அறிவியல் நோக்கும் ஆய்வு நோக்கும்

நமது முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு அறிவியல் பால் கொண்ட ஈடுபாடும் -இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கு அவர் எடுத்துக் கொண்ட அக்கறையும் - முயற்சியும் யாவரும் அறிந்ததே.

நமது முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு அறிவியல் பால் கொண்ட ஈடுபாடும் -இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கு அவர் எடுத்துக் கொண்ட அக்கறையும் - முயற்சியும் யாவரும் அறிந்ததே.
இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் , இந்திய தேசிய வான்வெளி ஆய்வு கமிட்டி ,(பின்னாளில் இது ஐ.எஸ்.ஆர்.ஓ. என மாற்றப் பட்டது), பாபா அணு ஆராய்ச்சி நிலையம், அகில இந்திய மருத்துவ கல்வி கழகம், ஐ.ஐ.டி., மேலும் பல அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் அவர் காலத்தில் உருவாக்கப்பட்டன.
அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி- தொழில் நுட்பம் - என வளர்ச்சிக்கு வித்திடும் விஷயங்களை மட்டுமின்றி , மக்களது சிந்தைனையிலும் - பொது நோக்கிலும், ள்ஸ்ரீண்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீ ற்ங்ம்ல்ங்ழ் இருக்க வேண்டும் என விரும்பினார். ள்ஸ்ரீண்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீ ற்ங்ம்ல்ங்ழ் ள்ட்ர்ன்ப்க் க்ஷங்ஸ்ரீர்ம்ங் ற்ட்ங் ஸ்ரீட்ஹழ்ஹஸ்ரீற்ங்ழ் ர்ச் ஐய்க்ண்ஹய்ள் -என்றார்.
ள்ஸ்ரீண்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீ ற்ங்ம்ல்ங்ழ் என்பது - வெறும் அறிவியல் நோக்கு என்பதாக மட்டும் பொருள் கொள்ள முடியாது - அதையும் தாண்டி - எல்லாவற்றையும் ஆய்வுக்கும் - கேள்விக்கும் உட்படுத்தும் திறம்- ஆக்கப்பூர்வ சிந்தனை- நிர்தாட்சணயப் பார்வை போன்றவற்றை உள்ளடக்கிய - ஆய்வு நோக்கு என்று சொல்லலாம்.
உலகில் நிகழ்ந்த - நிகழ்ந்து கொண்டிருக்கும் நல்ல மாற்றங்கள் அனைத்துக்கும் காரணமாக அமைவது இந்த அறிவு சார்ந்த ஆய்வு நோக்குதான். இது வெறும் அறிவியல் தொடர்பான ஒன்று மட்டுமல்ல - கல்வெட்டு - செப்புச்சிலைகள் - நாணயங்கள்- இலக்கியம் - இயற்கை , சரித்திரம், பொருளாதாரம், விவசாயம் , என எல்லாவற்றோடும் கூட தொடர்புடையது.
நேரு சொன்னது போல, ஆய்வு குணம் என்பது நம் நாட்டின் பெருங்குணமாக மாற வேண்டும் அறிவியல் விஞ்ஞானிகள் - அறிவுஜீவிகள்- தலைவர்கள் - ஊடகங்கள் என யாவருக்கும் இத்தகைய சூழலை உருவாக்கும் கடமை இருந்தாலும், முக்கிய பங்கு என்னவோ பள்ளிக்கூடம் - ஆசிரியர் - பெற்றோர் என இவர்களிடத்தில்தான் இருக்கிறது.
பள்ளிக்கு வெளியே அறிவு சார்ந்த விவாதங்களையும் - நிகழ்ச்சிகளையும், அறிவுஜீவிகளையும் முன்னிறுத்துவதாலும், மூளையை மழுங்கடிக்கும் விஷயங்களை தவிர்ப்பதன் மூலமும், ஊடகங்களும் இதில் பங்கு வகிக்க முடியும்.
இப்போது,வெகு காலத்துக்குப் பிறகு, நமது கல்வித் துறை நல்ல திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுகின்றது. பத்திரிகைகளும் - கல்வித் துறை சார்ந்தவர்களும் பாராட்டும் விதமாக செயல்படுகிறது. ஆனால், இது மாணவர்கள் மக்களிடையே ஆய்வு நோக்கினை உருவாக்கப் போதுமானதாக இருக்கிறதா?
