இன்றைய சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா?

இன்று இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை
இன்றைய சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா?

இன்று இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதனை இந்தியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் காணலாம். இன்று இரவு தோன்றும் இத கிரகணம் இரவு 10.20 மணி முதல் நள்ளிரவு 12.05 வரை ஏறத்தாழ 2 மணி நேரம் வானில் நிகழும்.  இச்சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என, இந்திய வான் இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நேரப்படி இன்றிரவு 9 மணி ஐம்பத்து இரண்டு நிமிடங்களுக்கு நிலவின் மீது பூமியின் நிழல் விழத் தொடங்குகிறது. சந்திர கிரகணத்தின் போது தோன்றும் முழு நிலவை தென்னிந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதி, வட அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி நிகழும் சூரிய கிரகணம், தமிழகத்தின் வழியாக கடந்து செல்லும் என இந்திய வான் இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி செல்வேந்திரன் கூறியுள்ளார்.  டிசம்பர் 26 ஆம் தேதி தோன்றும் முழு சூரிய கிரகணமானது தென் தமிழக நகரங்களான, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் வழியாக கடக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, நிலவின் மீது பட வேண்டிய சூரியக் கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும்போது சந்திர கிரகணம் உருவாகிறது. அப்போது பூமியின் நிழல் நிலவின் மீது படர்வதால் இருள் சூழ்ந்தது போன்று சந்திரன் காட்சியளிக்கும். சூரியன், நிலா, பூமி ஆகிய மூன்று கோள்களும் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

சென்னை பிர்லா கோலரங்கில் பகுதிநேர சந்திர கிரகணத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளாமல் வெறும் கண்களால் சந்திர கிரகணத்தைக் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் சந்திர கிரகணத்தை தொலை நோக்கி மூலம் காண்பதற்கான ஏற்பாடு அறிவியல் மையத்தில் செய்யப்பட்டுள்ளன.

கிரகணம் பிடிக்கும் போது இவற்றைத் தவிர்த்துவிட வேண்டும்

  • கடவுள் சிலைகளை கிரகண சமயத்தில் தொடக் கூடாது.
  • உணவு அல்லது பழரசம் என எதையும் உட்கொள்ளக் கூடாது. மீறி சாப்பிட்டால் அது உடலில் சேராது. குழந்தைகள், வயோதிகர்கள், நோயுற்றவர்கள், கர்ப்பிணிகளுக்கு இந்த வரைமுறை கிடைக்காது.
  • கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாது. ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.
  • கிரண காலத்தில் தூங்கக் கூடாது. நகம் வெட்டுதல் அல்லது உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.
  • எவ்வித சமைத்த உணவையும் வீட்டில் வைத்திருக்க வேண்டாம். சட்னி, தயிர், பால், ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களை தர்ப்பைப் புல்லின் மேல் வைத்திருந்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்களின் கவனத்துக்கு

  • கர்ப்பிணிப் பெண்கள் சந்திர கிரகணத்தைப் பார்க்கக் கூடாது.
  • கிரகண நேரத்தில் வெளியே வரக்கூடாது. வீட்டினுள் இருப்பது நலம்.
  • கிரகணம் தொடங்குவதற்கு முன்பும் முடிந்த பின்னரும் குளிக்க வேண்டும்.
  • கிரகணத்தின் போது உறங்கக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com