இந்த நேரத்தின் தேவை!

பணவீக்கம் உயரும்போது விலைவாசி அதிகரிக்கும்; பணவீக்கம் சரியும்போது விலைவாசி குறையும் அல்லது கட்டுக்குள் இருக்கும்.

பணவீக்கம் உயரும்போது விலைவாசி அதிகரிக்கும்; பணவீக்கம் சரியும்போது விலைவாசி குறையும் அல்லது கட்டுக்குள் இருக்கும். இதுதான் நியதி. இதனைப் பற்றிக் கூறும்போது பொருளாதார அறிஞர்கள் "கையில் பணம் எடுத்துச் சென்று, துணிப்பை நிறைய பொருள்கள் வாங்கினால், பணவீக்கம் குறைவு என்று பொருள்; துணிப்பையில் பணம் எடுத்துச் சென்று கையில் பொருள்கள் வாங்கினால், பணவீக்கம் உயர்ந்துவிட்டது என்று பொருள்' என்று நகைச்சுவையாகக் கூறுவார்கள்.
ரிசர்வ் வங்கி கவர்னர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கடன் கொள்கையை அறிவிக்கிறார். அது சமயம் அவர் என்ன சொல்கிறார்? ரெப்போ ரேட்டை குறைக்க வேண்டுமானால் பணவீக்கம் கட்டுக்குள் இருந்தால்தான் அது சாத்தியம் என்கிறார். அதாவது, ரெப்போ ரெட் (ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கு உரிய வட்டி விகிதம்) குறைக்கப்பட்டால், வணிக வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீட்டுக்கடன், வாகனக் கடன், தனி நபர் கடன், சிறு தொழில் கடன், பெரும் நிறுவனங்களுக்கு வழங்கும் கடன் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியும்.
வட்டி குறைக்கப்பட்டால், வாடிக்கையாளர்கள் வங்கியில் கடன் வாங்கி தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவார்கள். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கூடவே, விலைவாசியும் அதிகரிக்கும் என்பதுதான் ரிசர்வ் வங்கி கவர்னரின் கூற்றுக்கான பொருள்.
எனவே, விலைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால், வட்டி விகிதத்தை அடிக்கடி குறைக்கக் கூடாது என்பது உலகெங்கிலும் உள்ள ரிசர்வ் வங்கி கவர்னர்களின் அணுகுமுறையாகும். அப்படியானால், பணவீக்கம் குறையும்போது விலைவாசி கட்டுக்குள் இருக்க வேண்டும் அல்லவா? அப்படி நிகழ்கிறதா?
சில்லறை விலைகள் சார்ந்த பணவீக்கம் 2017 மே மாதத்தில் 2.2 சதவீதம் மட்டுமே. இது மிக குறைந்த அளவிலான பணவீக்கம்தான். இந்தியாவில், எப்போதாவது, அபூர்வமாகத்தான் பணவீக்கம் 2.5 சதவீதமாக சரியும். கடந்த 20 ஆண்டுகளில், 12 மாதங்களில் மட்டுமே, சில்லறை விலையிலான பணவீக்கம் 2.5 சதவீதமாக குறைந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு பார்த்தால், விலைகள் தற்போது கணிசமாகக் குறைந்திருக்க வேண்டும். மக்களின் "வாங்கும் சக்தி' (டன்ழ்ஸ்ரீட்ஹள்ண்ய்ஞ் டர்ஜ்ங்ழ்) அதிகரித்திருக்க வேண்டும். நமது பணப்பை நிரம்பியிருக்க வேண்டும். அப்படி நடந்ததா?
எதுவும் நடக்கவில்லையே. அதற்கு என்ன காரணம்?
பொருளாதார அடிப்படையில் அதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று, அனைத்திந்திய சில்லறை அடிப்படையிலான விலைகள் மற்றும் சேவைக் கட்டணங்கள் (ஸ்ரீர்ய்ள்ன்ம்ங்ழ் ல்ழ்ண்ஸ்ரீங் ண்ய்க்ங்ஷ்) பற்றிய தகவல்களை மாநில வாரியாக நகரங்கள் மற்றும் கிராமங்களில் திரட்டுகிறார்கள்.
