தமிழக அரசின் உயர்கல்வி துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

சட்டப்பேரவையில் 2017-2018 ஆண்டிற்கான உயர் கல்வித்துறை 13 அறிவிப்புகள்– முழு விவரம்
தமிழக அரசின் உயர்கல்வி துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

சட்டப்பேரவையில் 2017-2018 ஆண்டிற்கான உயர் கல்வித்துறை 13 அறிவிப்புகள்– முழு விவரம்

1. அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு முதுகலை பட்டப் படிப்பு கல்வி உதவித் தொகை வழங்குதல்.(Grant of PG Assistantship to the Post Graduate Students studying in Government Engineering Colleges)

தொழில் நுட்ப தர மேம்பாட்டு  திட்டம் பகுதி -2-ன் கீழ், 3 அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் முதுகலை மாணாக்கர்களுக்கு மாதம் ரூ. 6000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.இத் திட்டம், 31.03.2017 உடன் முடிவுக்கு வயதுள்ளது. ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி பணியை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் முதுகலை பட்டப் படிப்பு மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.6000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இத் திட்டம் ஆண்டிற்கு ரூ. 8.29 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இதன் மூலம், அரசு பொறியியல் கல்லூரிகளின் மாணாக்கர்கள் ஆராய்ச்சி பணியை மேற்கொள்ளுவதற்கு ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

2. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் புதிய முதுகலை பாடப் பிரிவுகள் துவங்குதல். (Introduction of new PG courses in Government Engineering College, Bargur, Krishnagiri District)

பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தற்போது நான்கு இளங்கலை பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அதிகளவில் மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இத்தகைய மாணாக்கர்கள் ஆசிரியர் பணியை மேற்கொள்வதற்கும், சிறந்த வேலைவாய்ப்பினை பெறுவதற்கும் பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் M.E. Power Electronics and Drives, M.E. Applied Electronics, M.E. Computer Science and Engineering ஆகிய மூன்று புதிய முதுகலை பாடப்பிரிவுகள் 2017 – 18 ஆம் கல்வியாண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ. 3.58 கோடியாகும்.

3. அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரியில் படிக்கும் மாணாக்கர்களுக்கு மின் கற்றல் ஒளித்தொகுதிகள் (e-Learning Video Modules) தயாரித்தல். (Production of e-Learning Video Modules for the Diploma Students of Government Polytechnic Colleges)

அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரிகளில் நடத்தப்படும் கட்டடவியல் (Civil), மின்னியல் மற்றும் மின்னணுவியல் (Electrical & Electronics), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் (Electronics and Communication), இயந்திரவியல் (Mechanical) மற்றும் கணினி பொறியியல் (Computer Engineering) ஆகிய பட்டயப் பாடப் பிரிவுகளில் பயின்று வரும் மாணாக்கர்கள், எங்கும், எந்நேரமும், எதையும் கற்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கல்வி பன்முக ஊடக ஆய்வு மையத்தின் மூலமாக 36 பாடங்களில், ஒரு பாடத்திற்கு 20 மின் கற்றல் ஒளித்தொகுதிகள் என்ற அடிப்படையில் 720 மின் கற்றல் ஒளித்தொகுதிகள் (e-Learning Video Modules)  ரூ. 58 இலட்சம் செலவில் தயாரிக்கப்படும்.

4. பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்துதல்: (Introduction of New Courses in University Constituent Arts and Science Colleges)

கடந்த 6 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் 24 உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டன. பெருமளவில் மாணாக்கர்கள் இக்கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி பெற்று வருகின்றனர். இக்கல்லூரிகள் துவங்கப்பட்டபோது குறைந்த அளவில் நான்கு முதல் ஐயது வரை பாடப்பிரிவுகள் கையாளப்பட்டன. இக்கல்லூரிகளில் சேருவதற்கு அதிகளவில் மாணாக்கர்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிதிலையிலும், இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அதே கல்லூரிகளில் முதுகலை படிப்புகளை தொடர்வதற்கும், புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. இதனடிப்படையில், 2017– 18 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 89 புதிய பாடப்பிரிவுகள்  (42 இளங்கலை, 47 முதுகலை) அறிமுகப்படுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ. 2.82 கோடி ஆகும்.

