இந்தியா வறட்சிக்கு ஐரோப்பிய நாடுகள் மாசுபடுத்துவதே காரணம் : ஆய்வில் தகவல்

ஐரோப்பா கண்டத்தில் உள்ள வட மேற்கு மற்றும் தென் மேற்கு நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் எரிக்கப்படும் நிலக்கரியில் இருந்து சல்ஃபர்-டை- ஆக்சைடு வெளியாகிறது. அவை காற்றில் மாசாக படிந்து மழைநீருடன் மீண்டும்
இந்தியா வறட்சிக்கு ஐரோப்பிய நாடுகள் மாசுபடுத்துவதே காரணம் : ஆய்வில் தகவல்

ஐரோப்பா கண்டத்தில் உள்ள வட மேற்கு மற்றும் தென் மேற்கு நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் எரிக்கப்படும் நிலக்கரியில் இருந்து சல்ஃபர்-டை- ஆக்சைடு வெளியாகிறது. அவை காற்றில் மாசாக படிந்து மழைநீருடன் மீண்டும் பூமிக்கு வருகிறது.

ஐரோப்பிய நாடுகள் வெளியேற்றும் மாசினால் இந்தியாவில் 130 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலக்கரியில் இயங்கும் அனல் மின்நிலையங்களில் வெளிவரும் சல்ஃபர்-டை-ஆக்சைடு (SO 2 ) காரணம் என லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தட்பவெட்பநிலைக்கான கிராந்தம் இன்ஸ்டிடியூட்(Grantham Institute - Climate Change and Environment) ஆய்வாளர்கள் பீட்டர் ஸ்டீக்லெக்னர் (Peter Steiglechner), டாக்டர். அபோஸ்டோலஸ் வல்காரகஸ் (Dr Apostolos Voulgarakis) மற்றும் டாக்டர்.மாத்யூ காசோர் (Dr Matthew Kasoar) கண்டுபிடித்துள்ளனர்.

1920-ஆண்டு முதல் இன்று வரை இந்தியா சந்தித்த 25 இயற்கை சீரழிவு காரணிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அட்டவணை (worst Disaster link) மேலும் 2000 ஆண்டு முதல் இந்தியாவில் மழை குறைவதற்கான ஐநா சபையின் அறிக்கையையும் கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சல்பர்-டை- ஆக்ஸைடால் ஏற்படும் விளைவுகள்


EPA அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (Environmental Protection Agency) சல்ஃபர்-டை- ஆக்சைடு (SO 2 ) வாயுவிடமிருந்து பாதுகாக்க வளிமண்டல காற்று தர நிர்ணயத்தை வகுத்துள்ளது.

புவி சார்ந்த பொறியியல் சப்ஃபேட் எரோசால்கள் சூரியஒளியை திரும்ப பிரதிபலித்து ஒரு குளுமையை ஏற்படுத்தி புவி வெப்ப மயமாவதை தடுப்பதாக கூறினாலும் அதன் விளைவுகள் மோசமானது.

சல்ஃபர்-டை- ஆக்சைடுகளின் விளைவுகள் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் அனைத்து (SOx) சல்ஃபர் ஆக்சைடுகளையும் கட்டுப்படுத்தும் நோக்கில் உள்ளது. இந்த வாயுக்கள் சுவாச உறுப்புகளை செயலிலக்கச் செய்யும், சுவாசத்தை தடுக்கும். வளிமண்டல காற்றுடன் கலந்து சிறிய தூசியை(small particles) உருவாக்கும்.

மரங்களின் செடிகிளின் வளர்ச்சியை கெடுத்து, பசுமையை (Foliage) அழிக்கும். மேலும் அமில மழைக்கு (Acid rain) SO 2 முக்கிய காரணியாகும். கடையாக சுற்றுச்சூழலை அழிக்கும்.

ஆய்வாளர்கள் வட துருவத்தில் வெளியேற்றப்படும் மாசுவால் தென் துருவங்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளனர். இது மழையின் அளவை குறைக்கும் என ஆராய்ந்துள்ளனர்.

இதனால் கடந்த 2000 வருடத்திலிருந்து வடமேற்கு இந்தியா பெரிதும் பாதித்துள்ளதை கண்டுள்ளனர். இதனால் 40% மழை குறைந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர். அபோஸ்டோலஸ் வல்காரகஸ்(Dr Apostolos Voulgarakis) ஒரு பகுதியில் வெளியேற்றப்படும் மாசுவால் மற்ற பகுதியில் விளைவை உண்டு பண்ணும் என்று குறிப்பிட்டுள்ளார். இது மழையின் அளவை குறைக்கும்.

இதனால் கிழக்காசியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். சல்ஃபர்-டை-ஆக்சைடுகளால் ஏற்படும் விளைவுகளை கண்டுபிடிப்பதே இவர்கள் ஆராய்ச்சியாகும்.

இந்த காற்று மாசுவினால் ஏற்படும் தட்பவெப்ப விளைவுகள் இடத்திற்கு இடம் மாறுபடும். மாசுவும் புவி வெப்ப மயமாதலும் ஒரே பிரச்சினையாக பார்க்கவேண்டும். 1990-லிருந்து இன்றுவரை 74% சல்பர் மாசு குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சொல்கிறது.

அதே கல்லூரியில் முனைவர் பட்டபடிப்பு மாணவர் தில்சாத் ஷாகி (Dilshad Shawki) ஒவ்வொரு பருவ மழையும் இந்திய துணைக்கண்டத்தை எப்படி நீரில் முழ்கடிக்கும். ஆனால் மாசுவினால் வெளிவெப்பம் அதிகரித்து மழை குறைந்துள்ளதாக குறிப்பிடுகிறார்.

சென்ற ஆண்டு இந்தியா அதிக பட்ச வெப்பநிலையான 51 Celsius அல்லது 123.8F அடைந்தது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலத்தைவிட்டு நகரத்துக்கு புலம் பெயர்தனர்.

அதிக காற்று மாசுவை வெளியிடும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது அந்தந்த மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலரிடம் பொதுமக்களே முறையிட்டு தக்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.

இது பற்றி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என. மக்கள் பொறுத்திருக்காமல் செயலில் இறங்குவது நாட்டை அழிவுப் பாதையிலிருந்து மீட்கும்.

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

 

References:
1. UNICEF India Report on the Drought 19 Jul 2000
2. https://www.epa.gov/so2-pollution/sulfur- dioxide-basics#effects
3. http://www.independent.co.uk/environment/european-pollution- india-drought- worst-ever- sulphur-dioxide- geo-engineering-grantham- institute-a7694491.html
4. Novel policy tools to assess the environmental impacts of air pollutants by Peter Steiglechner, Dr Apostolos Voulgarakis and Dr Matthew Kasoar- 2017
5. https://granthaminstitute.wordpress.com/2016/08/11/its-a- small-world- how-air- pollution-in- europe-can- affect-rainfall-in-india/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com