காதல் என்றால் என்ன?

காதல் ஆனந்தமான ஒன்றல்ல; அது மிகவும் ஆழமான, அற்புதமானதொரு வலி. உங்களுக்குள்
காதல் என்றால் என்ன?

காதல் என்றால் என்ன?

காதல் ஆனந்தமான ஒன்றல்ல; அது மிகவும் ஆழமான, அற்புதமானதொரு வலி. உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் கிழிபட வேண்டும் – அப்போதுதான் காதல் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் காதலின்போது இனிமையை உணர்கிறீர்கள் என்றால், அது காதல் அல்ல, அது வெறும் வசதி மட்டுமே. ஒரு சிறிதளவு பிரியத்தை நீங்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால் நீங்கள் காதலை உணரும்போது, உண்மையாகவே உங்களுக்குள் உள்ள ஒவ்வொன்றும் இருகூறாகக் கிழிபடுகிறது. அது வலி மிகுந்தது என்றாலும் அற்புதமானது. காதல் ஆனந்தமான ஒன்றல்ல; அது ஒரு ஆழமான, அற்புதமான வலி நீங்கள் காதலில் இருக்கும்போது, நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றும் காதலுடன்தான் இருக்கும். நீங்கள் சாப்பிட்டால் அது காதலோடு நடக்கும். நீங்கள் அந்த நபருக்காக செயல் செய்கிறீர்களோ அல்லது எதையும் செய்யாமல் வெறுமனே அமர்ந்திருக்கிறீர்களோ, அங்கு காதல் இருக்கும். ஆனால் இன்று, இந்த நிதர்சனத்தை ஏற்று, ‘காதல் செய்வது’ என்கிற கருத்தை முன்னிறுத்தி, இந்தப் பதத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். அதன்படி ஒரு குறிப்பிட்ட செயல் மட்டுமே காதல் என்றாகிறது. ஆனால் நீங்கள் காதலை செய்ய முடியாது. அதை அனுமதிக்கத்தான் முடியும். நீங்கள் அனுமதித்தால், காதல் உங்களுக்கு நிகழக்கூடும்.

உண்மையில், காதல் என்பது எப்போதும் அணைத்துக்கொள்வது, எதையும் விலக்குவதல்ல. நீங்கள் காதலில் இருக்கும்போது, உங்கள் செல்ல நாயைப் பாருங்கள், அதைக் காதலிப்பீர்கள்; ஒரு மரத்தைப் பாருங்கள் அதைக் காதலிப்பீர்கள்; ஒரு மலரைப் பாருங்கள், அதைக் காதலிப்பீர்கள்; நீங்கள் வானத்தைப் பாருங்கள், அதைக் காதலிப்பீர்கள். நீங்கள் காதலில் இருக்கும்போது, நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் அழகுதான். ஒரே ஒரு நபர் மட்டும் உங்களுக்கு அழகாகத் தெரிந்தால், உங்களுக்குள் காதல் இல்லை. அது, காமம் மட்டுமே, காதல் என்ற பெயரில் நாகரீகமாக வெளிப்படுத்திக் கொள்கிறது, அவ்வளவே. காதல் என்பது ஒரு பண்பு, அது ஒரு செயல் அல்ல. தியானம் அல்லது ஆன்மீகம் என்பதும் ஒரு பண்புதான், செயல் அல்ல. அது ஒரு புதிய பரிமாணம். அது நீங்கள் செய்யக்கூடிய ஏதோ ஒரு செயல் அல்ல, நீங்கள் ஏதோ ஒன்றினுள் பிரவேசிக்கின்ற ஒரு உணர்வு. ஏதோ ஒன்று உங்களை வெற்றி கொள்வதற்கு நீங்களே அனுமதிப்பது. 

இல்லையென்றால், அங்கே ஆன்மீகத்தன்மை இருப்பதில்லை. நீங்கள் ஆன்மீகம் அடையப் போகிறீர்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நிகழப் போவதில்லை. நீங்கள் ஆட்படுவதற்கு சம்மதியுங்கள். அப்போதுதான், அங்கே ஆன்மீகம் எழுகிறது. நீங்கள் பாறை போல் நின்றால், அங்கே ஆன்மீகம் இல்லை.


அன்பு என்றால் என்ன?

ஒருவரிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள், அவருடன் உங்கள் உறவுநிலையை எப்படி நடத்திச் செல்கிறீர்கள் என்பது அந்த நபருடனான உங்களது நெருக்கத்தின் அளவைப் பொறுத்தது. அந்த நெருக்கத்தை நீங்கள்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும், அதற்கென்று குறிப்பிட்ட தீர்வு எதுவும் கிடையாது. ஆனால் நீங்கள் அன்புமயமாக இருந்தால், உங்களது வாழ்க்கை அனுபவம் மிகவும் இனிமையாகிறது. யாரோ ஒருவர் எப்படி இருக்கிறார் என்பது இப்போது பொருட்டில்லை. ஏனென்றால் நீங்கள் உங்களுக்குள் முற்றிலும் இனிமையாகவும், அற்புதமாகவும் உணர்கிறீர்கள். அதுதான் முக்கியம். நீங்கள் உங்களுக்குள் அற்புதமாக உணர்வீர்களேயானால், இயல்பாகவே மற்றவர்களிடமும் அற்புதமாக நடந்து கொள்வீர்கள். நீங்கள் உங்களுக்குள் வெறுப்பாக உணர்ந்தீர்கள் என்றால், இயல்பாகவே நீங்கள் உங்களது வெறுப்பைத்தான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.

அன்பு என்பது ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒரு அம்சமாக இருக்கிறது. அன்பு என்றால் உங்கள் உணர்ச்சிகள் இனிமையாக உள்ளன என்பது பொருள். உங்களது உணர்ச்சிகள் இனிமையுடன் இருந்தால், நீங்கள் இயற்கையாகவே அன்பாக இருக்கிறீர்கள். நீங்கள் பார்ப்பது என்னவாக இருந்தாலும், அது ஒரு ஆணாக, பெண்ணாக, குழந்தையாக, மரமாக, விலங்காக, பறவையாக அல்லது நீங்கள் சுவாசிக்கும் காற்றாக இருந்தாலும்கூட, நீங்கள் அன்புடன் எதிர்கொள்வீர்கள்.

நீங்கள் உள்ளே சுவாசிக்கும் காற்றை உங்களால் அன்புடன் உள்வாங்க முடியாதா என்ன? காற்றுக்கு நினைவாற்றல் உண்டு. “இந்த நபர் என்னை நேசிக்கிறார்” என்பதை காற்று நினைவில் வைத்திருந்தால், அது உங்களுக்கு அற்புதமாகச் செயல்படும். தண்ணீரை உங்களால் அன்புடன் அருந்த முடியாதா என்ன?

நீருக்கு நினைவாற்றல் உண்டு. இது ஒரு விஞ்ஞானபூர்வமான உண்மை. நீருக்கு, தான் அன்புடன் அருந்தப்படுவது நினைவில் நின்றால், அது உடலுக்குள் சென்று, உங்களுக்குள் அற்புதமான விஷயங்களைச் செய்யும். இல்லையென்றால், அது உடலில் சென்று, உங்களுக்கு மோசமான விஷயங்களைச் செய்யும்.

இதை முயன்று பாருங்கள் – நீங்கள் உண்ணும் உணவு, நீங்கள் சுவாசிக்கும் காற்று, நீங்கள் அருந்தும் நீர், நீங்கள் கால் பதிக்கும் இந்த மண் இவைகள் அனைத்தையும் அன்புடன் அணுகுங்கள். பிறகு பாருங்கள், உங்கள் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை! உங்களைப் பற்றிய ஒவ்வொன்றும், உங்களது ஆரோக்கியம் உள்பட, நம்பமுடியாத அளவுக்கு மாறிப்போகும். எல்லாவற்றுக்கும் நினைவாற்றல் இருக்கும் காரணத்தால் ஒவ்வொன்றுடனும் அன்பு மேலிடத் தொடர்பு கொள்ளுங்கள். இது மனிதர்களுடனும் உண்மையாகத்தானே இருக்கிறது?

இரண்டு வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு சூழ்நிலையில் நீங்கள் அறிமுகமற்ற ஒருவரை அன்புடன் அணுகியிருந்தால் கூட, இன்று உங்களை எதிர்பாராமல் சந்திக்கும்போது, அவர் ஒரு குறிப்பிட்ட விதமாக உங்களை அணுகமாட்டாரா என்ன?

ஆகவே, அன்பு என்பது உறவுமுறை சார்ந்தது அல்ல. அன்பு உங்களது தன்மையாக இருக்கிறது. நீங்கள் எல்லாவற்றையும் அன்புடன் அணுக முடியும். அனைத்திற்கும் மேலாக, உங்களது இருத்தலின் தன்மை மிக மிக இனிமையாகவும், அழகு நிறைந்ததாகவும் ஆகிறது. இதுதான் மிகவும் முக்கியமானது.

