விவசாயம் ஏற்றம் பெற வேண்டும்

இந்திய நாட்டையும் விவசாயத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகைக் கொண்ட நாடாக இருந்தும்

இந்திய நாட்டையும் விவசாயத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகைக் கொண்ட நாடாக இருந்தும், அதிகரித்துவரும் உணவுத் தேவையை ஈடுகட்டும் அளவிற்கு ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தியைப் பெருக்கி இந்நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும் பொருளாதார நிலைத்தன்மைக்கும் பெரும் பங்காற்றி வருகிறது விவசாயம்.
2015-16ஆம் நிதியாண்டில் நமது நாட்டின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தி - அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவை உட்பட - 25.316 கோடி டன். இந்த உற்பத்தி அளவு 2014-15ஆம் ஆண்டு உற்பத்தியை விட 11.4 லட்சம் டன் அதிகம். பருவ மழை போதுமான அளவிற்கு பெய்யாமை, பாசன அணைகளில் நீர் அளவு குறைந்த நிலையிலும் உற்பத்திப் பெருக்கத்தை நம் நாடு எட்டியுள்ளது.
2016-17ஆம் நிதியாண்டில் ஒட்டு மொத்த உணவு உற்பத்தி 27.01 கோடி டன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் கூறியிருந்தார். வட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்துள்ளதால் வேளாண் அமைச்சர் நிர்ணயித்த இலக்கை விவசாய உற்பத்தி எட்டியுள்ளது.
பருப்புத் தேவையை நிறைவு செய்ய இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நம் நாடு, கடந்த நிதியாண்டில் அதற்கு முந்தைய ஆண்டைவிட 3.5 லட்சம் டன் கூடுதலாக பருப்பு உற்பத்தியை செய்து இறக்குமதி சுமையை குறைத்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இரண்டு கோடி டன் கூடுதலாக உணவு உற்பத்தி ஆகியிருப்பது சாதனை. இச்சாதனை யாரால் சாத்தியமாயிற்று?
இச்சாதனையை படைத்த விவசாயிகள் பெற்ற பலன் என்ன என்பதை சீர்த்தூக்கிப் பார்த்தால், இந்நாடு கண்ட சாதனை விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ள அவலத்தைக் காணலாம்.
எடுத்துக்காட்டாக: 1. உத்தரப் பிரதேச மாநிலம்தான் இந்தியாவின் மொத்த கோதுமை விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை விளைவித்துத் தருகிறது. இந்த ஆண்டும் கோதுமை விளைச்சல் அபரிமிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், கோதுமையின் விலையோ வீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,830-ஆக இருந்தது ரூ.1,745-ஆக குறைந்துள்ளது. இது மேலும் குறையும் என்று சந்தைத் தகவல்கள் கூறும் நிலையில் கோதுமை விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஏனெனில் உத்தரப் பிரதேச அரசும், இந்திய உணவுக் கழகமும் அம்மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 4 விழுக்காடு அளவிற்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.
இந்த அளவிற்கு குறைவாக உத்தரப் பிரதேச மாநில அரசு கொள்முதல் செய்வதற்குக் காரணம் என்ன? ஒன்று சேர்ந்து விளைபொருட்களை விலையைக் குறைத்து வாங்கும் வணிகக் குழுவினருக்கு (இஹழ்ற்ங்ப்) உதவ தனது கொள்
முதலை குறைத்து எடுக்கிறது உத்தரப் பிரதேச அரசு என்று அங்கு இயங்கிவரும் சிறு விவசாயிகள் வணிகக் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
கோதுமை உற்பத்தி அதிகரிக்கும் என்று அறிந்தும் கடந்த பிப்ரவரி மாதம் கோதுமை இறக்குமதி மீது விதிக்கப்படும் 10 விழுக்காடு தீர்வையை முற்றிலுமாக நீக்கியது இந்திய அரசு. இதைப் பயன்படுத்தி இறக்குமதியாளர்கள் அயல் நாட்டில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்துவிட்டனர். இப்போது மீண்டும் இறக்குமதித் தீர்வையை விதிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது குதிரை ஓடிவிட்டப் பிறகு லாயத்தைப் பூட்டு
கிறது.
