கட்டுரை போட்டியில் ஜெயித்தால் நியூயார்க், பாஸ்டன் இலவச டூர் போகலாம்!

இந்தப் போட்டி குறித்து மேலதிக விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்புவோர் ManyLanguagesOneWorld.ELS.edu  எனும் இணையதளப் பக்கத்துக்குச் செல்லவும்.
கட்டுரை போட்டியில் ஜெயித்தால் நியூயார்க், பாஸ்டன் இலவச டூர் போகலாம்!

ELS எஜுகேஷனல் சர்வீஸ், இங்க் எனும் அமைப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது. தொடர்ந்து நான்காம் வருடமாக ஐ,நா வுடன் இணைந்து இப்போட்டியை இந்நிறுவனம் நடத்தி வருகிறது. போட்டியில் ஜெயிப்பவர்கல் ஐ.நா வின் உலக இளைஞர் சங்கமத்தில்( UN Goobal youth forum 2017) கலந்து கொள்ளலாம். வெற்றி பெறுபவர்களின் பயணம் மற்றும் உணவு உட்பட அனைத்து செலவுகளையும் இந்நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். கட்டுரைக்கான தலைப்பு “பல மொழிகள், ஒரே ஒரு உலகம்” 

இந்தக் கட்டுரைப் போட்டி மற்றும் ஐ.நா உலக இளைஞர் சங்கமத்தின் பிரதான நோக்கம் உலக நாடுகளில் பன்மொழிக்கொள்கையை ஆதரிப்பதும், இதுவரை ஐ.நா அங்கீகரித்த அதிகாரப்பூர்வ மொழிகளான அரபி, சைனீஸ், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ரஷியன், மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட ஆறு மொழிகளும் தொடர்ந்து சர்வ தேச அளவில் ஏற்படுத்தி வரும் தாக்கம் போன்றவை பற்றி விவாதிப்பதுமே எனலாம்.

ஒவ்வொரு மொழியிலிருந்தும் 10 நபர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். வெற்றிபெற்றவர்களின் அனைத்துப் பயணச் செலவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு  ஜூலை மாதம் நியூயார்க் மற்றும் பாஸ்டன் நகருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். 
கட்டுரைகள் சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்: மார்ச் 16

இந்தப் போட்டி குறித்து மேலதிக விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்புவோர் ManyLanguagesOneWorld.ELS.edu  எனும் இணையதளப் பக்கத்துக்குச் செல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com