குப்பையில்லா ஊராட்சிக்கு சுதந்திர தினத்தில் விருது - Dinamani - Tamil Daily News

குப்பையில்லா ஊராட்சிக்கு சுதந்திர தினத்தில் விருது

First Published : 06 June 2013 10:37 AM IST

கரூர் மாவட்டத்தில் குப்பைகளை சரியான முறையில் அகற்றி சுத்தமாக பராமரிக்கும் கிராம ஊராட்சிகளுக்கு வரும் சுதந்திரத் தினத்தன்று சிறப்பு விருது வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.
 கரூர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பங்கேற்புடன் குப்பைகளை அகற்றி சுற்றுப்புறத்தை சுத்தமாக்கும் இயக்கத்தை, கரூர் ஊராட்சி ஒன்றியம் காதப்பாறை ஊராட்சியில் புதன்கிழமை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:
 கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, குப்பைகளை அகற்றி சுகாதாரமான மாவட்டத்தை உருவாக்க இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் துப்புரவு பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்களிப்புடன் இந்தப் பணிகள் நடைபெறுகிறது.
 ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி அனைத்து தரப்பு மக்களின் ஒத்துழைப்புடன் இந்தப் பணி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் என்றார்.
 நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு ரப்பரிலான கையுறைகளை வழங்கினார். மேலும், காதப்பாறை ஊராட்சியில் உள்ள வீடுகளுக்குச் சென்று சுற்றுப்புறத்தை பாதுகாப்பதற்கான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
 இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கு. செல்வராசு, மக்கள் தொடர்பு அலுவலர் கு. தமிழ் செல்வராஜன், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) க. ரகு, கரூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், காதப்பாறை ஊராட்சித் தலைவர் எ. தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 முன்னதாக,கரூர் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
 

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.