தீபாவளி: ஞான ஒளியைக் கொண்டாடுதல்!

தீமையின் மீது நன்மையின் வெற்றி; இருளின் மீது ஒளியின் வெற்றி;
தீபாவளி: ஞான ஒளியைக் கொண்டாடுதல்!

தீமையின் மீது நன்மையின் வெற்றி; இருளின் மீது ஒளியின் வெற்றி; அறியாமையின் மீது மெய்யறிவின் வெற்றி என்பதைக் கொண்டாடும் ஒளிப் பண்டிகை தீபாவளி ஆகும். ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் இப்பண்டிகை கார்த்திகை மாதம் 15ஆம் நாள் நிகழ்கிறது. முதல் நாள் தான் தேராஸ், இரண்டாம் நாள் சிறிய தீபாவளி, மூன்றாம் நாள் முக்கிய தீபாவளி, அப்போது வீடுகளில் லட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இது இருண்ட அமாவாசையன்று இரவு செய்யப்படுகிறது. நான்காம் நாள் காத்திகை சுத்த பட்வா. ஐந்தாம் நாள் பாய் தூஜ் எனக் கொண்டாடப்படுகிறது.

பட்டாசுகள் வெடித்து பூஜை செய்து மற்றும் விளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடப்படுகிறது. விளக்குகள் மூலமாக இந்த உலகின் அழகு தெரிய வந்து அனுபவிக்க முடிகிறது. விளக்குகள் வீடுகளை அலங்கரிக்க மட்டுமல்ல, வாழ்க்கை பற்றிய ஒரு ஆழமான உண்மையை தொடர்பு கொள்ளவும் ஏற்றப்படுகின்றன. இருள் ஞானத்தின் ஒளியால் அகற்றப்படும் போது தீமையை நன்மை வெற்றி கொள்கிறது. ஏற்றப்பட்டிருக்கும் விளக்கு, இருள் மற்றும் பேராசை, காமம், பயம், வன்முறை, அநீதி, பொல்லாப்பு போன்ற எதிர்மறை சக்திகள் அறிவினால் அழிக்கபப்டுவதைக் குறிக்கிறது.

தீபாவளியில் ஏற்றப்படும் விளக்குகளின் வரிசைகள் ஒருவர் வாழ்க்கையில் பெற்றுள்ள ஞானத்தைக் குறிக்கிறது. அது அறியாமை மீது உண்மை மற்றும் அன்பு ஆகியவற்றின் வெற்றியைக் கொண்டாடுவதாகும்.

சத்யபாமா நரகாசுரனை அழிப்பது இந்த வெற்றியைக் குறிக்கிறது. இந்த நாளில் அரக்கன் நரகாசுரன் கொல்லப்பட்டான். நரகாசுரைக் கொல்ல ஒரு பெண்ணால் மட்டுமே முடியும் என்றூ ஒரு வரம் வழங்கப்பட்டிருந்தது. கிருஷ்ணரின் மனைவி சத்யபாமா அவரை அவனை அழிக்கும் வல்லமை பெற்றிருந்தாள்.

ஏன் சத்யபாமா மட்டுமே நரகாசுரனைக் கொல்ல முடியும்? சத்ய என்றால் உண்மை; பாமா என்றால் அன்புக்குரியவர் என்று பொருள். பொய் அல்லது அன்பற்ற தன்மை நரகத்தை வெற்றி கொள்ள முடியாது. ஆக்கிரமிப்பற்ற குணம், அன்பு மற்றும் சரணடைதல் பெண்ணின் இயல்பான குணங்கள். ஆகவே அன்புக்குரிய சத்தியபாமாவால் நரக இருளை நீக்கி ஒளியைப் பெற்றுத் தர முடிந்தது. மேலும் தனது இறுதியைக் குறிக்கும் விதமாக ஒவ்வொரு இல்லத்திலும் இருளை அகற்றும் ஒளி விளக்குகள் ஏற்றப்பட வேண்டும் என்பது நரகாசுரனின் இறுதி ஆசையாகும்.

தீபாவளி அன்பும் ஞானமும் பிறக்கும் ஒளி கொண்டாட்டமாகும். மேலும் இந்த நாளில் ராமர் அரக்கனாகிய ராவணனை வெற்றீ கொண்டு அவரது ராஜ்ஜியமான அஹோத்திக்குத் திரும்பிய நாள் ஆகும். அயோத்தி என்றால் அழிக்க முடியாதது அதாவது வாழ்க்கை என்று அர்த்தம். ராம் என்றால் ஆத்மா (சுயம்) என்பதாகும். சுயம் ஆழ்க்கையில் ஆட்சி செய்யும்போது, அறிவு விளக்குகள் ஒளி பெறுகின்றன. வாழ்க்கை எல்லா இடங்களிலும் உள்ளது. ஆனால் ஆன்மா வாழ்க்கையில் விழித்துக் கொள்ளும்போது, தீபாவளி நிகழ்கின்றது.

இந்தப் பண்டிகையைப் பற்றி பல கதைகள் உள்ளன என்றாலும், அடிப்படையில் ஒவ்வொரு இதயத்திலும் அறிவொளியையும் மற்றும் ஒவ்வொருமுகத்திலும் புன்னகையையும் கொண்டு வருவதற்கே தீபாவளி கொண்டாடப்படுகிறது. வாழ்க்கை பல அம்சங்களும் மற்றும் பல நிலைகளையும் கொண்டது. அவற்றை அறிவது மிக முக்கியம். ஏனெனில் வாழ்க்கையில் ஒரு அம்சம் இருளில் இருந்தது என்றால், வாழ்க்கையின் முழு வெளிப்பாடு இருக்காது. விளக்குகளின் வரிசைகள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உங்கள் கவனம் மற்றும் அறீவு ஒளி தேவை என்று ஞாபகப்படுத்துகின்றன. மெய்யறிவு அனைத்து இடங்களிலும் தேவைப்படுகிறது. குடும்பத்தில் ஒரு உறுப்பினர் இருளில் இருந்தாலும் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியாது. எனவே, நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஞான விளக்கேற்ற வேண்டும். சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், உலகில் ஒவ்வொரு மனிதனிடத்திலும் அதை நீட்டிக்க வேண்டும்.

மற்றொரு ஆழமான குறியீட்டுவாதம் பட்டாசுகள். வாழ்க்கையில் நீங்கள் விரக்தி, கோபம் போன்ற உங்கள் அடக்கப்பட்ட உணர்வுகளை, பட்டாசு போன்று வெடிக்கிறீர்கள். எனவே நீங்கள் பட்டாசு வெடிக்கும் போது அடக்கி வைத்திருந்த உணர்வுகளை எல்லாம் வெளியிட்டு காலியாக மற்றும் வெற்றிடமாக உணருகிறீர்கள். விடுதலையுணர்வுடன் இருங்கள். அறிவொளி பிறக்கட்டும்.

இந்த தீபாவளி தினத்தில் உங்கள் இதயங்களில் அன்பெனும் விளக்கேற்றுங்கள். உங்கள் இல்லங்களில் மிகுதியான வளம் எனும் விளக்கேற்றுங்கள். பிறருக்கு உதவும் கருணையெனும் விளக்கேற்றுங்கள். அறியாமை எனும் இருள் அகற்ற அறிவு எனும் விளக்கேற்றுங்கள். இறைமை நமக்கு வழங்கிய மிகுதிகள் அனைத்திற்கும் நன்றியெனும் விளக்கேற்றுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com