நாள் முழுதும் ஃப்ரெஷ்-ஆகச் செயல்பட பருகுங்கள் 7அப் ரிவைவ்!

நாள் முழுதும் ஃப்ரெஷ்-ஆகச் செயல்பட பருகுங்கள் 7அப் ரிவைவ்!

கோடையில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல... எப்போதும் செவன் அப் ரிவைவ் உங்களுடன் இருக்கிறதா? அதை மட்டும் உறுதி செய்துகொள்ளுங்கள்.

தமிழகத்தின் தனிச்சிறப்பான வெயிலோடு விளையாடி வெயிலை ஜெயித்து நாள் முழுதும் ஃப்ரெஷ்-ஆகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்…

தமிழ்நாடு - எப்போதுமே மாறிக்கொண்டே இருக்கும் அதன் சீதோஷ்ண நிலைகளுக்காகக் கவலைப்பட்டு, தொன்மை வாய்ந்த பாரம்பரியம்மிக்க அதன் பண்டிகைக்கால சந்தோஷங்களை இழப்பதில்லை. எத்தனை கடுமையான வெயிலென்றாலும் தமிழ் புத்தாண்டை ஒட்டி தொடர்ந்து வரிசை கட்டி நிற்கும் திருவிழாக்களை இயல்பு கெடாமல் கொண்டாடுவதில் தமிழகம் எப்போதுமே சலிப்படைந்ததே இல்லை.

வெயிலோ, மழையோ, புயலோ, கடுங்குளிரோ, புயலோ எதுவானாலும் பண்டிகைக்கால கொண்டாட்டங்களுக்கு தமிழக மக்கள் எப்போதும் தயார் நிலையில்தான் இருப்பார்கள். அதிலும் இந்தக் கடுங்கோடையில்தான் தமிழகத்தின் பிரசித்திபெற்ற சித்திரைத் திருவிழா, மாசி மகம், தமிழ் புத்தாண்டு என வரிசையாக விழாக்கள் தொடர்ந்து வரும். சித்திரை துவக்கம் முதலே அக்னி நட்சத்திரம் தொடங்கிவிடுவதால் சமயத்தில் வெயில் 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை ஏறுவதும், இறங்குவதுமாக ஏமாற்றி தமிழக மக்களின் உச்சி மண்டையைப் பிளந்து வெளு வெளு என்று வெளுக்கத் தொடங்கிவிடும்.

மக்கள் என்னதான் பண்டிகை கொண்டாடும் ஆர்வம் மிக்கவர்களாக இருந்தாலும்கூட ஒரு சின்ன வேலையைச் செய்து முடிப்பதைக்கூட கடும் சிரமமானதாக மாற்றிவிடக்கூடிய இந்த வெயில் கொடுமையை அவர்களால் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை. கோயிலுக்கோ, மார்கெட்டுக்கோ, விசேஷ வீடுகளுக்கோ எங்கு செல்வதாக இருந்தாலும் வீட்டை விட்டு தெருவில் கால் வைத்தால் போதும், உடலிலுள்ள மொத்த ஆற்றலையும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சாத குறையாக விழுங்கத் தயாராக உச்சி வானில் ஒளிவிடும் சூரியனின் தாக்கத்தை எதைக் கொண்டு தணிப்பது?

சாப்பிட்ட உணவு அத்தனையையும் வியர்வையாய் மாற்றி உருகி வழியவைக்க கோடைச்சூரியனால் மட்டுமே முடியும். வியர்வைதானே துடைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம் என்று எளிதாக ஒதுக்கிவிட முடியாதே இந்தப் பிரச்னையை. ஏனென்றால் வியர்வை அதிகமாக வெளியேற வெளியேற, நம் உடலில் இருந்து, உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்டுகளும், நீர்சத்துகளும் சேர்ந்தே அல்லவா அவற்றோடு வெளியேறுகின்றன!.

மனிதன் நாள் முழுதும் ஆற்றலுடன் ஃப்ரெஷ் ஆகச் செயல்பட இவைதானே முதல் தேவை. கோடையில் வியர்வையால் நம் உடல் வெளியேற்றும் இந்த நீர்சத்தை நாம் திரும்பப்பெற ஏதாவது வழி உண்டா என்றால்… ஆம், அதற்காகத்தான் உங்களை உற்சாகமூட்டி இழந்த நீர்ச்சத்தையும், மினரல்களையும், விட்டமின்களையும், எலக்ட்ரோலைட்டுகளையும் திரும்பப் பெறுவதற்காகவே குளிர்பான மார்க்கெட்டில் புது வரவாய் வந்திருக்கிறது செவன் அப் ரிவைவ்.

