ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த கட்ட பரபரப்பான முயற்சி என்ன?

ஃபேஸ்புக்கின் அடுத்தகட்ட அதிரடி நகர்வு என்ன தெரியுமா?
ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த கட்ட பரபரப்பான முயற்சி என்ன?

ஃபேஸ்புக்கின் அடுத்தகட்ட அதிரடி நகர்வு என்ன தெரியுமா? இனி அது  யூ டியூப் மற்றும் டிவி சானல்களுக்குப் போட்டியாக களம் இறங்கப் போகிறது. 

ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக வீடியோக்களை வெளியிடப் போகிறது. கூடிய விரைவில் இது முழுவீச்சில் நடைபெறும்.  ஃபேஸ்புக் பயனாளர்கள் மிக விரைவில் பலவிதமான ஜானர்களில் வீடியோக்களை நேரடியாக தளத்திலோ அல்லது டவுன்லோட் செய்தோ பார்க்க முடியும்.  இதில் சில சமூக வலைதளங்களால் நிதியுதவி செய்யப்பட்ட வீடியோக்களும் உள்ளன.

தற்போது, ஃபேஸ்புக்கில் வெளிவரும் வீடியோக்கள் விளம்பர வகையானது. அல்லது பயனற்ற பொழுதுபோக்கு வீடியோக்கள் அல்லது காமெடியான சில தொகுப்புக்கள் மட்டுமே. ஆனால் இப்புதிய சேவையின் மூலம், ஃபேஸ்புக் மற்றும் வீடியோ தயாரிப்பாளர் ஆகிய இரண்டு தரப்பினருக்கும் வருமானம் பெறுக அதிக வாய்ப்புக்கள் உள்ள வகையில் உருவாக்கப்படும்.போலவே வீடியோக்களை நாம் பார்க்கும் போது விளம்பரங்களையும் பார்க்க வேண்டிய நிலை இங்கும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ம் ஆண்டில் இருந்து பேஸ்புக் தன்னுடைய நிகழ்ச்சிகளை நேரடியாகவே பயனாளர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.  2018-ம் ஆண்டிலிருந்து விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது. விளையாட்டு, பெண்கள் சிறப்புப் பகுதிகள், குழந்தை பராமரிப்பு மற்றும் வன உயிரினங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை பயனாளர்களுக்கு வழங்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது.  வாக்ஸ் மீடியா, பஸ்ஃபீட், ஏடிடிஎன், க்ரூப் நைன் மீடியா உள்ளிட்ட நிறுவனங்களுடன் புதிய நிகழ்ச்சிகளை தயாரிக்கவும் ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com