பிறகு அவை ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் கூட்டப்படுகிறது. ஒட்டுமொத்த கூட்டுத் தொகையில் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பங்குத் தொகை (ஜ்ங்ண்ஞ்ட்ற்ஹஞ்ங்) சரிசமமாக இருக்காது. அந்தந்த மாநிலத்தினரின் நுகர்வுத் தன்மை மற்றும் செலவு செய்யும் முறைக்கேற்ப மாறுபடும்.
இதனால் "வெயிட்டேஜ்' மாறுகிறது. மகாராஷ்டிரத்தில் 13.2 சதவீதம் வெயிட்டேஜ். காஷ்மீரில் 0.94 சதவீதம்; புதுச்சேரியில் 0.17 சதவீதம்; தமிழ்நாட்டில் 7.3 சதவீதம் வெயிட்டேஜ். இதனால் அந்தந்த மாநிலங்களின் விலைகள் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இரண்டாவது முக்கிய காரணம், பொதுமக்கள் பயன்படுத்துகிற நுகர்பொருள்களின் பட்டியல் (இர்ய்ள்ன்ம்ல்ற்ண்ர்ய் ஆஹள்ந்ங்ற்) மாறுகிறது. மக்கள் நூற்றுக்கணக்கான பொருள்களைப் பயன்படுத்தினாலும், அவற்றில் சிலவற்றை மட்டுமே அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
உதாரணமாக, உணவுப் பண்டங்களை அதிகமாக பயன்படுத்துவதுபோல், தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களை அதிகம் பயன்படுத்துவதில்லை. அத்தகைய பொருள்கள் அடங்கிய பட்டியலைத்தான் "நுகர்பொருள் பட்டியல்' என்கிறார்கள்.
இந்த பொருள்களுக்கும் தனித்தனியாக பங்கீடு (ஜ்ங்ண்ஞ்ட்ற்ஹஞ்ங்) தரப்படுகிறது. உணவுப் பண்டங்கள் மற்றும் பானங்களுக்கு வெயிட்டேஜ் 45.86 சதவீதம்; வெற்றிலைப் பாக்கு, புகையிலைக்கு 2.38 சதவீதம்; ஆடைகள், துணிகள், காலணிகள் ஆகியவற்றுக்கு 6.53 சதவீதம்; வீட்டு வசதிக்கு 10.07 சதவீதம், எரிபொருள் மற்றும் விளக்கு வசதிக்கு 6.84 சதவீதம்; மருத்துவத்திற்கு 5.89 சதவீதம்; போக்குவரத்துக்கு 8.59 சதவீதம்; பொழுதுபோக்கு அம்சங்களுக்கு 1.68 சதவீதம்; கல்விக்கு 4.47 சதவீதம்; தனிப்பட்ட சொந்த தேவைகளுக்கு 3.89 சதவீதம்; வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 3.8 சதவீதம் என அது பதினோரு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
இது தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (என்.எஸ்.எஸ்.ஓ.) மேற்கொண்ட 68}ஆவது சுற்று ஆய்வின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது ஆகும். இந்த 68}ஆவது சுற்று ஆய்வு 2011 } 12ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்
பிடத்தக்கது.
இந்தியப் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவைச்சேர்ந்தவர்கள். எனவே அவர்களது செலவில் பெரும்பகுதி உணவுப் பண்டங்களுக்குகே போகிறது. குறைந்த அளவு செலவுதான் சேவைக் கட்டணங்களுக்குப் போகிறது.
அதேநேரம், சேவைக்கட்டணங்கள் பொருள்களின் விலையைவிட அதிகம் என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் அதிக வருவாய் ஈட்டுபவர்கள் தங்கள் வருவாயில் பெரும் பகுதியை சேவைக் கட்டணங்களுக்கும், குறைந்த பகுதியை உணவுப் பண்டங்களுக்கும் செலவு செய்கிறார்கள் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதே.