இதோ கோடையில் செவன் அப் ரிவைவுடன் சுட்டெரிக்கும் சூரியனை எப்படி எல்லாம் எளிதாகச் சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்...

பண்டிகைக் காலங்களில்...

தமிழகத்துக்கு தமிழ் புத்தாண்டும், சித்திரைத் திருவிழாவும் எப்போதுமே கடும் கோடையான ஏப்ரல், மே மாதங்களில் தான் வரும். சுட்டெரிக்கும் வெயிலால் பாரம்பரிய பண்டிகைகளை சந்தோஷமாகக் கொண்டாடாமல் விட்டுவிட முடியுமா? திருவிழா என்றால் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கும், நண்பர்களைச் சந்திக்கவேண்டி இருக்கும், இன்னும் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும். திருவிழா, புத்தாண்டு என்றால் அப்படித்தான்... ஆனால் இந்த அடித்துப் பிளக்கும் வெயிலை என்ன செய்ய? ஒரே ஒரு உபாயத்தைத் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை, வெயில் கொடுமையைச் சமாளிக்க செவன் அப் ரிவைவ் பாட்டிலை கையோடு எடுத்துக்கொண்டு சென்றால் பிரச்னை தீர்ந்தது. ஆம், நீங்கள் செல்லுமிடமெல்லாம் பானம் தீரத் தீர ஜில்லென்ற செவன் அப் ரிவைவ் பாட்டில்களை கையோடு எடுத்துச்செல்ல மறக்காதீர்கள்.

வேலை நேரங்களில்...

நீங்கள் காய்கறி வாங்க கடைக்குப்போவதாக இருந்தாலோ, அல்லது உங்களது வேலையே நகரெங்கும் சுற்றி அலையும் விற்பனைப் பிரதிநிதி வேலையாக இருந்தாலோ, எப்படியானாலும் நிச்சயம் நீங்கள் வெயிலில் அலைந்துதான் தீர வேண்டும் எனில், வாடித் தெரியும் முகத்துடன் ஏன் அலைவானேன்? கையோடு செவன் அப் ரிவைவ் எடுத்துச் செல்லுங்கள். அல்லது உங்கள் அலுவலகப் பையில் எப்போதும் செவன் அப் ரிவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். நாள் முழுதும் உற்சாகம் குறையாத உங்கள் ஃப்ரெஷ்னஸ்க்கு செவன் அப் ரிவைவ் கியாரண்டி!

பயணத்தில்...

நமது வாழ்வில் பயணங்களுக்கு எப்போதுமே மிக முக்கியமான பங்குண்டு. சிலர் வேலைக்காகப் பயணிப்பார்கள், சிலர் கோடை விடுமுறையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க குளிச்சியான ஊர்களைத் தேடி இடம் பெயர பயணிப்பார்கள். சிலருக்கோ உத்யோகமே பயணம்.. பயணம்... பயணம் மட்டுமே என்பதாக இருக்கும். ஆக மொத்தத்தில் பயணம் ஒன்றுதான், ஆனால் அதற்கான காரணங்களும், அது தரும் பலன்களும் பலப் பல. ஆக, பயணம் என்பது நமது வாழ்வில் தவிர்க்கமுடியாத விஷயம். எனவே, உங்களது பயண நேர நண்பனாகவும் நீங்கள் செவன் அப் ரிவைவை உடன் வைத்துக்கொள்ளலாம். வெயிலாலும், பயண அலுப்பாலும் இழக்கப்போகும் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை இவை மீட்டுத் தரும்.

கோடையில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல... எப்போதும் செவன் அப் ரிவைவ் உங்களுடன் இருக்கிறதா? அதை மட்டும் உறுதி செய்துகொள்ளுங்கள். முழு உடலையும் ரீசார்ஜ் செய்துகொள்ள எப்போதும் உடனிருக்கட்டும் செவன் அப் ரிவைவ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com