வாழ்வு நோக்கிய கல்வி

தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அண்மைக் காலமாக பள்ளிக் கல்வித் தேர்வு முறைகளில் மாற்றங்களை அறிவித்து வருகிறது.

தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அண்மைக் காலமாக பள்ளிக் கல்வித் தேர்வு முறைகளில் மாற்றங்களை அறிவித்து வருகிறது. இந்த மாற்றங்கள் கல்வி முறையில் முழுமையான மாற்றத்துக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது. மத்திய அரசும் புதிய கல்விக் கொள்கையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
"படிப்பு' என அது படிநிலை வளர்ச்சியையும், வாழ்க்கைக்குப் படியாக அமைவதையும் குறிக்கிறது. எல்லாருக்கும் எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையைக் கல்வி தர வேண்டும். ஆனால், அது வெவ்வேறு வகை, துறை சார்ந்ததாக அமையும். "கடையனும் கடைத்தேற வேண்டும்' என்ற ரஸ்கினின் கொள்கை பொருளாதாரத்துக்கு மட்டுமன்று.
பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண்களைக் குறைப்பது, மாணவர்களின் இறுதித் தேர்வு பளுவைக் குறைக்கும் முயற்சியே. பதினொன்றாம் வகுப்பில் இறுதியிலேயே பாதிப் பகுதியை முடித்துத் தேர்வு நடத்துவது ஒரு இயல்பான நிகழ்வே. இதனால், மொத்த மதிப்பெண்களோ, பாட அளவோ குறையாது. மொத்தத்தில் பொதுத்தேர்வின் அழுத்தத்தைப் பரவலாக்குவதே சரி.
ஆண்டுத் தேர்வுகளும், ஆண்டு முழுவதும் அவ்வப்போது நடத்தப்படும் சிறு தேர்வுகளின் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும். அதனால், கல்வி முழுவதும் தேர்வுகளாகவே மாறவும் கூடாது. தேர்வுகள், மாணவர்களுக்குச் சுமையாக சுமையாகாமல், சுவையாக அமைய வேண்டும்.
பிளஸ் 2 புதிய தேர்வுத் தாளில் பொது அறிவுக்கு 10 மதிப்பெண்கள் ஒத்துக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே. மேலும் புறவய (ஞக்ஷத்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் ற்ஹ்ல்ங்) வினாக்களைக் குறைத்து, மாணவர்களை சிந்தனை ஆற்றல், சிக்கல்களை அவிழ்க்கும் திறன் (டழ்ர்க்ஷப்ங்ம் நர்ப்ஸ்ண்ய்ஞ்), செயலாக்கும் திறன் (அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்) பகுத்தல், தொகுத்தல் போன்ற பல்வேறு திறன்களைச் சோதிப்பதாக அமைய வேண்டும்.
மொத்தத்தில் செய்திகளை மையமாக உள்ள தேர்வு, திறன்களை மையமாகக் கொள்ள வேண்டும். நினைவாற்றல் மட்டும் போதாது. உள்ளொளி வெளிவர வேண்டும்.
இதேபோல பாடத்திட்டங்களும், பயிற்றுவிக்கும் முறைகளும், மாணவரின் அகவளர்ச்சியையும், சிந்தனையையும் வளர்ப்பதாக அமைய வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் கற்கும் ஆற்றலுக்கேற்ப வகை செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் கூறுவதை அப்படியே திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக இல்லாமல், சிந்தித்தும் சீர்தூக்கிப் பார்க்கும், வினா எழுப்பும் மாணவர்கள் உருவாக வேண்டும்.
பாடத்திட்டம், பாடப்புத்தகங்களின் அளவைக் கூட்டினால் மட்டும் போதாது. அவற்றில் நேற்றைய அறிவையும் இன்றைய தேவைகளையும் ஆராய்ச்சிகளையும் இணைத்து, ஒவ்வொரு துறையிலும், மாணவர்களின் வளர்ச்சி நிலைக்கேற்ப அடிப்படைச் செய்திகள், நிரல்படுத்தித் தரப்பட வேண்டும். திட்டங்களும், பாடப் புத்கங்களும் ஆசிரியர்களுக்கும் மாணவருக்கும் வழிகாட்டியாக விளங்க வேண்டுமே தவிர, அவர்கள் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் விலங்குகளாக மாறக்கூடாது.
அறிவியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய மூன்றுக்கும் நாடு தழுவிய ஒரே வகையான பாடத்திட்டம் வேண்டுமென்று மத்தியக் கொள்கை வரைவு கூறுகிறது. அறிவியலும் கணிதமும் பொதுத் தன்மை வாய்ந்தவை. வரலாறு, பூகோளம் போன்றவற்றில் தேசப் பார்வையிருப்பினும், மாநிலங்களின் வரலாறு பூகோளத்தில் முக்கியம் தரப்பட வேண்டும். மேலும், அவரவர் சொந்த ஊர், வட்டச் சூழல்களையும் வரலாற்றையும் அறிய வேண்டும். சுற்றுச் சூழற் கல்வி எல்லா வகுப்புகளிலும் வழங்கப்பட வேண்டும்.
ஆங்கிலம் மூன்றாம் வகுப்பிலிருந்து இசைப்பாடல்கள், எளிய உரையாடல்கள் வழியாகக் கற்பிக்கப்பட வேண்டும். ஆனால் அது தாய்மொழிக் கல்விக்கு இடையூறாக அமையக்கூடாது. அது தாய்மொழி வழிப்பாடங்களைப் பயில்பவர்களுக்கு, அறிவியல் போன்ற துறைகளில் எளிய நூல்களைப் படிக்க உதவுவதாக, பத்தாம் வகுப்பிலிருந்தாவது கற்பிக்கப்பட வேண்டும்.
இதைவிட முக்கியம், தாய்மொழிக் கல்வி. அதுதான் மாணவர்களுக்கு அடையாளத்தைத் தருகிறது. அவர்களது உள்ளாற்றலை, சிந்தனைத்திறனை வளர்க்கிறது.
அனைத்துக்கும் மேலாக அவர்களது கற்பனைத் திறனை வளர்த்து அழகுணர்வையும் விழுமியங்களையும் பெற்று, பண்பாட்டினையும் பண்புகளையும் உள்வாங்க வைக்கிறது. "ஓடி விளையாடு பாப்பா' போன்ற பாடல்களை இசையாகவும், "தலைவாரிப் பூச்சுடி' போன்ற பாடல்களை நாடகமாகவும், கற்பித்து இலக்கிய உலகுக்கு அவர்களைப் படிப்படியாக இட்டுச் செல்ல வேண்டும்.
தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தலாம்; மாணவர்களும் பயன்படுத்தலாம். ஆனால் கற்றல் இயந்திரமயமாக்கக் கூடாது. காட்சி ஊடகங்கள், மாணவர்கள் விரைவாக, விரிந்த உலக அனுபவங்களைப் பெற உதவும். ஆனால், அவற்றின் கவர்ச்சியில், அறிவு வளர்ச்சியை இழக்கக்கூடாது.
சி.பி.எஸ்.இ.க்கு இணையான கல்வித்திட்டம் தமிழ் மரபுக்கு ஏற்ப, நம் மாணவர்களின் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் மாற்றப்பட வேண்டும். அது ஒரு உயர்த்தட்டுக் குடும்ப மாணவர்களை நோக்கியது. மேலும் தேசியப் பொதுத்தன்மை வாய்ந்தது.
அனைத்துக்கும் மேலாக அந்தப் பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கை மாணவர்கள்தான் கற்கிறார்கள். அதைப் பெருவாரியான கீழ்த்தட்டு மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் அப்படியே பின்பற்ற முடியுமா? அதற்கேற்ப கட்டமைப்பை எல்லாப் பள்ளிகளுக்கும் தர வேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் சமமான, தரமான கல்விதர முடியும். அதுதான் எல்லோரும் எல்லாத் தேர்வுகளையும் எதிர்கொள்ள உதவும்.
ஆனால் கல்வி, தேர்வு நோக்கியதாக மட்டுமே இருந்தால் போதாது; வாழ்வு நோக்கியதாக இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com