செல்லிடப்பேசி: கவனம் தேவை

இன்று இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரது கையிலும் செல்லிடப்பேசி உள்ளது. செல்லிடப்பேசிகள் ஒருவரை தொடர்பு கொண்டு பேச மட்டும் பயன்படுவதில்லை. அதற்கும் மேலாக பல தகவல்களை

இன்று இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரது கையிலும் செல்லிடப்பேசி உள்ளது. செல்லிடப்பேசிகள் ஒருவரை தொடர்பு கொண்டு பேச மட்டும் பயன்படுவதில்லை. அதற்கும் மேலாக பல தகவல்களை விரல் நுனியில் பெற முடிகிறது.
அதே நேரத்தில் இந்த செல்லிடப்பேசியே பல தவறுகள் நிகழவும் காரணமாக அமைகிறது. இன்று இணையத்தில் நடைபெறும் சைபர் குற்றங்களுக்கு அடுத்தபடியாக அதிகம் நடைபெறுவது செல்லிடப்பேசி குற்றம் தான்.
முகம் தெரியாத யாரோ ஒருவர் உங்கள் எண்ணுக்கு அழைத்து மிரட்டினாலோ, ஆபாசமாக பேசினாலோ முதலில் உங்களுக்கு சேவை வழங்கும் செல்லிடப்பேசி நிறுவனங்களிடம் புகார் செய்ய வேண்டும். அதன்பிறகும் அப்படிப்பட்ட அழைப்புகள் வந்தால் போலீஸில் புகார் அளிக்க வேண்டும்.
சில சமயம் தவறுதலாக அழைத்த மர்ம நபர் உங்களைப் பற்றிய விவரங்களைக் கேட்கலாம். அவர்களிடம் எந்த பதிலும் அளிக்காதீர்கள். அதுபோன்ற அழைப்புகளை தொடர்ந்து நிராகரித்து விட்டு அமைதியாக இருங்கள். தானாகவே அடங்கிவிடுவார்கள்.
இப்படி எந்த சுமுக வழியும் ஒத்துவரவில்லை என்றால், உங்கள் செல்லின் வாய்ஸ் மெசேஜில் பின்வருமாறு ஒரு மெசேஸை போட்டுவிடவும்.
அதாவது 'உங்கள் அழைப்பை தற்போது ஏற்க இயலாது. அதனால் நீங்கள் சொல்ல விரும்புவதை பீப் ஒலிக்குப் பிறகு பதிவு செய்யவும். இல்லையெனில் இது தொந்தரவு தரும் அழைப்பாக கருதப்பட்டு உங்கள் எண் கண்காணிக்கப்படும்' என்பதுதான் அந்த மெசேஜ் ஆகும். இது நிச்சயம் உங்களுக்கு பலன் தரும் என செல்லிடப்பேசி சேவை வழங்குபவர்கள் சொல்கிறார்கள்.
பல டெலி மார்கெட்டிங் நிறுவனங்கள் பிரிடிசிட்டீவ் டயலிங் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.
அதாவது அந்த நிறுவனங்களில் உள்ள விற்பனை பிரதிநிதிகள் உங்கள் செல்லிடப்பேசி எண்ணை கணினியுடன் இணைத்துவிடுவார்கள். அவை தானாகவே உங்கள் எண்ணை அழைக்கும். நீங்கள் அதை எடுத்துப் பேசும் நேரத்தில், அந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருந்தால் உங்களுக்கு பதிலளிப்பர்.
இல்லையென்றால் எதிர்புறம் அமைதியாக இருக்கும். இந்த வகையான அழைப்புகளை அபாண்டன்ட் அழைப்புகள் என்று வகைப்படுத்துவார்கள். தொடர்ந்து இத்தகைய அழைப்புகள் வந்தால் அந்த நிறுவனத்தின் மீது புகார் அளிக்கலாம்.
இது ஒருவகையான செல்லிடப்பேசி குற்றம் என்றால், தற்போது பரவலாக அனைவரும் பயன்படுத்தும் வைபை பயன்படுத்தியும் குற்றங்கள் நடக்கின்றன.
