மனித கழிவுகளை சுத்தம் செய்ய சாம்பல்: ‘மீள்’ ஆவணப்படம்

விஷ்ணு பிரியா என்பவர் அரசு பள்ளிகளில் இருக்கும் கழிவரை சுத்திகரிப்பு பிரச்சனைகளை தீர்க்க வேண்டி ‘மீள்’ என்னும் ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.
மனித கழிவுகளை சுத்தம் செய்ய சாம்பல்: ‘மீள்’ ஆவணப்படம்


விஷ்ணு பிரியா என்பவர் அரசு பள்ளிகளில் இருக்கும் கழிவரை சுத்திகரிப்பு பிரச்சனைகளை தீர்க்க வேண்டி ‘மீள்’ என்னும் ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த இவர் ஒரு கட்டிடக் கலை கலைஞர் ஆவார், சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்காத, குறைந்த அளவு தண்ணீரை மட்டும் உபயோகிக்கும் கழிப்பறைகளை எவ்வாறு வடிவமைப்பது என்று அறிந்துக்கொள்ள இவர் முதலில் முயன்றுள்ளார்.  

அப்பொழுதுதான் பல அரசு பள்ளிகளில் கழிவறைகள் உபயோகிக்கும் நிலையில் கூட இல்லாமல், தண்ணீர் இல்லாதக் காரணத்தால் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் அவலம் இவருக்கு தெரிய வந்துள்ளது. குழந்தைகள் குறிப்பாக பெண்கள் இதனால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகுகிறார்கள். போதுமான கழிவறை வசதி இல்லாததால் பருவம் அடந்த பெண்கள் பலர் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். 

விஷ்ணு பிரியா இந்த விஷயத்தை ஆராய்ந்து, சுற்றுசூழலுக்கு உகந்த கழிவறைகளை வடிவமைத்து இந்த சிக்கலுக்கு முடிவுக்காண முயன்றுள்ளார். அதில் அவருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தன் நண்பர்களுடன் இணைந்து அவணப்படம் ஒன்றையும் இயக்கி இருக்கிறார். 

நண்பர்களின் பங்களிப்பால் சுய நிதியில் ‘மீள்’ ஆவணபடத்தை கழிவுப்பொருட்களின் பயணத்தை சொல்லும் வகையில் உருவாக்கியுள்ளார். ஒரு வருடமாக விஷ்ணு பிரியாவும் அவரது மற்ற நண்பர்களும் தமிழ்நாடு, அந்திரா, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பயணித்து கழிவுப்பொருட்களின் சுத்திகரிப்பு முறை பற்றி புரிந்துகொண்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் திருச்சி அருகே உள்ள முசிறியில் சில சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிவறைகள் அமைக்கபட்டிருக்கின்றன. இந்த படத்தின் டிரெய்லர் மனித மலத்தை தூய்மைப்படுத்த எவ்வாறு நீருக்கு பதிலாக சாம்பாலை உபயோகிப்பது என்பதைப்பற்றி காட்டவுள்ளது.  

சென்னை மாநகரின் அதிகபட்ச குப்பைகளை சேர்த்து வைத்திருக்கின்றன பல்லிக்கரனை குப்பைமேடும், கொடுங்கையூர் குப்பைமேடும். நாம் முறையாக கழிவுகளை அகற்றாவிட்டால் அது தண்ணீர் மாசுபாட்டிற்கு வழிவகுக்கும் என்கிறார் விஷ்ணு பிரியா. கழிவறை சுத்திகரிப்பிற்கே பல லட்ச லிட்டர் தண்ணீர் தினமும் சிலவாகுகிறது. 

லடாக்கில் உள்ள கழிவறைகள் பாரம்பரிய முறையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மிகக் குறைவான நீரை பயன்படுத்தும் வகையில் இருக்கின்றன. ஆகையில் இந்த படத்தில் அந்த கழிவறைகளை காட்ட திட்டமிட்டுள்ள விஷ்ணு பிரியா லடாக் மற்றும் டெல்லியில் படப்பிடிப்பை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். 

ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த படத்தை திரையிட நாடுமுழுவதும் திரையரங்குகளை தேடிவருகின்றனர். ‘மீள்’ என்பதற்கு காப்பாற்று என்பது பொருளாகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com