சமூக தணிக்கைத் துறை அலுவலர்களுக்கு பயிற்சி - Dinamani - Tamil Daily News

சமூக தணிக்கைத் துறை அலுவலர்களுக்கு பயிற்சி

First Published : 13 September 2013 03:47 AM IST

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு சமூக தணிக்கைத் குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூர் வாலாஜாநகரம் சமுதாயக் கூடத்தில் ஊரக வளர்ச்சி பற்றி ஊராட்சித் துறை அலுவலர்களுக்கு நடைபெற்ற ஒரு நாள் பயிற்சிக்கு மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேலராஜ் தலைமை வகித்து பேசியது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் ஊரக மக்களின் நிரந்தரமான வாழ்வாதாரத்துக்கும், பாதுகாப்புக்கும் உறுதியளிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 18 வயதிற்கு மேற்பட்டோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100 நாட்களுக்கு குறையாமல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் வளர்ச்சித் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் சமூக தணிக்கை கோட்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பங்குதாரர்களின் பொறுப்புகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் திட்ட செயலாக்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பணித்தளத்தில் செய்ய வேண்டியவை மற்றும் பணித்தள நிர்வாகம், சமூக தணிக்கை நடைமுறையில் சமூக தணிக்கையில் மாவட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி) பங்கு, சமூக தணிக்கையில் கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி செயலரின் பங்கு, தணிக்கையில் ஏற்படும் இடர்பாடுகள், திட்டத்தின் மதிப்பீடுகள் மற்றும் காரணிகளுக்கு உள்ள தொடர்பு மற்றும் மேலாண்மை தகவல் முறை ஆகியவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

எனவே இப்பயிற்சியினை முழுமையாக கற்று வளர்ச்சித்துறையின் மூலம் மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை இயக்குநர் சடையப்பவிநாயகமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கல்யாணி, மாநில ஊரக வளர்ச்சி மையத்தின் விரிவுரையாளர் டாக்டர் வில்லி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவித்திட்ட அலுவலர் சூரியகுமார் மற்றும் வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.