அம்மாக்கோண்டு ஆனாலும் ஓ.கே, சின்னப் பையன் என்றாலும் ஓ.கே; இந்தியப் பெண்களின் திருமண எதிர்பார்ப்புகள்!

பெரும்பாலான பெண்கள், கணவர்களால் தங்களது சுயமரியாதை காக்கப் பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். குறைந்தபட்சம் தங்களது கணவர்கள், தன்னை மாமியாரோடு ஒப்பிட்டு குறை கூறாமலாவது இருக்க வேண்டும் என்று 
அம்மாக்கோண்டு ஆனாலும் ஓ.கே, சின்னப் பையன் என்றாலும் ஓ.கே; இந்தியப் பெண்களின் திருமண எதிர்பார்ப்புகள்!

ஆன்லைன் திருமண இணையதளமான ‘பாரத் மேட்ரிமோனி’ சமீபத்தில் திருமணத்திற்கு உத்தேசித்திருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களிடையே ‘'Girls Are Ok, Are Guys,' எனும் தலைப்பில் ஒரு சர்வே நடத்தியது. அந்த சர்வேயில் திருமணத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடையே...

அம்மாக் கோண்டுவை கல்யாணம் செய்து கொள்வீர்களா?

படுக்கையறையை குப்பை மேடாக்கும் ஆண்களைத் திருமணம் செய்து கொள்வீர்களா?

உங்களை விட வயதில் இளைய ஆண்களைத் திருமணம் செய்து கொள்வீர்களா?

என்று 10 விதமான ‘Are you ok?  டைப் கேள்விகள் கேட்கப் பட்டன.

கிடைத்த முடிவுகள், இதுவரை இளம்பெண்கள் மற்றும், இளைஞர்களின் திருமணம் மற்றும் எதிர்கால குடும்ப வாழ்க்கை குறித்தான எதிர்பார்ப்புகள் இப்படித்தான் இருக்கும் என இந்தச் சமூகம் வரையறுத்திருந்த சில முடிவுகளை தகர்த்தெறிந்திருக்கிறது. ஆண்களும், பெண்களுமாக சுமார் 2,100 பேர் திருமணம் மற்றும் எதிர்கால குடும்ப வாழ்க்கை குறித்த தங்களது எதிர்பார்ப்புகளை இதில் பதிவு செய்திருக்கிறார்கள்... அவற்றில் பெரும்பாலான பதில்கள் சமூகம் இதுவரை வழக்கமென்று கொண்டிருந்த சில வகையான திருமண எதிர்ப்பார்ப்புகளை உடைத்தெறிந்திருக்கின்றன. அவற்றிலிருந்து உங்கள் பார்வைக்கு சில...

  • 97% இளம்பெண்கள், தங்களைக் காட்டிலும் வயது குறைந்த ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள தயாராகவே இருக்கிறார்கள்.
  • 80% இளம்பெண்கள், வருங்கால கணவன் சரியான ‘அம்மா பிள்ளையாக (அ) அம்மா கோண்டுவாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களை மணக்கத் தயார் என்கிறார்கள். அதனால் அந்தப் பெண்களுக்கு சுதந்திரமாக வாழ்வது பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை.
  • 95% வரன்கள், குறிப்பாக 60% பெண்கள், 35% ஆண்கள் கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதையே விரும்புகிறார்கள்.
  • 90% பெண்கள், ஆண்கள் தங்களது இருவருக்குமான தனியறையை குப்பைக் காடாக்கும் போது, அவர்களே அதை சுத்தமாக்கும் வரை அறைக்குள் நுழைய விரும்புவதில்லை.
  • பெரும்பாலும் பெண்களுடன் ஷாப்பிங் வர ஆண்கள் ஏன் விரும்புவதில்லை என்றால், அவர்களுக்கு பெண்கள் அளவுக்கு இம்மாதிரியான விசயங்களில் ரசனையோ, சகிப்புத் தன்மையோ, பொறுமையோ இருப்பதில்லை என்பதால் தான்.
  • பெரும்பாலான ஆண்கள் குறிப்பாக கணவர்கள் தங்களது மனைவிகளிடம் இருந்து டி.வி ரிமோட்டைக் கையில் வாங்க, உன் கையால் அருமையாக சாம்பார் சாதம் செய்து கொடேன், ஸ்ட்ராங்காக ஒரு டிகிரி காஃபி போட்டுக் கொடேன்... இப்போவே சாப்பிடனும் போல இருக்கு என்றெல்லாம் எமோஷனலாக பிளாக்மெயில் செய்து காரியம் சாதிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.. என்பது பெண்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.
  • இப்போதெல்லாம் ஆண்களும், பெண்களும் தங்களது வருங்கால வாழ்க்கைத் துணை விசயத்தில் தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. எதிர்பாலினரைப் பற்றிய அவர்களது மனப்பான்மை மற்றும் அடிப்படைப் புரிதல் எப்படி இருக்கிறது? என்பதற்கு மட்டுமே பெருமளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. என்று சர்வே முடிவுகளில் தெரியவருகிறது.
  • ஆண்கள் திருமணத்திற்குப் பிறகும் தங்களது பொழுதுபோக்குகளை விட்டுத் தருவதில்லை. திருமணத்திற்குப் பிறகும் கிரிக்கெட் ஆடுகிறார்கள் அல்லது தங்களது பிடித்த ஏதாவது ஒரு கலையை ஆர்வமாகக் கற்றுக் கொள்ள நேரம் ஒதுக்கிக் கொள்கிறார்கள்.
  • பெரும்பாலான பெண்கள், கணவர்களால் தங்களது சுயமரியாதை காக்கப் பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். குறைந்தபட்சம் தங்களது கணவர்கள், தன்னை மாமியாரோடு ஒப்பிட்டு குறை கூறாமலாவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
  • 85% பெண்கள், தங்களது பிறந்த வீட்டுக்கு அருகிலேயே புகுந்த வீடும் அமைந்தால் நல்லது என்று விரும்புகிறார்கள். ஏனெனில் திருமணத்திற்குப் பிறகும் தங்களது பெற்றோருடன் நேரம் செலவிடலாமே என்ற எண்ணத்தில் தான்.

இந்த சர்வே முடிவுகளால், இன்றைய தலைமுறை இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களின் மனதில் தங்களது வருங்காலத் துணை குறித்து எந்த விதமான எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன என்பதைப் பற்றி ஓரளவுக்குத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்கிறது ‘பாரத் மேட்ரிமோனி’ இணையதளம்.

Image courtsy: google.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com