பழைய புத்தகங்களில் காப்பி, சாக்லேட் வாசனை

பழைய புத்தகங்கள் சாக்லெட் மற்றும் காபியை போன்ற மணத்துடன் இருக்கும் என்கிறது
பழைய புத்தகங்களில் காப்பி, சாக்லேட் வாசனை

நீங்கள் புத்தகப் பிரியரா?  நாளை (ஏப்ரல் 23)  உலகப் புத்தக தினம்! புத்தக வாசனைப் பற்றிய இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள்.

பழைய புத்தகங்களுக்கு சாக்லெட் மற்றும் காபியின் மணம் உள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.

இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், புத்தகங்கள் மற்றும் நூலகங்களின் மணத்தை ஆய்வு செய்தனர். மிகவும் பழமையான இற்றுப் போன புத்தகங்களிலிருந்து வரும் நெடி காபியின் வாசனைப் போலவே உள்ளது என்கிறது அந்த ஆய்வு.  

யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனைச் (UCL) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை ஆய்வு செய்தனர். பழமையான நறுமணங்களை குணாதிசயப்படுத்திக்கொள்ள உதவும் ஒரு வகைப்பாட்டுத் திட்டத்தை முதலில் தயார் செய்து வைத்துக் கொண்டனர். அதற்கென மிகவும் பழையதும் இற்றுப் போனதுமான  பல புத்தகங்களை எடுத்து இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினர்.

புத்தகங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களிலிருந்து அடிக்கடி சிறிய அளவில் எளிதில் ஆவியாகக் கூடிய கொந்தளிப்பான கரிம சேர்மங்கள் (VOC என அழைக்கப்படும் volatile organic compounds) காற்றில் வெளியேற்றுகின்றன. நமது நாசி அந்த ரசாயனத்தை நுகரும் போது, நமது மூளை அவற்றை வாசனை என விளக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

சுமார் 79 நபர்களை இந்த பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். பழமையான புத்தகங்களை மூடி மறைத்து அதன் வாசனையை அவர்களை முகர்ந்துப் பார்க்கச் சொன்னார்கள். அவர்களில் பெரும்பாலோனோர் இந்த வாசனை சாக்லெட்டின் வாசனை என்று தெரிவித்தனர்.

சாக்லேட் மற்றும் காபி ஆகியவற்றின் VOC-கள் புத்தகங்களில் இருப்பது போலவே ஒத்திருப்பதால் அப்புத்தகங்களை முகர்ந்து பார்க்கும் போது காபி மணம் போன்றே இருப்பது தவிர்க்க முடியாதது என்று UCL சேர்ந்த செசிலியா பெம்பிப்ரே கூறினார்.

லண்டன் செயின்ட் பால் கதீட்ரல்  நூலகத்திலும் ஆராய்ச்சியாளர்கள் VOC மாதிரிகளைப் பரிசோதித்தனர் என 'பாப்புலர் சயின்ஸ்' அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு உணரப்பட்ட வாசனை மரத் தூள் மற்றும் மரத்தை எரிக்கும் போது  உருவாகும் புகை மணத்துக்கு ஒத்ததாகவும், சாக்லெட் வாசனை போன்றும் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவு ஹெரிடேஜ் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com