சுற்றுலாத் தலமாக மாறும் அம்பேத்கர் நினைவிடமான ‘சைத்ய பூமி’!

அம்பேத்கரின் நினைவிடமான "சைத்ய பூமி'யை முதல் தரமான புனித யாத்திரைத் தலம் மற்றும் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
சுற்றுலாத் தலமாக மாறும் அம்பேத்கர் நினைவிடமான ‘சைத்ய பூமி’!

மும்பையில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான "சைத்ய பூமி'யை முதல் தரமான புனித யாத்திரைத் தலம் மற்றும் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
 இதுதொடர்பாக, முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது:
அம்பேத்கரும், அவரது ஆதரவாளர்களும் 1956-ஆம் ஆண்டு பெளத்த மதத்தைத் தழுவிய நாகபுரியில் உள்ள தீக்ஷா பூமியை முதல் தரமான புனித யாத்திரைத் தலம் மற்றும் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு மகாராஷ்டிர அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. 
இந்த நிலையில், அம்பேத்கர் நினைவிடம் அமைந்துள்ள இந்து மில் பகுதியில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு தேசிய ஜவுளி கார்ப்பரேஷன் கடந்த மாதம் அனுமதியளித்துவிட்டது. இந்த நிலையில், அம்பேத்கர் நினைவிடத்தை முதல் தரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும் முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றார் அவர்.

மன்மோகன் அறிவித்து மோடி அடிக்கல் நாட்டி:

அம்பேத்கரும் அவரது சீடர்களும் புத்த மதத்தைத் தழுவிய இடத்தை புண்ணிய தலமாக அறிவிக்கும் நற்காரியத்தை செய்தவர் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். மனமோகன் 2012 ல் முன்னெடுத்த அறிவிப்பை இன்றைய இந்தியப் பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ஒருவழியாக இப்போது கட்டுமானப் பணிகள் நிறைவுற்று அம்பேத்கர் ஆதரவாளர்கள்   மற்றும் புத்த மதத்தைப் பின்பறுவோர் எனப் பலரது திருப்தியை அறுவடை செய்திருக்கிறது இந்த அறிவிப்பு.

ஆரம்பத்தில் அம்பேத்கர் நினைவிடத்துக்காக வடிவமைக்கப்பட்ட கட்டிட மாதிரி அமைப்பு அவரது குடும்பத்தினருக்குப் பிடிக்காமல் இருந்தது. பின்பு பெளத்தத்தை அடையாளப் படுத்தும் விதமாக சாஞ்சியில் இருக்கும் கற்றூண், அசோக ஸ்தூபி இரண்டின் மாதிரிகளும் சேர்க்கப் பட்டு, பல்லாயிரம் பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் தியானம் செய்யும் வசதியுடன் கூடிய மிகப்பெரிய விபாஷண தியானக் கூடம் அனைத்தும் வடிவமைப்பில் சேர்க்கப் பட்டதும் அம்பேத்கர் நினைவிடமான ‘சைத்ய பூமி’யின் கட்டமைப்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

நினைவிடம் அமைந்திருக்கும் இடம்:

சைத்யபூமி, சாண்ட் தியானேஸ்வர் மார்க், சந்திரகாந்த் துரு வாடி, மேற்கு தாதர்,மும்பை, மகாராஷ்டிரா 400028

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com