கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - Dinamani - Tamil Daily News

கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

First Published : 21 June 2013 05:26 AM IST

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்  என்றார் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11, 12-ம் வகுப்பு, வாழ்க்கை தொழில் கல்வி, ஐ.டி.ஐ, ஐ.டி.சி, பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள், இளங்கலை (மற்றும்) முதுகலைப் பட்டப்படிப்புகள், எம்.பில், ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2013- 2014 -ம் ஆண்டுக்கு கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமலும், மாணவ,  மாணவிகள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுக்கு  குறையாமல் பெற்று, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு பயில்பவர்கள் புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ம்ர்ம்ஹள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணைய முகவரியில் ஆன்லைன் மூலம் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை என்ற தலைப்பில் தேர்வு செய்து, அதில் கோரியுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், ஆன்லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம்  செய்து, அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி, வருமானம், கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி சான்று, வங்கி கணக்கு எண் ஆகிய  ஆவணங்களை இணைத்து, கையொப்பமிட்டு கல்வி நிலையங்களில் புதிய கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவத்தை 30.9.2013-க்குள்ளும், புதுப்பித்தல்  கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை 10.12.2013-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

சிறுபான்மையின மாணவ, மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட கல்வி  உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் பரிசீலித்து, விண்ணப்பங்களுக்குரிய கேட்புப் பட்டியலை புதியது 10.10.2013 தேதிக்குள், புதுப்பித்தல் 20.12.2013 தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கில் மின்னனு பரிவர்த்தனை மூலம் கல்வி உதவித் தொகை  வழங்கப்படுவதால், வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி கிளை குறியீடு 11 இலக்கு எண்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்றார் அவர்.

 

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.