சிறுதானிய சாகுபடி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு - Dinamani - Tamil Daily News

சிறுதானிய சாகுபடி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

First Published : 05 December 2013 01:22 AM IST


புதுக்கோட்டையை அடுத்த முத்துக்காடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள சிறுதானியப் பயிரை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன்

புதன்கிழமை நேரில் பார்வையிட்டார்.

மறைந்துபோன தானியங்களான குதிரைவாலி, வரகு, கேழ்வரகு, சோளம், கம்பு, சாமை, தினை போன்ற சிறுதானியங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பயிரிடப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் முத்துக்காடு கிராமத்தில் விவசாயி அப்பாவுபாலாண்டார் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள சிறுதானியங்களில் ஒன்றான குதிரைவாலி பயிரை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

குறைவான மழையிலேயே மானாவாரி நிலத்தில் சிறப்பாக 90 நாட்களில் வளரக்கூடிய பயிர் குதிரைவாலி.

மேலும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது 350 மி.மீ தண்ணீர் போதுமானது, பூச்சி நோய் தாக்குதல் இல்லாதது என்றும், ஒரு மழை பெய்த பின், 45 நாள்கள் வரை மழை இல்லாவிட்டாலும், தாக்குப் பிடித்து வளரும் தன்மை கொண்டது.

இதற்கு மண்ணுக்கும், இயற்கை சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் எந்த ரசாயண உரமும், பூச்சி மருந்தும் தேவையில்லை.

ஒரு ஏக்கரில் 800 கிலோ முதல் 1 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ குதிரைவாலி தானியம் தற்போது சந்தையில் ரூ. 15

முதல் ரூ. 20 வரை விலை போகின்றது.

உழவு, விதை, அறுவடை எனப் பார்த்தால் ஒரு ஏக்கர் குதிரைவாலி பயிரிடுவதற்கு மொத்தம் ரூ. 2500 செலவாகும். 90 நாட்களில் மானாவாரி நிலத்தில் நிகர லாபமாக ரூ. 11 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பெறமுடியும் எனவும், தனது 3 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள குதிரைவாலியை அரசாங்க (அடங்கல்) அ பதிவேட்டில் ஏற்றி விட்டனர். அதே போல் மற்ற விவசாய நிலங்களில் உள்ள சிறுதானியங்களையும் பதிவேட்டில் ஏற்ற வேண்டும் என  ஆட்சியரிடம் வலியுறுத்தினார் விவசாயி அப்பாவுபாலாண்டார்.

அன்னவாசல், அரிமளம், அண்டக்குளம் பகுதிகளில் உள்ள 150 விவசாயிகள் மத்தியில் குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானிய விதைகள் கொடுக்கப்பட்டு

பயிரிடப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் தெரிவித்தார் ரோஸ் தொண்டு நிறுவன நிர்வாகி ஆதப்பன்.

 

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.