2. ஒன்றாய் இருந்து இரண்டாய் ஆன தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் காய்ந்த மிளகாய் (தங்க் இட்ண்ப்ப்ண்) அபரிமிதமாக விளைந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்து விளைவித்த விவசாயிகளுக்கு மிளகாய் விலை பாதியாக குறைந்துவிட்டது என்று செய்தி இடி போல இறங்கியுள்ளது.
கடந்த ஆண்டு குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.13,600 வரை விற்றது மிளகாய். இப்போது ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்று வணிகர்கள் கூறிவிட்டதால், விவசாயிகள் செய்வதறியாது திகைத்து, கோபத்தில் இருக்கின்றனர். ஏக்கருக்கு 20 முதல் 25 குவிண்டால் வரை விளைந்தும், எதிர்பார்த்த விலை கிடைக்காத காரணத்தால் துவண்டுபோயுள்ளனர்.
3. காய்ந்த மிளகாய் கதை இப்படியென்றால் பச்சை மிளகாய் கதை இன்னும் காரமாக இருக்கிறது. மராட்டிய மாநிலத்தின் வாஷி சந்தையில் இருந்து ஏற்றுமதியான 6 டன் பச்சை மிளகாயை சவூதி அரபிய நாடு திருப்பி அனுப்பிவிட்டது.
காரணம் ஏற்கத்தக்க அளவைவிட அதிகமான பூச்சி மருந்து கலப்பு மிளகாயில் இருந்தது. 0.05 விழுக்காடு வரை இருக்கலாம் என்பது நிபந்தனை. இருந்ததோ 1.0 விழுக்காடு. சவூதி அரபியாவின் நடவடிக்கையால் வாஷி சந்தையில் இயங்கிவரும் வேளாண் விளைபொருள் சந்தைபடுத்தல் குழு (அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங் டழ்ர்க்ன்ஸ்ரீங் ஙஹழ்ந்ங்ற்ண்ய்ஞ் இர்ம்ம்ண்ற்ற்ங்ங் - அடஙஇ), ஒரு கிலோ ரூ.30 வரை வாங்கி வந்த மிளகாயை இப்போது அதிகபட்சமாக ரூ.15-க்கு மட்டுமே எடுக்கிறது. ஆனால் சந்தைக்கு வருகையோ ஒரு நாளைக்கு 300 டன்.
இந்த நிலை நீடித்தால் விலை மேலும் குறையும் அபாயம் உள்ளது. விளைச்சலை அதிகரிக்க மிக அதிகமாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி 65 நாட்களில் விளைய வேண்டிய மிளகாயை 40 நாட்களில் விளைவித்ததால் வந்த வினை இது.
பூச்சி மருந்து கலப்பு அதிகம் இருந்த காரணத்தினால்தான் நமது நாட்டிலிருந்து ஏற்றுமதியான அல்ஃபான்சோ மாம்பழங்களையும், காய்கறி வகைகள் சிலவற்றையும் இறக்குமதி செய்வதில்லை என்று ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இப்போது மிளகாயும் சேர்ந்துவிட்டது. இது குறித்து விவசாயிகளிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தாதது யார் குற்றம்?
4. தமிழ்நாட்டில் தென்மேற்கு, வட
கிழக்கு என்று இரு பருவ மழைகளும் சராசரி அளவைவிட 62 விழுக்காடு குறைவாக பெய்து எங்கும் வறட்சி தாண்டவமாடுகிறது. இந்த வறட்சி நிலையிலும் தர்பூசணி பழங்கள் மிக அதிக அளவிற்கு காய்த்தன. ஆனால் இங்கும் மிளகாய் கதையே அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு டன்னுக்கு ரூ.14,000 வரை சந்தையில் விற்ற விவசாயிகள் இந்த ஆண்டு ரூ.10,000-க்கும் குறைவாகவே விற்க முடிந்தது.
5. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சில மாதங்களுக்கு முன்பு சிறு வெங்காயத்தின் விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. சிறு வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய ஒன்றிய அரசு திடீரென்று தடை விதித்ததே விலை வீழ்ச்சிக்குக் காரண
மாகும்.
வட இந்தியாவில் சிறு வெங்காயத்திற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்தத் தட்டுப்பாட்டை சமாளிக்க ஒட்டுமொத்தமாக இந்தியாவின் எப்பகுதியில் இருந்தும் சிறு வெங்காயம் ஏற்றுமதியாவதைத் தடை செய்தது அரசு. தடையை பிறப்பித்த அரசு, தென்னகத்தின் பெரும் சந்தையான ஒட்டன்சத்திரத்தில் வந்து குவிந்த சிறு வெங்காயத்தை வியாபாரிகளைக் கொண்டோ அல்லது அரசு வேளாண் துறையின் மூலமாகவோ வாங்கி தட்டுப்பாட்டில் தவித்த வட இந்திய மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்றிருக்க வேண்டும்.
அப்படி செய்யாத காரணத்தால் வந்து குவிந்த சிறு வெங்காயத்தை வாங்குவதற்கு (ஏற்றுமதி) வியாபாரிகள் இன்றி, கிலோவிற்கு 5 ரூபாய் என்று விற்று சீரழிந்தது.
6. தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பனை எண்ணெய் இறக்குமதி செய்து விநியோகம் செய்தது தமிழக அரசு. இதனால் ஏற்படும் அந்நியச் செலாவணி செலவீனத்தைத் தவிர்க்க பனை எண்ணெய் மரங்களை பயரிடச் சொன்னது.
அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பனை எண்ணெய் சாகுபடியில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்கள் உற்பத்திக்கு உரிய விலையை தமிழக அரசு தரவில்லை. அயல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பனை எண்ணெய்க்கு மானியம் கொடுத்து அதனை மக்களுக்கு விற்ற தமிழக அரசு, அதே மானியத் தொகையை உள்ளூர் பனை எண்ணெய் மரங்களைச் சாகுபடி செய்த விவசாயிக்குத் தந்திருந்தால் அவர்களுக்கு லாபகரமாக இருந்திருக்கும்.
இப்போது அவர்கள் அனைவரும் பனை எண்ணெய் மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டு வேறு பயிருக்கு சென்றுவிட்டார்கள். ஆனால் பனை எண்ணெய் சாகுபடி செய்வதற்கான சொட்டு நீர்ப் பாசனத்திற்கு பொதுத் துறை வங்கிகளில் பெற்ற கடன்களைக் கட்ட முடியாததால், அக்கடன் இன்று பன்மடங்கு அதிகரித்து மிரட்டிக்கொண்டிருக்கிறது. குற்றம் யார் பக்கம் உள்ளது?
லாபகரமான விலை நிர்ணயம் செய்யப்படவில்லை; விளைந்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் சந்தை பரிவர்த்தனை ஒழுங்குபடுத்தவில்லை. இதனால் நஷ்டம் கண்ட விவசாயி, கடன் தள்ளுபடி கேட்டால் அது நேர்மையான கடன் கொள்கைக்கு எதிரானது என்று கூறினால் அது சரியான வாதம் ஆகுமா?
நல்ல விளைச்சல் ஏற்பட்டால் விலை வீழ்ச்சி உண்டாகிவிடுகின்றது, அப்போது பொதுமக்கள் பயனடைந்துவிடுகின்றனர். விளைச்சல் குறைந்தால் விலையேற்றம் ஏற்பட்டு, ஏற்படுத்தி வியாபாரிகள் பயனடைந்து விடுகின்றனர். விளைவித்த விவசாயிகள் எப்போது பயனடைவது? விவசாயம் செழிக்கக் கூடாது என்கிறதா ஒன்றிய அரசு?

கட்டுரையாளர்:
பத்திரிகையாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com