சத்தம் போடாதே!

நீர், நிலம், காற்று ஆகியவை இன்றைய காலகட்டத்தில் பெருமளவு மாசடைந்துவிட்டன
சத்தம் போடாதே!

நீர், நிலம், காற்று ஆகியவை இன்றைய காலகட்டத்தில் பெருமளவு மாசடைந்துவிட்டன. இவற்றுடன்  ஒன்றாக ஒலி மாசையும் சேர்த்துக் கொள்ளலாம். பேரொலியானது மனிதர்கள் மற்றும் மிருகங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளார்கள். இதனால்  நம் உடல், உளவியல் மற்றும் அறிவுசார் நல்வாழ்வில்  அனேக பிரச்னைகள் ஏற்படும்.  பிடிக்காத காட்சிகளை காண வேண்டாம் என கண்களை மூடிக் கொள்ளலாம் ஆனால் தவிர்க்க முடியாத சமயங்களில் நம்  காதுகளையும் பொத்திக் கொள்ள முடியவில்லை. 

விமான ஜெட்டை  விட சத்தமாக, வாகனங்களின்  ஒலி  அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில் சென்னையை மிகச் சத்தமான நகரமாக மாற்றிவிட்டது. ஒலி மாசு உடலில் விளைவிக்கும் பிரச்னைகள் பின்வருமாறு -

காது கேளாமை, செரிமான கோளாறுகள், பிறப்பு குறைபாடுகள், கீல்வாதம், புற்றுநோய், இதய நோய், சோர்வு, தலைவலி, ஆஸ்துமா, ரத்த அழுத்தம், தூக்கமின்மை,  நோய் எதிர்ப்புத் திறன் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது . 

உளவியல் தாக்கங்கள்: 

மன அழுத்தம், கோபம், கவலை, வன்முறை, மது மற்றும் போதை மருந்து பயன்பாடு, சோர்வு, தற்கொலை எண்ணங்கள்.

அறிவுநிலை பாதிப்புக்கள்: 

கற்றல் திறன், நினைவாற்றல் இழப்பு, மொழி திறன் குறைப்பாடு , குறைந்து பேச்சு வளர்ச்சி, கல்வி செயல்திறன் குறைவு, அறிவாற்றல் திறன் குறைவு  ஏற்பட வாய்ப்புள்ளது . 

நாள் முழுவதும் உழைத்து களைத்து வீடு திரும்பும் நம் அனைவருக்கும் அந்நாளைய முடிவில் அமைதியானா தூக்கம் பெற உரிமை உள்ளது .

இதை உணர்ந்த  கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள TrueTech Solutions Pvt Ltd (மென்பொருள் நிறுவனம் ) சார்த்த "பெருநிறுவன சமூக பொறுப்பு குழுமம் " - "ஒலி எழுப்பாதே "(No Honking) என்னும் விழிப்புணர்வை வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தினர்.

ஆகஸ்ட் 7, 2016, அன்று நடைபெற்ற ஒலி எழுப்பதே (No Honking ) விழிப்புணர்வு முகாம் , மக்களிடம் நல்லதோர் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் , போக்குவரத்து காவல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் இதுபோன்ற ஒரு முகாமை நடத்துமாறு கேட்டுக்கொண்டனர் .

அதை அடுத்து , இன்று (21.10.2016)   ஒலி எழுப்பதே (No Honking ) விழிப்புணர்வு முகாமை (காலை 8மணி முதல் 10 மணி வரை) சென்னை கிண்டி Olympiad Tech Park போக்குவரத்து சந்திப்பில் முகாம் நடத்தினர். சாலையின் நான்கு பக்கமும் "ஒலி எழுப்பாதே "(No Honking) குறித்து விளக்கப்படங்கள் மற்றும் சிறு பதாகைகள் ஏந்தி மற்றும் அதை குறித்த வாசகங்கள் உள்ள ஸ்டிக்கர்களை வாகன ஓட்டிகளுக்கு கொடுத்தும் விழிப்புணர்வு முகாமை நடத்தினார்கள் .

இதற்கு உதவிய போக்குவரத்து காவல் பிரிவு துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் கிண்டிஜே -3 காவல் நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com