புதிய பள்ளிக்கூடங்கள் திறத்தல் - புது ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிகளுக்கு ஊக்கப் பரிசுகள் - நல்லாசிரியர்களை அடையாளம் கண்டு கெளரவப்படுத்தல் - கணினி வழியில் கல்வி -சிறார்கள் படிக்க அட்டைகள் - தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி - புத்தகக் கண்காட்சி - திறனறிவு - போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் முனைப்பு காட்டுவது -நூல் நிலையங்கள் - தனியார் நூலகங்களுக்கு பராமரிப்பு நிதி வழங்குவது-நடமாடும் நூல் நிலையங்கள் என்பன போன்ற நல்ல பல அறிவிப்புகள் இருப்பினும், ஆய்வு நோக்கினை வளர்க்கும் விதமாக திட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படவில்லை.
இந்த அறிவிப்புகளில், பலவித போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் முயற்சிகள் முக்கியப்படுத்தப்படுகின்றன. இவை அவசியமானதாக இருப்பினும், அடிப்படையில், மாறுதல்கள் கொண்டு வரப்பப்பட வேண்டும் - குறிப்பாக கல்வித்திட்டம், அறிவியல் நோக்கு- ஆராய்ச்சி நோக்கு கொண்டதாக அமைக்கப் பட வேண்டும்.
மாணவர்களிடையே எந்த ஒன்றையும் கேள்விக்குட்படுத்தும் மனப்பாங்கினை ஏறபடுத்துதல்,அவர்களிடையே சிந்திக்கும் திறமையையும்- தர்க்க அறிவையும் மேம்படுத்துதல். மூட நம்பிக்கைகளில் இருந்து வெளிக்கொணருதல், எந்த ஒன்றையும் திறந்த மனதுடன் ஆய்ந்து நோக்கும் பண்பினை வளர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
இவை போன்றவற்றை வளர்க்க வேண்டிய கல்வி அமைப்பு, நமது மாணவர்களின் மனப்பாடத் திறமையை சோதிப்பதாகவும், ஒரு கேள்விக்கு குறிப்பிட்ட பதில் மட்டுமே எழுத வேண்டிய பயிற்சியைத் தருவதாகவும்தான் அமைந்துள்ளது.
ஆசிரியர்கள் பலர் காலக் கெடுவுக்குள் பாடத்திட்டத்தை முடிப்பதையே நோக்கமாக கருதும் சூழல், கணிதம்கூட மனப்பாடம் செய்யப்படும் அளவில்தான் நமது மதிப்பெண் சார்ந்த கல்வி முறை இருக்கிறது என்பதே உண்மை.
இத்தகைய சூழலுக்கு பொருந்திவிட்ட பெற்றோர் - ஆசிரியர் - மாணவர்களை வேறு திசைக்கு இட்டு செல்லுதல் பெரும் சவாலாகவே அமையும். ஆனால் அரசு முயற்சித்தால் அது இயலாத ஒன்று அல்ல.
தொழில் துறையில், பெரு நிறுவனங்கள் தமது சமூக அக்கறையையும் பொறுப்பையும் வெளிப்படுத்தும் விதமாக, தங்களது, ஆண்டு செலவினத் திட்டங்களில், ஏதேனும் சில சமூக நலம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும்.
அந்த முன்மாதிரியில் ,அரசு, தனியார் கல்லூரிகளின் பங்களிப்பை கட்டாயப்
படுத்தலாம் கல்வித்துறையில், நல்ல லாபம் ஈட்டும் தனியார் கல்லூரிகள், தங்களது நாற்றங்காலான பள்ளிக்கூடங்களை
செம்மை படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடச் செய்ய வேண்டும்.
உதாரணமாக ஒவ்வொரு வசதி மிக்க கல்லூரியும், சில மாவட்டங்களை தேர்ந்தெடுத்து, அங்குள்ள பள்ளிகளிலும், பொது வெளிகளிலும், அறிவியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்தரங்கங்கள், வினாவிடை, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் போன்றவற்றை தொடர்ந்து நடத்தலாம்.
இவை போன்ற நடவடிக்கைகள், மக்
களின் - குறிப்பாக மாணவர்களின் ஆய்வு மற்றும் சிந்தனைத் திறன் உயரவும் - நாட்டின் வளம் பெருகவும் நிச்சயம்
உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com