அனைத்திந்திய அளவில் கடந்த ஆண்டு பருவமழை சிறப்பாக இருந்தது. இதன் பயனாக பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விளைச்சல் அமோகமாக இருந்துள்ளது. முக்கியமாக, துவரம் பருப்பு, உளுந்து, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றின் வரத்து சந்தையில் அதிகரித்துள்ளது.
அதே சமயம், விவசாயிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விலை கிடைக்கவில்லை. அவர்களது வருமானம் வீழ்ச்சி அடைந்தது. அதனால் அவர்கள் அவதிக்கு உள்ளானார்கள்.
ஆண்டுதோறும், ஏப்ரல் } மே மாதங்களில் அனைத்திந்திய அடிப்படையில் உணவுப் பண்டங்களின் விலை உயர்வது வாடிக்கைதான். ஆனால், இந்த ஆண்டு அனைத்திந்திய அடிப்படையில் ஏப்ரல் } மே மாதங்களில் குறைந்தபட்சம் உணவுப் பண்டங்களின் விலை கட்டுக்குள்
இருந்தது.
2016}ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017}ஆம் ஆண்டு மே மாதம், சில்லறை அடிப்படையிலான காய்கறிகள் விலை 13 சதவீதம் குறைவாக இருந்தது. பருப்பு வகைகளின் விலை 15 சதவீதம் குறைவாகவும், பழங்கள் மற்றும் எண்ணெய் வகை விலை 1.2 சதவீதம் அதிகரித்தும்
இருந்தது.
மத்திய அரசும் பாரத ரிசர்வ் வங்கியும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொண்ட நிர்வாக மற்றும்
நிதிக்கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் பயன் அளித்துள்ளன என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.
அதேநேரம், பணவீக்கம் குறைந்துள்ளபோதிலும், பெரும்பாலான நடுத்தர மக்களைப் பொருத்தவரை, விலைவாசி போதிய அளவு குறையவில்லை என்கிற உணர்வுதான் அவர்களிடம் உள்ளது.
இதற்கு காரணம் மேற்கூறியபடி
மாநிலத்துக்கு மாநிலம் பணவீக்க
விகிதம் மாறுபடுவதும், கணக்கீட்டு முறையில் பொருள்களுக்குப் பொருள் தரப்படும் வெயிட்டேஜ் வித்தியாசப்படுவதும்தான்.
குறிப்பாக உணவுப் பண்டங்களின் விலை அவ்வப்போது உள்ளூர் சந்தையில் மாறிக்கொண்டே இருப்பதும் முக்கிய காரணம் என்பது வெளிப்படை. இவை அனைத்தும் ஓரளவு புள்ளிவிவரங்கள் சார்ந்தவையாகவும் உள்ளன.
மக்களுக்கு உடனடி நிவாரணமும், நீடித்த நிவாரணமும் கிடைக்க வேண்டுமானால், உணவுப் பண்டங்களின் பொதுவிநியோக முறை சீரமைக்கப்படுவதுடன், அது முறையாக கண்காணிக்கப்படவும் வேண்டும்.
அனைத்துவகை உணவுப் பண்டங்களுக்கும், அத்தியாவசியப் பண்டங்களுக்கும் ஆன்லைன் வர்த்தக செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பதுக்கல், கள்ளச்சந்தை ஆகியவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, பணவீக்கம் குறைப்பு என்பது
ஏட்டளவில் நின்றுவிடாமல், வீட்டிலும் பிரதிபலிக்கும் வகையில், கணக்கெடுப்பு முறைகளை விஞ்ஞான ரீதியில் அமைத்து அதனை மேலும் மேம்படுத்திட வேண்டும். இதுவே இந்த நேரத்தின் தலையாய தேவையாகும்.

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com