சி அதிகாரி சி. நீலமேகம் நன்றி கூறினார்.