அன்புள்ள ரஜினிகாந்த்.. விவசாய பிரச்னைக்கு தாங்கள் மனது வைத்தால் போதும்

விவசாய பிரச்னைகக்கு தீர்வு காண நீங்கள் தயார் என்றால் உங்களுக்கு உதவ நாங்கள் தயார் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர் குழுவினர் குரல் கொடுத்துள்ளனர்.
அன்புள்ள ரஜினிகாந்த்.. விவசாய பிரச்னைக்கு தாங்கள் மனது வைத்தால் போதும்

விவசாய பிரச்னைகக்கு தீர்வு காண நீங்கள் தயார் என்றால் உங்களுக்கு உதவ நாங்கள் தயார் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர் குழுவினர் குரல் கொடுத்துள்ளனர்.

ரஜினிகாந்த்  அவர்கள்  விவசாயிகள் பிரச்னை பற்றி   தலைவர் பேரவை என்கிற மொபைல் ஆப்-ல் பதிவு செய்திருக்கின்றார்.

நாம் உண்ண உணவளித்து நம்மை உயிர் வாழவைக்கும் விவசாயிகள் தெய்வத்திற்கு சமமானவர்கள்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்"

- என்ற குறள், உழவுத்தொழில் உயர்வை நமக்கு உணரவைத்தது. அவ்வளவு உயர்ந்த உழவுத்தொழில் செய்யும் விவசாயிகளின் பிழைப்பு இன்று கேள்விக்குறியாக இருப்பது ஏன்? இந்த சாபக்கேட்டிலிருந்து விடுபட வேண்டும் என்றால் விஷயத்தை ஆழமாக ஆராய்ந்து அறிவியல் சார்ந்த புதிய உக்திகளின் மூலம்தான் நல்லதொரு தீர்வை நாம் பெறமுடியும் - என்கிறவாறு செல்கிறது இந்தப்பதிவு.

தமிழகத்தை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் குழு 16 வருட முயற்சியின் மூலம்  தகவல் தொழில்நுட்பத்தின்   அபார வளர்ச்சியினை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்தி தரம், உற்பத்தி, நிகர லாபம் அதிகமாக்குதல்  மற்றும் விவசாயம் செய்வதில்  உள்ள  கடின  தன்மையை இலகுவாக்கும், ஒரு புது  இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கி, மாதிரி அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தி, அரசு உயர்மட்ட குழுவின் சிறப்பான மதிப்பீடுகளை பெற்றிக்கின்றோம்.  

திட்டமிடுதலில் தொடங்கி  விதை முதல்  விற்பனை வரையிலான சேவைகளை, கிராம அளவில் செயல்படும் விவசாய  மேலாண்மை மையத்தில் குறு, சிறு விவசாயிகளும் பெற்று பலன் பெற முடியும். இந்தத்தீர்வை பெரிய அளவில் அரசாங்கத்துடன் சேர்ந்து விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தங்களது கருத்தை வரவேற்கின்றோம். நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். தங்கள் நல்லெண்ணம் ஈடேற, சில முக்கியமான தவல்களை தங்கள் சீரிய கவனத்திற்கு கொண்டு வருவது கடமை என்றெண்ணுகின்றோம்:

விவசாயிகள் போராட்டங்கள் அதன் உச்சத்தை எட்டியிருக்கின்றன. நாடாளுமன்றத்தை விவசாயிகள் முற்றுகையிட்டது அதன் வெளிப்பாடு. இனிமேல் விவசாயப் பிரச்னையை தவிர்க்கவோ, தள்ளிப்போடவோ முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆனால் அரசின் செயல்பாட்டினை கூர்ந்து கவனிப்போமேயானால், அது நம்பிக்கையளிக்கக்கூடிய அளவில் இல்லை.