உதாரணமாக, நம்மில் பலரும் பொது இடங்களில் வைபை வசதி கிடைக்கிறதா என்று ஆர்வத்துடன் பார்க்கிறோம். அது கிடைத்தால் சந்தோஷத்துடன் பயன்படுத்த தொடங்குகிறோம். ஆனால் பொது வைபை வசதியை பயன்படுத்துவதில் கொஞ்சம் கவனம் வேண்டும்.
காரணம் பொது இடங்களில் கிடைக்கும் வைபை யை பயன்படுத்தும்போது தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இதனால் நமது செல்லிடப்பேசியில் உள்ள படங்கள், வங்கிக் கணக்குகளின் தகவல்களை எளிதாக ஹேக்கர்கள் திருடிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
பொதுஇடங்களில் நாம் பயன்படுத்தும் வைபை பாதுகாப்பானது என்றால் அதில் பாஸ்வேர்டு போன்ற தகவல்கள் கேட்கப்படும். பாஸ்வேர்டு பயன்படுத்தும்போது செய்திகள், பாதுகாப்பான மறைக்கப்பட்ட என்ஸ்கிரிப்ட் தகவல்களாக இருக்கும். wap அல்லது wap  2 பாஸ்வேர்டு கேட்கவில்லை என்றால், பாதுகாப்பில்லை என்று அர்த்தம்.
நாம் பயன்படுத்தும் இணையதளங்கள் பாதுகாப்பானதாக இருந்தால் அதன் முகவரியில்(url address) https எனக் காட்டும்.
அதற்கு நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசியை சரியான கால இடைவெளிகளில் அப்டேட் செய்ய வேண்டும். அதன்மூலம் தகவல்களைத் திருடுவது கடினமாகும்.
பொதுஇடங்களில் ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் வங்கிக் கணக்குகள் திருடப்படுவதைத் தடுக்கலாம்.
பொது இடங்களில் வைபை பயன்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டால் vpn (virtual private network) இணைப்பை பயன்படுத்தலாம். அதன் மூலம் நம்முடைய தகவல்கள் encryption   செய்யப்பட்டு பாதுகாக்கப்படும்.
பொதுஇடங்களில் வைபையை தேவையற்ற போது தவிர்க்கலாம்.
ஒருவேளை பொது வைபையில் நீங்கள் இணைந்தால் உங்கள் செல்லிடப்பேசியில் லாக் அவுட் செய்யாமல் வைத்திருக்கும் மின்னஞ்சல், பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளில் இருந்து தகவல்கள் திருடப்படலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருங்கள்.
இதேபோல் செல்லிடப்பேசியை பழுது நீக்க கொடுக்கும் போதும் அதில் இருக்கும் மெமரிகார்டை எடுத்துவிட்டுதான் கொடுக்க வேண்டும். ஒருவேளை நாம் மெமரிகார்டை எடுக்காமல் கொடுத்தால் அதில் இருக்கும் முக்கிய தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது.
ஒருசிலர் நாம் தான் மெமரிகார்டில் இருக்கும் படங்கள், விடியோ படங்கள் உள்ளிட்டவற்றை அழித்துவிட்டோமே அப்புறம் எப்படி தகவல்களை திருட முடியும் என்று நினைக்கலாம். மொபைல் ரெக்கவரி என்ற அப்ளிகேஷன் என்று ஒன்று உள்ளது.
இந்த அப்ளிகேஷனை கணினியில் பதிவிறக்கம் செய்து கொண்டு விட்டால் மெமரி கார்டில் அழிந்த தகவல்களை மீண்டும் எடுக்க முடியும்.
எனவே செல்லிடப்பேசி போன்ற தொழில்நுட்பத்தை நுட்பமாகப் பயன்படுத்தினால் அதன் மூலம் நாம் பெறும் பயன்கள் ஏராளம். அதேசமயம் செல்லிடப்பேசி குறித்த போதிய அறிவு இல்லாதவர்கள் அதனை தகவல்கள் (பேச மட்டும்) பரிமாற மட்டும் பயன்படுத்திக் கொண்டால் நலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com