கீழ்வெண்மணி தியாகிகள் தினம் - Dinamani - Tamil Daily News

கீழ்வெண்மணி தியாகிகள் தினம்

First Published : 27 December 2010 08:48 AM IST

திருக்கோவிலூர், டிச. 26: திருக்கோவிலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கீழ்வெண்மணி தியாகிகள் தின கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

 ÷1968-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் அரைபடி நெல் கூலியை உயர்த்திக் கேட்டதால் நில பிரபுத்துவ ஆதிக்க சக்தியினரால் ஒரே குடிசையில் வைத்து 44 விவசாயத் தொழிலாளர்களை தீயிட்டு கொளுத்திய சம்பவத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநிலக் குழு உறுப்பினர் பி.ஜெயராமன் தலைமை வகித்தார்.

 ÷இதில் அகில இந்திய துணைத் தலைவர் அ.ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.வி.ஸ்டாலின்மணி, மாவட்டத் தலைவர் ஆர்.ராமமூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் கே.கருணாமூர்த்தி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஆ.சௌரிராஜன், கல் உடைக்கும் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம்.ராஜேந்திரன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலர் பாரதிசுகுமாரன், மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலர் மகாதேவன், மாதர் சங்க மாவட்டச் செயலர் வளர்மதி உள்ளிட்டோர் பேசினர்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.