தமிழக அரசின் எரிசக்தித் துறை தொடர்பான அறிவிப்புகள்!

தமிழக அரசின் எரிசக்தித் துறை சார்பில் வெளியான அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு
தமிழக அரசின் எரிசக்தித் துறை தொடர்பான அறிவிப்புகள்!

சென்னை: தமிழக அரசின் எரிசக்தித் துறை சார்பில் வெளியான அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

1. விவசாய பயன்பாட்டிற்கான சூரியமின்சக்தி நீர் பம்பு மாதிரி திட்டம் மாநிலம் முழுவதும் 5, 75 மற்றும் 10 குதிரைத்திறன் (hp) கொண்ட மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாத (off grid) 1000 எண்ணிக்கை சூரிய மின் சக்தி நீர் பம்புகள், தமிழக அரசின் 40 சதவீத மானியம், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் 20 சதவீத மானியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 30 சதவீத மானியம் மற்றும் விவசாயிகளின் பங்காக 10 சதவீதம் என்ற அடிப்படையில், இலவச விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்து, பதிவு மூப்பு பட்டியல் வரிசையில் காத்திருந்து, மூப்பு பட்டியலில் இருந்து தங்களது விண்ணப்பத்தை நீக்கிக் கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் வேளாண்மை துறையுடன் ஒருங்கிணைந்து வழங்கப்படும்.

2. விரைவு (Tatkal) விவசாய மின்னிணைப்பு வழங்கல் திட்டம் விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலிலுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின்னிணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம் 5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூபாய் இரண்டு இலட் சத்து ஐம்ப தாயிரம் , 7 - 5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ பாய் இர ண் டு இ ல ட் ச த் து எழுபத்தைந்தாயிரம் மற்றும் 10 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூபாய் மூன்று இலட்சம் வீதம் ஒரு முறை கட்டணம் செலுத்தும் 10,000 விண்ணப்பதாரர்களுக்கு 6 மாத காலத்திற்குள் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

3. சூரியசக்தி மின்னழுத்த பூங்கா
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையினால் மாநிலத்திலேயே முதல்வகையான 500 மெகாவாட் திறன் கொண்ட சூரிய பூங்கா ஒன்று தனியார் நிறுவனம் மூலம் நிறுவ உதவி செய்யப்படும்.

4. நேரடிபணிநியமனம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், 2017-18 ஆம் ஆண்டில் 300 உதவி பொறியாளர்/மின்னியல், 25 உதவி பொறியாளர்/ சிவில், 300 தொழில்நுட்ப உதவியாளர்/ மின்னியல், 400 கள உதவியாளர், 250 இளநிலை உதவியாளர் (கணக்கு) மற்றும் 300 கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை பதவிகளுக்கான தகுதியான நபர்கள் வெளிப்படையான (Transparent) முறையில் எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இன இட ஒதுக்கீடு அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

5. மின்பகிர்மான அமைப்பை மேம்படுத்துதல்

  • அ) திருவள்ளூர் மற்றும் பல்லடத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மின் பகிர்மான வட்டங்கள் ரூபாய் 70 இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
  • ஆ) திருமழிசை, திட்ட க் குடி மற்றும் ஆலங்குடியை தலைமையிடமாகக் கொண்டு ரூபாய் 5.50 கோடி மதிப்பீட்டில் புதிய மின் பகிர்மான கோட்டங்கள் உருவாக்கப்படும்.
  • இ) அந்தியூர் வட்டம் பர்கூரில் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின் பகிர்மான பிரிவு அலுவலகம் உருவாக்கப்படும்.
  • ஈ) கிண்டியில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் அலுவலர்குடியிருப்பு அமைக்கப்படும்.
  • உ) கொரட்டூரில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் பணியாளர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைக்கப்படும்.


6. மின்பகிர்மான சேவைகளை மேம்படுத்துதல்

  • அ) கைபேசி செயலி (Mobile App) வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
  • ஆ) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தற்போது இயக்கத்தில் உள்ள 1912 தொலைபேசி வாயிலான மின்தடை பழுது நீக்கும் சேவை ரூபாய் 60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டணமில்லா தொலைபேசி வசதியாக மாற்றப்படும்.
  • இ) தமிழகத்தில் குறு, சிறுதொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, 12 கிலோவாட் மின்தேவை வரையிலான புதிய மின்மாற்றி நிறுவ தேவைப்படாத புதிய தொழிற்சாலை மின் இணைப்புகளுக்கு 15 தினங்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.


7. புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கும் பணிகள்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகில் G66fluijL 9 60p6S (surface Condenser) புதுப்பித்தல், அலகு-5ல் தற்போது உள்ள காலாவதியான கட்டுப்பாட்டு அமைப்புக்கு (pro-control systems and Scanner system) பதிலாக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவுதல், அலகு-4-ல் தற்போது உள்ள மறு சூடாக்கி (Hot re-heater) அமைப்பை  முழுவதுமாக நீக்கி புது மறு சூடாக்கி அமைத்தல் மற்றும் நிலக்கரி கையாளும் பணியை மேம்படுத்த 2000 மெட்ரிக் டன் கொள்ளளவுடைய ஒரு இணைப்பு நிலக்கரி கொணரும் அமைப்பு (Link Coal Conveyor) நிறுவுதல் ஆகிய பணிகள் ரூபாய் 52 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

8. அம்மா பசுமை கிராமம்
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை வருடாந்திர அடிப்படையில் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து மின் சக்தியை பூர்த்தி செய்யும் விதமாக கிராமத்திலேயே கிடைக்கும் நிலையான பசுமை எரிசக்தி ஆதாரங்களை கொண்டு ‘அம்மா பசுமை கிராமம்’ ஒன்று நிறுவப்படும்.

9. நிலையானளிசக்திபயிற்சிமுன்முயற்சி
தமிழ்நாடு எரி சக்தி மேம்பாட்டு முகமையினால் அதன் உள் மற்றும் வெளி பங்குதாரர்களை இலக்காக கொண்ட நிலையான ஆற்றல் அமைப்புகளின் சமூக பொருளாதார, நிதி, நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு பகுதிகளுடன் தொடர்புடைய பாடங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சி திட்டமான நிலையான எரிசக்தி பயிற்சி முன்முயற்சியை அறிமுகப்படுத்தப்படும்.

C.P.சரவணன், வழக்கறிஞர் 
தொடர்புக்கு - 9840052475

Source: எரிசக்தித் துறை, மானியக் கோரிக்கை எண் - 14
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com