  • கஜேந்திர சிங் என்கிற விவசாயி 2015-ம் ஆண்டு டெல்லியில் நடந்த பேரணியொன்றில் அதிர்ச்சியளிக்கும் விதமாக, தற்கொலை செய்துகொண்டார். இது ஊடகங்களால் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நாடு அதிர்ச்சியில் உறைந்தது. நாடாளுமன்றம் மூன்று நாட்கள் இது குறித்து விவாதித்தது. இறுதியில் பேசிய பிரதமர், "விவசாயப் பிரச்னை பல ஆண்டுகள் பழமையான, ஆழமான, பரந்திருக்கும் பிரச்னை. அதை தீர்ப்பதற்கு தீர்வுகளை நான் வரவேற்கின்றேன்" என்று வேண்டுகோள் விடுத்தார். சில நாட்களில், ஆறு மாத காலத்திற்குள் விவசாயத் தீர்வை உருவாக்கித் தர விவசாய வல்லுனர்களிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கைக்களுக்கான பலன் என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
  • சமீபத்தில், வெங்காயவிலை கட்டுக்கடங்காமல் சென்றபோது, நுகர்வோர் துறை அமைச்சர் "வெங்காய விலையை கட்டுப்படுத்தும் தீர்வு அரசிடம் இல்லை. தீர்வு இருந்தால் வரவேற்கின்றேன்" என்று கூறியிருக்கின்றார்.
  • பிரதமரின் கோரிக்கைக்கும், மத்திய நுகர்வோர் துறை அமைச்சரின் கோரிக்கைக்கும், எங்கள் தீர்வை சமர்ப்பித்தோம். ஆரம்பத்தில் ஒத்துக்கொண்ட அதிகாரிகள் பின் மௌனம் காக்கின்றனர். தீர்வின் தகுதி காரணமல்ல என்பது நிச்சசயம்.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசு விவசாயத்தீர்வை பன்னிரெண்டு பிரிவுகளாகப்பிரித்து, அவற்றின்கீழ் தீர்வுகளை வரவேற்கும் போட்டி  ஒன்றை அறிவித்திருக்கிறது. விவாசாயத்திற்கான  அடிப்படை தேவை ஓட்டுமொத்த, கிராம அளவில், அனைத்து விவசாயிகளால் எளிதில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தீர்வு தான் என்றிருக்கும்போது, அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எழுபது கோடி மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் உணவுத்தரம் மற்றும் பாதுகாப்பு, பதினைந்து லட்சம் கோடிக்குமேல் விவசாயக்கடன், மானியங்கள், பயிர்காப்பீடு போன்ற வகையில் ஒதுக்கீடு, உணவுப் பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி போன்ற மிக முக்கியமான விஷயங்களை உள்ளடக்கிய விவசாயத்திற்கான தீர்வை பல பிரிவுகளாகப் பிரித்து, போட்டிகள் மூலம் கண்டறிய முற்படுவது மற்றும் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைப்பது என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. ஏற்கனவே ஆபத்தான நிலையில் சென்றுகொண்டிருக்கும் விவசாயத்தை நிரந்தரமாக முடக்கிவிடும் சூழ்நிலையை  உருவாக்கிவிடும்.

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வது, மானியங்களை அதிகரிப்பது, விளைபொருள்களுக்கான குறைந்த பட்ச விலையை நிர்ணயிப்பது போன்றவை அரசிற்கு நிதிச்சுமையை அதிகரிக்கும், நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என அரசு கருதுவதில் தவறில்லை. ஆனால், நாம் முன்வைக்கக்கூடிய விதமான, முழு தீர்வை கிராம அளவில் செயல்படுத்திவிட்டு, விவசாயிகளை பலப்படுத்திவிட்டு  இவைகளை பரிசீலிக்க வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் தேவை நல்ல தரம், அதிக உற்பத்தி, உரிய விலை, விவசாயம் செய்வதில் உள்ள கடினத் தன்மையை இலகுவாக்குதல் மற்றும் வறட்சி, புயல் போன்ற இயற்கை சோதனைகளின் போது முழு இழப்பையும் ஈடுகட்டும் விதமான சிறப்பு பயிர்காப்பீடு என்பதே ஆகும். இவைகள் விவசாயிகளுக்கு எளிதில், கிராம அளவில், கிடைக்கும் விதமான ஒரு முழு தீர்வை அரசு ஏற்படுத்திக்கொடுத்துவிட்டால் விவசாயிகள் தற்கொலைகள், போராட்டங்கள், உணவு விலை ஏற்றங்கள், உணவுத்தரமின்மை போன்ற துரதிஷ்டமான நிகழ்வுகள் நாட்டில் நிகழாது. அதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வந்தாலும் தற்போது இருக்கும் கட்டமைப்பை கொண்டு இலக்கை அடைவது சாத்தியமில்லை. தேவை மாற்று அணுகுமுறை. அவற்றில் முக்கியமானது தகவல் தொழில் நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது.

