அருவருப்பையூட்டும் குறவன்குறத்தி ஆட்டம்

First Published : 31 March 2014 12:28 AM IST

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரக் களத்தில் அரசியல் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள பழைமையான நாட்டுப்புறக் கலை என்றழைக்கப்படும் கரகாட்டத்தில், அருவருக்கச் செய்யும் வகையிலான குறவன் குறத்தி ஆட்டத்தை பொதுமக்கள் வெறுப்புடன் எதிர்கொள்கின்றனர்.

  பொதுவாகவே கிராமப்புற திருவிழாக்களில் கரகாட்டம் இடம்பெறுவது அருகிப்போய்விட்டது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு கிராமம் மட்டும் என்றில்லை திருச்சி நகரிலேயேகூட ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை திருவிழாக்களில் கரகாட்டம் இல்லாதவை மிகக்குறைவே.

  தலையில் கரகங்களை ஏற்றிக் கொண்டு தவில், நாகசுரம் இசைக்கேற்ப, கிராமப்புறப் பாடல்களுடன் இருந்த பழைமையான கலை கரகாட்டம். ஆனால், நாளடைவில் இந்தக் கலை, உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் வசனங்களுடன் ஆபாசம் மிகுந்ததாக மாறிப் போனது.

  விடியவிடிய நடத்தப்பட்ட இந்தக் கலை நிகழ்வைப் பார்க்க ஊர்தாண்டி சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்றுதிரும்பியவர்கள் ஏராளம். மோதல்கள் நடந்த வரலாறும் உண்டு.

  பெரும்பாலும் காவல்துறையினர் இப்போது அனுமதிப்பதில்லை. தெரியாமல் நடக்கும் இடங்களும் உண்டு.

  இந்த நிலையில்தான் தேர்தல் திருவிழாவுக்குள் புகுந்துள்ள இந்தக் கரகாட்டக் குழுவினர், மிகமோசமான நடன அசைவுகளை, பாடல்களைப் புகுத்தி பட்டப்பகலிலேயே நடுவீதிகளில் அரங்கேற்றுகின்றனர்.

  வேட்பாளர் திறந்த வேனில் சென்று கொண்டிருக்க சில மணித்துளிகளுக்கு  முன்பு அவருக்கு முன்பாகச் செல்லும் இக்குழுவினர் முச்சந்தி போன்ற ஓரிடத்தில் பெரும் கூட்டத்தைத் திரட்டுகின்றனர்.

  ஆண்கள், சிறுவர்கள் இதனைக் காண திரண்டாலும், அந்த வழியே செல்லும் பெண்கள் முகம் சுளித்துக் கொண்டு செல்வதைக் காண முடிகிறது. என்ன காரணத்தினாலோ தேர்தல் ஆணையமும், அலுவலர்களும் இவற்றைக் கண்டும் காணாததும்போல இருக்கின்றனர்.

  குறிப்பிட வேண்டிய இன்னொன்று. தமிழ்நாட்டிலுள்ள எல்லோருக்கும் அண்மைக்காலமாக கேரள செண்டை மேளத்தின் மீது அதீத பற்று ஏற்பட்டிருக்கிறது. திருவிழாக்களில் புகுந்த செண்டை மேளம், மெல்ல குடும்ப விழாக்களுக்குள்ளும் புகுந்து இப்போது அரசியல் நிகழ்வுகள், தேர்தல் திருவிழாக்குள்ளும் முழங்குகிறது.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.