பாகம்-26: பழங்குடியினரின் நலவாழ்வுக்காக மத்திய அரசின் கட்டமைப்புத் திட்டங்கள்

பழங்குடியினரின் நலவாழ்வுக்காக மத்திய அரசு பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.  
பாகம்-26: பழங்குடியினரின் நலவாழ்வுக்காக மத்திய அரசின் கட்டமைப்புத் திட்டங்கள்


பழங்குடியினரின் நலவாழ்வுக்காக மத்திய அரசு பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. 

வனபந்து கல்யாண் யோஜனா (vanbandhu kalyan yojana)

அறிமுகம்

பழங்குடியினரின் நலவாழ்வுக்காக மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் வனபந்து கல்யாண் யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பழங்குடிமக்களுக்குத் தேவைப்படுகின்ற வளர்ச்சித்திட்டங்களை – அவற்றைச் செயல்படுத்தினால் எதிர்ப்பார்க்கிற பயன் கிடைக்கின்ற வகையிலான திட்டங்களைச் செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும். மத்திய / மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் மூலம் பழங்குடிமக்களைச் சென்றடைய வேண்டுமென விரும்புகின்ற நன்மைகளும் சேவைகளும் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கம்.

நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியல்

1. ஆதியன்

2. அரநாடன்

3. எரவல்லன்

4. இருளர்

5. காடர்

6. கம்மரா(கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி

மாவட்டத்தின் செங்கோட்டை தாலூக்கா தவிர்த்து)

7. கனிகரன், கனிக்கர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும்

திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை தாலூக்காவில்)

8. கனியன், கன்யன்

9. காட்டு நாயக்கன்

10. கொச்சு வேலன்

11. கொண்டா கபுஸ்

12. கொண்டா ரெட்டி

13. கொரகா

14. கோட்டா (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி

மாவட்டத்தின் செங்கோட்டை தாலூக்காவில்)

15. குடியா, மேலக்குடி

16. குறிச்சான்

17. குரும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)

18. குருமன்

19. மஹா மல்சார்

20. மலை அரையன்

21. மலைபண்டாரம்

22. மலை வேடன்

23. மலைக் குறவன்

24. மலசார்

25. மலையாளி (தர்மபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம்

மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்)

26. மலையகண்டி

27. மன்னன்

28. முடுகர், முடுவன்

29. முதுவன்

30. பள்ளேயன்

31. பள்ளியன்

32. பள்ளியார்

33. பனியன்

34. ஷோலகா

35. தோடர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி

மாவட்டத்தின் செங்கோட்டை தாலூக்கா தவிர்த்து)

36. உரளி

திட்டத்தின் நோக்கங்கள்

  • பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல்

  • கல்வித்தரத்தை மேம்படுத்துதல்

  • படிங்குடியின குடுபங்களுக்கு தரமான தொடர்வேலைவாய்ப்புகள் அளித்தல்

  • கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புதல்

  • பழங்குடியினரின் மரபையும் பண்பாட்டையும் பேணிக்காத்தல்

அங்கங்கள்

  • பழங்குடியினர் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி

  • அனைவருக்கும் வீட்டு வசதி

  • அமைவருக்கும் சுகாதார வசதியும் பாதுகாப்பான குடிநீர் வசதியும் செய்து தருதல்

  • பழங்குடியினர் வசிப்பிட நிலங்களின் தன்மைக்கு ஏற்றவாறு நீர்ப்பாசன வசதி செய்தல்

  • அருகில் உள்ள ஊர்களுக்கு / நகரங்களுக்கு எளிதாகச் சென்றுவர தரமான சாலை வசதிகள்

  • அனைவருக்கும் மின்சார வசதி

  • பழங்குடியினர் பகுதிகளில் விளையாட்டுகளை ஊக்கப்படுத்துதல்

உத்திகள்

பழங்குடியினர் நலத்துறை, ஒருங்கிணைந்த பழங்குடியினர் வளர்ச்சி முகமை, ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றின் மூலமாக பழங்குடியினருக்கான பொருள்களையும் சேவைகளையும் வழங்குவதை உறுதி செய்ய அந்த முகமைகள் யாவற்றையும் வலுப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படும்.

கானக சிறு உற்பத்திப்பொருள்கள்

பழங்குடியினர் கானகங்களில் இருந்துதிரட்டும் / சேகரிக்கும் சிறு உற்பத்திப் பொருகளின் தேவை குறித்து வியாபாரிகளே நிர்ணயம் செய்கின்றனர். சந்தையில் நிலவும் தேவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அதனால் அவர்களுக்கு நல்ல விலையும் கிடைப்பதில்லை. எனவே பழங்குடி மக்களுக்கு உரியவிலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக குறைந்தபட்ச விற்பனை விலை சில மாநிலங்களில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலைகள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்கும் இணைய வழித்தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

சேர்க்கப்பட்ட உற்பத்திப்பொருள்கள்

கீழ்க்கண்ட 12 பொருள்களுக்கு விலை நிர்ணயம் தற்போது செய்யப்படுகிறது.

  1. டெண்டு இலைகள்

  2. மூங்கில்

  3. மதுவாவிதைகள்

  4. குங்கிலியஇலை

  5. குங்கிலியவிதை

  6. அரக்கு

  7. சிரோஞ்சி

  8. தேன்

  9. நெல்லி

  10. புளி

  11. கோர்ந்து

  12. புங்கம்

பழங்குடியினருக்குப் பாரம்பரியமாக உள்ள உரிமைகளைப் பாதுகாக்கும் வன உரிமைகள் சட்டம் பற்றியும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The Ministry of Tribal Affairs, a branch of Government of India

Shastri Bhawan, Dr. Rajendra Prasad Road, New Delhi - 110 011


தொடரும்……

Lr. C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com