விவசாயிகளுக்கான நிகர லாபத்தை சரியான அளவு பெறச்செய்வது (குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள்) மட்டும்தான் நதிநீர் இணைப்பு, அனைவருக்குமான முழு பயிர்காப்பீடு போன்ற முக்கியமான திட்டங்களுக்கு வழிவகுக்கும்.

அதற்கான 16 ஆண்டுகால உழைப்பு, அரசு உயர்மட்டக்குழுவினால் இந்திய விவசாயத்திற்கான தீர்வு என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும் ஒன்று, தாங்கள் கூறும் "சிஸ்டம் கெட்டுப்போயிருகிறது" என்கிற உண்மையினால் விவசாயிகளுக்கும் நாட்டிற்கும் பயன்படமுடியாமல் சிக்குண்டுள்ளது. பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல விடாமல் சில சக்திகள் தடுக்கின்றன. 

தங்கள் ஆன்மீக உணர்வும் நாட்டுப்பற்றும், விவசாயிகள் நலன் குறித்த சிந்தனையும் விவசாயிகளின் வாழ்க்கையை  காப்பாற்றும் என நம்புகின்றோம். விவசாயிகள் நலன், நாடு நலன் குறித்து தாங்கள் தொடர்ந்து பலதுறை வல்லுநர்களை சந்தித்து வருகின்றீர்கள்.  எங்கள் 16 ஆண்டுகால முயற்சி, தீர்வின் திறம், நாட்டுப்பற்று இவற்றின் அடிப்படையில் தங்களை சந்திக்கும் வாய்ப்பை வழங்க  வேண்டுகின்றோம். விவசாயப் பிரச்னைக்கான எங்கள் தீர்வை ஆராயுங்கள். தாங்கள் விரும்பும் பட்சத்தில் எவ்வித தடைகளையும் தாண்டி அது பிரதமரின் கவனத்திற்கு செல்லும். ஆறு லட்சம் கிராமங்களையும் உடனே சென்றடையும்.

நீங்கள் சொல்வது போல், சிஸ்டம் கெட்டுப் போயிருக்கும் காரணத்தால் மிக நேரடியாகப் பாதிக்கப்பட்ட விவசாய மற்றும் விவசாயிகளின் பிரச்னைக்கு முழு தீர்வு இருக்கும்போதிலும் அது செயல்படுத்த முடியாமல் அது தடைகளைச் சந்திக்கிறது. உங்கள் அரசியல் பிரவேசம் குறித்து நீங்கள் டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப் போகும் முன், எங்கள் செயல் திட்டத்தை ஒரு முறை பார்த்து, அதனை ஒரு அடிப்படைக் கொள்கையாக எடுத்து உங்கள் அரசியல் பிரவேசத்தை முன்னெடுத்தீர்களேயானால், உங்களோடு, விவசாயத் தோழர்களும் வீறு கொண்டு எழுவார்கள். விவசாயமும்தான்.

அரசியலுக்கு வரும் ரஜினிகாந்த் இதுவரை என்ன செய்துவிட்டார் என்ற ஒட்டுமொத்தமான கேள்விகள் அனைத்துக்குமே இந்த செயல்திட்டம் பதிலாகவும் அமைந்து விடக் கூடும். ஒட்டு மொத்த சிஸ்டத்தையும் ஒரே நொடியில் மாற்றி விட முடியாது என்றாலும், எங்களிடம் இருக்கும் இந்த செயல் திட்டத்தால் நிச்சயம் விவசாய பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு கிட்டிவிடும். எனவே இதற்காக நீங்கள் செலவிடும் ஒரு சில நொடிகள் கூட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தாங்கள் போருக்கு தயாராகுங்கள் என்று அறைகூவல் விடுத்தபோது, தினமணி இணையதளம் வழியாக தங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். அதில் தீர்வு குறித்து கூறப்பட்டிருக்கிறது. அதன் லிங்க் தங்கள் கனிவான பார்வைக்கு:  http://tinyurl.com/y7zwb999

Rm  திருச்செல்வம்,
Originator  & Project  Director
Mission IT-rural
Email: thiru@it-rural.com; thirurm@gmail.com
Mobile: 98403 74266
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com