ஆன்மீகம் என்றால் என்ன?

ஆன்மீகம் என்பது உங்கள் உள்நிலையில் நிகழ்வது. வெளியே என்ன செய்ய வேண்டுமென்பது உங்கள் விருப்பம். உறவுகளுடன் இருப்பதா, தனிமையில் இருப்பதா, நகரத்தில் வாழ்வதா மலைகளுக்குப் போய் சேர்வதா என்பதெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு. அதற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை.

அடுத்து யாருடன் உங்களுக்கு எந்தவிதமான உறவு இருக்கிறது என்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பத்தையும் தேவையையும் பொறுத்தது. எனவே, ஆன்மீகத்தையும் உறவுகளையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். இரண்டும் வெவ்வேறு அம்சங்கள்.

ஆன்மீகப் பாதையில் நடையிடும் பலரும் உறவுகளை உதறக் காரணம், ஆன்மீகமல்ல. அவர்களால் உறவுகளின் நிபந்தனைகளையும் நெருக்கடிகளையும் தாங்க முடிவதில்லை. உறவுகளை விட்டுவிட்டு வருமாறு ஆன்மீகம் வலியுறுத்துவதில்லை. ஆனால், பல நேரங்களில், ஆன்மீகத்தை விட்டுவிட்டு வருமாறு உறவுகள் வலியுறுத்துகின்றன. எனவே, இரண்டில் ஏதாவது ஒன்றை விட்டுவிடுவதென மனிதர்கள் தீர்மானிக்கிறார்கள். இதில் துரதிருஷ்டம் என்னவென்றால், ஆன்மீகத்திற்காக உறவுகளைத் துறந்தவர்களை விட உறவுகளுக்காக ஆன்மீகத்தைத் துறந்தவர்கள்தான் அதிகம். உண்மையில் இவையிரண்டும் ஒன்றுடனொன்று முரண்பட்டவையே அல்ல. உங்கள் உள்நிலையில் நிகழும் ஒன்று, யாருடனாவது அல்லது எதனுடனாவது உங்களுக்கிருக்கும் உறவுடன் முரண்படப் போவதேயில்லை. ஆனால், நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென ஓர் உறவு நிபந்தனை விதிக்கும் போதுதான் அது தடையாக மாறுகிறது.

மனிதர்கள் கடவுளை நம்புவதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் கடவுள்தானே அவர்கள் வாழ்வின் மையமாக இருக்க வேண்டும்? இதில் சிக்கல் உறவுகளல்ல. உறவுகளின் பாதுகாப்பற்ற உணர்வுதான்.

உறவுகள் அன்பின் அடிப்படையில் உருவாகும்போது சிக்கலில்லை. ஆனால், அவை எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும்போது, சிக்கல் வருகிறது. மனிதர்கள் ஒருவரிடமிருந்து எதையோ பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். அதைப் பெற முடியாதபோது வருந்துகிறார்கள். மாறாக, நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருக்கும்போது உங்கள் உறவுகள் மிகவும் மனமுதிர்ச்சியோடும் அற்புதமாகவும் அமையும். ஏனென்றால், மற்ற மனிதர்கள் மீது அபத்தமான எதிர்பார்ப்புகள் ஏதும் உங்களுக்கு இருக்காது. ஏனெனில், அந்த மனிதரை இன்னோர் உயிராக மதித்து நடத்துவீர்கள். இங்கே மிகவும் மதிக்கப்பட வேண்டியது உயிர்தான். மற்ற மனிதர்களையும் இன்னோர் உயிராகப் பார்த்து நடத்தினால் சிக்கல் இருக்காது.

ஆன்மீகத்தில் ஈடுபடுவதில் ஒரு விஷயம் என்னவென்றால், உங்களுக்குள் ஏதோ ஒன்றின் சுவையை உணர்ந்து விட்டீர்களென்றால், அதுவே உங்கள் வாழ்வின் மையமாக மாறிவிடுகிறது. ஆனால், உங்களுடன் உறவில் இருக்கும் ஒருவர், தானே உங்கள் வாழ்வின் மையமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அப்படி இல்லையெனும் போது பாதுகாப்பற்ற உணர்வு அவர்களைத் தொற்றிக் கொள்கிறது.

தொகுப்பு - ஷக்தி (நன்றி ஈஷா மையம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com