மாணவர்களுக்கான கருத்தரங்கம்
First Published : 22 Apr 2009 02:25:25 AM IST
Last Updated :
HTML clipboard
புதுச்சேரி, ஏப். 21: புதுச்சேரியில் கற்பது தொடர்பான 3 நாட்கள் இலவசக்
கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுச்சேரி ஹோப் நிறுவனம், சைன்டாலஜி தன்னார்வலர் என்ற நிறுவனத்துடன் இணைந்து
கற்பது எப்படி என்று கற்றுக் கொள்ள இலவசக் கருத்தரங்கை எம்.ஜி.ஆர்.நகரில் நடத்தியது.
இந்த மூன்று நாள் கருத்தரங்கின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் படிப்பதிலும், புதிய விஷயங்களைக் கற்றுக்
கொள்வதிலும், அதில் அவர்களுக்கு ஏற்படும் தடைகள் என்னென்ன என்று கண்டறிந்து கொள்ள
சைன்டாலஜி தன்னார்வலர் நிறுவனத்தைச் சேர்ந்த எலோஜி, ராமசாமி, ஏழுமலை, பிரனேஷ்,
செல்வமணி, அருண் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
ஹோப் நிறுவன இயக்குனர் பெ.ஜோசப் விக்டர்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹோப் நிறுவன அலுவலர்கள் அருண், விக்னேஷ், விமலா
ஆகியோர் செய்திருந்தனர்.