குழந்தைக்காக 30 லிட்டர் தாய்ப்பாலை சேகரித்து வைத்த இளம் தாய்! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!

இன்றைய பாலூட்டும் இளம் தாய்மார்களின் முக்கியப் பிரச்னையே; பிறந்த குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பால் சுரப்பதில்லை என்பது தான்.
குழந்தைக்காக 30 லிட்டர் தாய்ப்பாலை சேகரித்து வைத்த இளம் தாய்! இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!

சமீபத்தில் குழந்தைப் பேறடைந்த புத்தம் புது இளம் அம்மா ஒருவர், தனது கைக்குழந்தையைச் சுற்றிலும் இதய வடிவில் 30 லிட்டர் பால் பாக்கெட்டுகளை அடுக்கி, இதிலிருப்பது முற்றிலும் சுத்தமான தாய்ப்பால். புதிதாய் பிறந்த என் குழந்தைக்காக நான் நாள் தோறும் மறவாமல் செயற்கை பம்ப் கருவி மூலம் சேகரித்து வைத்த தாய்ப்பால் இது! ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை என் குழந்தைக்கு தாய்ப்பால் தர வேண்டும் என்பதை என்னால் எப்போதும் மறக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது. அது நள்ளிரவாக இருந்தாலும் கூட என் குழந்தையின் தேவையை நான் பூர்த்தி செய்தாக வேண்டும் என்று விரும்புவதால் தாய்ப்பாலை தேதி வாரியாக சேகரித்து குளிர்ச்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வருகிறேன். என்ற தகவலோடு இளம் ஆப்ரிக்க அம்மா ஒருவர் தனது குழந்தையுடன், தான் சேகரித்த தாய்ப்பால் பாக்கெட்டுகளையும் சேர்த்து புகைப்படமெடுத்தி முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படம் 1000 முறைகளுக்கும் மேலாக பகிரப்பட்டு தற்போதைய இணைய வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் முயற்சியாக இருப்பதோடு, குழந்தைக்கு என்றென்றும் ஆரோக்யமானது தாய்ப்பால் மட்டுமே! அதற்காக அன்னையர் எப்பாடு பட்டாவது தாய்ப்பால் ஊட்டுவதை தங்களது வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகக் கொள்ள வேண்டும் என்று உபதேசிக்கும் வண்ணமும் இருப்பதால் இந்தப் புகைப்படம் ஆச்சர்யமூட்டுவதோடு ஆனந்தம் கொள்ளச் செய்வதாகவும் இருக்கிறது.

அதுமட்டுமல்ல இன்றைய பாலூட்டும் இளம் தாய்மார்களின் முக்கியப் பிரச்னையே; பிறந்த குழந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பால் சுரப்பதில்லை என்பது தான். அதற்குக் காரணம் மரபியல் ரீதியாகவும் இருக்கலாம், அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களாகவும் இருக்கலாம். ஆனால் இன்றைய இளம் அம்மாக்களின் பொதுவான பிர்ச்னைகளில் இதுவும் ஒன்று. அதனால் தான் பெரும்பாலான குழந்தைகள் லாக்டோஜன் அல்லது நாண் போன்ற குழந்தை உணவுப் பானங்களை நம்பி இருக்க வேண்டியதாகி விடுகிறது. அவை குழந்தையின் அப்போதைய பசியைப் போக்குமே தவிர, குழந்தையின் போஷாக்கு, நோய் எதிர்ப்பு சக்தி, இயல்பான வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்களில் எல்லாம் பெரும்பாலும் இயற்கையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. அவை எப்போதும் தாய்ப்பாலுக்கு ஈடானவையும் அல்ல. ஆனாலும் வேறு வழியின்றி பெரும்பாலான அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை லாக்டோஜனை நம்பி வளர்க்கவேண்டியதாகி விடுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்தப் புதிய அம்மா சொல்லும் ஆலோசனை என்ன தெரியுமா?

  • ஒவ்வொரு வாரமும் பால்சுரப்பை அதிகரிக்கும் தன்மை கொண்ட குக்கீஸ்களை தயாரித்து சாப்பிடுங்கள். (இந்தியாவில், குக்கீஸ் தயாரிக்கத் தெரியாதவர்கள் நம்மூரில் கிடைக்கும் ரஸ்க் வகைகளை வாங்கி வைத்துக்கொண்டு சாப்பிடலாம். அது பால் சுரப்பிற்கு உதவும் என்பது தொன்று தொட்டதொரு நம்பிக்கை.)
  • தினமும் காலையில் ஓட்ஸ் கலந்த உணவை எடுத்துக் கொள்ள தவறக் கூடாது.
  • தண்ணீரிலேயே சதா சர்வ காலமும் கிடக்கும் மீன் போல உங்கள் உடல் எடைக்குத் தக்க அதிகமாக நீர் அருந்த மறக்காதீர்கள். 

இதையெல்லாம் நான் முறையாக கடைபிடித்ததால் மட்டுமே என்னால் கடந்த 2 மாதங்களில் என்னால் என் குழந்தைக்கென 30 லிட்டர் பாலை பம்ப் செய்து சேகரித்து வைக்க முடிந்தது. இப்போது நான் வேலை நிமித்தமாக என் குழந்தையின் அருகில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டாலும் கூட அவளுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிகுந்த தாய்ப்பால் கிடைப்பதில் எந்த விதமான தடங்கலும் இருக்கப் போவதில்லை என எண்ணும் போது நிம்மதியாக உணர்கிறேன். சிலர் என்னிடம், குழந்தைக்குத் தேவையான தாய்ப்பாலை என்னால் ஊட்ட முடிவதைக் கண்டு, நீ அதிர்ஷ்டசாலி என்று பாராட்டுகிறார்கள். உண்மையில் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது; நான் அதிர்ஷ்டசாலி அல்ல, நான் ஆசிர்வதிக்கப் பட்டவள் என்பது தான் உண்மை. ஏனென்றால் நான் எங்கிருந்தாலும் என் குழந்தையின் உணவுத் தேவையை மறப்பதே இல்லை. அவளுக்கு பாலூட்டத் தான் கடவுள் எனக்கு உடலை அளித்திருக்கிறார் என்று எண்ணிக் கொள்கிறேன். என்கிறார் அந்தக் கருப்பினத் தாய்.

இளம் அம்மா நியா...

நம்மால் முடிந்தது; தன் குழந்தையின் ஆரோக்யமான வளர்ச்சிக்காக இத்தனை யோசித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த இளம் அம்மா நியா மற்றும் அவரது ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை நேயா இருவரையும் மனதார வாழ்த்துவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com