5.  திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு  திறந்தநிதிலை பல்கலைக்கழகத்தின் மண்டல மையம் துவங்குதல். (Establishment of zonal centre of Tamil Nadu Open University in Tirunelveli  District)

தமிழ்நாடு  திறந்தநிதிலை பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர்,  திருச்சி, தருமபுரி, விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணாக்கர்கள் தங்கள் இல்லங்களின் அருகேயே கல்வி பெறும் பொருட்டு இம்மையங்கள் செயல்பட்டு சிறப்பான சேவையை வழங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தின் திறன் மேம்பாட்டு பயிற்சி உட்பட அனைத்து படிப்புகளையும், அனைத்து மாணாக்கர்களுக்கும் எடுத்துச் செல்லும் வகையிலும், மாணாக்கர்களுக்கு ஏற்படும் குறைகளை நீக்கும் பொருட்டும், மாணவர் சேர்க்கை, பாடப் புத்தகங்கள் வழங்குதல், மதிப்பீடுகள், வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு  திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு புதிய மண்டல மையம் உருவாக்கப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ. 6.25 கோடி ஆகும்.

6. அழகப்பா பல்கலைக்கழகத்தில் நீடித்திருக்கும் சுற்றுப்புற சூழல் அமைவதற்கு கழிவு தூய்மைப்படுத்துதல் தொழில் நுட்பத்தை கையாளுதல். (Waste treatment technology for sustainable and eco friendly environment in Alagappa University)

இத்தொழில் நுட்பத்தின் மூலம் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள உயிரிக் கழிவுகளை சேகரித்து தூய்மையான வளாகம் மற்றும் பசுமையான சுற்றுச் சூழல் உருவாக்கப்படும். சராசரியாக நாள் ஒன்றுக்கு சேகரிக்கப்படும் 300 கிலோ கழிவுகள் உயிரி எரிவாயுவாக மாற்றம் செய்யப்படும் மற்றும் கரிமக் கழிவுகளை உயிரி கலப்பு அலகுகளின் மூலமாக உரமாக உற்பத்தி  செய்யப்படும். பல்கலைக்கழக விடுதிகளுக்குத் தேவையான எரிசக்தியினைப் பெறுவதற்கு இம்முறை தக்க தொழில்நுட்பம் ஆகும். இம்முறைக்கான செலவினம் ரூ.1.25 கோடி ஆகும்.

7. அழகப்பா பல்கலைக்கழகத்தில் திதிறன் வங்கி மையம் துவங்குதல்: (Establishment of Talent Bank Centre in Alagappa University)

இத் திட்டத்தின் முக்கிய நோக்கம் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் ஆற்றல் மிக்க பணியாளர்களை உருவாக்கும் வகையில் கல்வி நிதிலையங்களில் பயிற்சியளித்து தொழிற்சாலைகளின் தேவைக்கும், கல்வி நிதிநிலையங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியினைக் குறைத்தல் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கேற்ற வகையில் கல்வி நிலையங்களும் அரசும் ஒருங்கிணைத்து மாணாக்கர்களை மனித வளமிக்கவர்களாக உருவாக்குதல் ஆகியவை ஆகும். வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வினை மாணாக்கர்களிடையே ஏற்படுத்துதல், தொழிற்சாலைகளின் தேவையறிந்து தொடர் பயிற்சிகள் மாணாக்கர்களுக்கு வழங்குதல் மற்றும் தொழில் வல்லுநர்களைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் மாணாக்கர்களுக்குச் செய்முறை பயிற்சி அளித்தல் ஆகியவை இத் திட்டத்தின் செயல்பாடுகள் ஆகும். இத் திட்டத்திற்கான செலவு ரூ. 2.10 கோடி ஆகும்.

8. “தாட்கோ” மூலமாக ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு  திறன் மேம்பாடு மற்றும்  திறன் தரம் உயர்த்துதல் திட்டங்கள் மூலம் பயிற்சி வழங்குதல். (Training on Skill Development and Skill Upgradation to the SC/ST students through “THADCO”)

தமிழக அரசானது “தாட்கோ” நிதிறுவனம் மூலமாக உயர்பள்ளியில் கல்வி முடித்த மற்றும் படிப்பறிவற்ற ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு  திறன் மேம்பாடு மற்றும்  திறன்தரம் உயர்த்துதல் தொடர்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி  வருகிறது. இத் திட்டத்தின் கீழ்“தாட்கோ” நிறுவனம் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சென்னை மையத்தை ஒரு பயிற்சி மையமாக தெரிவு செய்துள்ளது. இப்பல்கலைக்கழக மையம் இத் திட்டத்தின் கீழ் BPO / Call centre படிப்பு தொடர்பான பயிற்சியினை வழங்கும். இதற்கான மொத்த செலவினம் ரூ. 18 இலட்சம் ஆகும்.

9. விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும்  திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவு மையத்திற்கு கட்டடம் கட்டுதல் மற்றும் பிற வசதிகள் செய்து தருதல்: (Construction of building and providing other facilities for PG Extension centre of Thiruvalluvar University in Villupuram District)

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முதுநிதிலை விரிவாக்க மையம் விழுப்புரத்தில் செயல்பட்டு வருகிறது. முதுநிலை விரிவாக்க மையத்தின் முக்கிய நோக்கம் சமுதாயத்தின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு கவனம் செலுத்துவதன் மூலம் அறிவு ஆராய்ச்சி மற்றும் பரவலாக்க மேம்பாட்டுக்கான வசதிகளை வழங்குவது ஆகும். இம்மையம் மிகவும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் இருந்து வரும் மாணாக்கர்கள் மற்றும் சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்த மாணாக்கர்களின் தேவைகளை பூர்த்தி  செய்கிறது. முதுகலை விரிவாக்க மையத்தில் M.A., (English), M.Sc., (Maths), M.Sc., (Chemistry), M.Com ஆகிய நான்கு பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இம்மையத்திற்கு ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்டுதல் மற்றும் பிற வசதிகள் செய்து தருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

10. தமிழ்நாடு உயர்கல்வி மாநில மன்றத்தின் தொழிற்துறையுடன் இணைந்து வேலை வாய்ப்பிற்கான வரையறைப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் வழங்கும்  திட்டம். (Scheme of Tamil Nadu State Council for Higher Education of Setting Sustainable Industry-Complaint Certification Parameters for Employability)

19 தன்னாட்சி பெற்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் வேலைவாய்ப்பு பெற, தொழிற்துறையுடன் இணைந்து பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாடு  திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பு (CII) ) மற்றும் மத்திய பிரைடு ஸ்கூலுடன் (MPS) ஆகியவற்றுடன் இணைந்து 3 நிதிலைகளில் (level) தொழிற்துறை வேலைவாய்ப்பிற்கு பயிற்சித் தொகுதிகளும் (modules), பயிற்சி  திட்டமும் (training plan) தயாரிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு தத்தம்  திறனிற்கேற்ற நிலையிலான(level) பயிற்சி தொழிற்துறைத்  துணையுடன் அளிக்கப்படும். பயிற்சி பெற்ற அம்மாணாக்கர்களுக்கு அவரவர்க்குரிய  திறன் நிதிலைச் சான்றினை தமிழ்நாடு  திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்புடன் இணைந்து அளித்து, அதனடிப்படையில் வேலைவாய்ப்பிற்கு தயார் செய்யப்படுவார்கள். இத் திட்டம் ரூ. 2.94 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

11. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் “மாணாக்கர்கள் ஆராய்ச்சி  திட்டத்திற்கான” நிதி  ஒதுக்கீட்டினை ரூ. 20 இலட்சத்திலிருந்து ரூ. 40 இலட்சமாக உயர்த்துதல். (Enhancement of allocation for “Students Project Scheme” of Tamil Nadu State Council for Science and Technology from Rs. 20 lakh to Rs. 40 lakh)

மாணாக்கர்கள் ஆராய்ச்சி  திட்டத்தின் கீழ் வேளாண்மை, உயிரியியல், வேதியியல், பொறியியல், சுற்றுச்சூழல் அறிவியல், மருத்துவம், கால்நடை அறிவியல், சமூக அறிவியல் ஆகிய துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை மாணாக்கர்களின் ஆராய்ச்சித்  திறனை வளர்க்கும் பொருட்டு, ரூ. 10,000 வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ், கல்வி நிதிறுவனங்களில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 200 முதல் 250 வரையிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.இத் திட்டத்தின் கீழ் 500 மாணாக்கர் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பொருட்டு, 2017 – 18 ஆம் ஆண்டு முதல் நிதி  ஒதுக்கீடு ரூ. 20 இலட்சத்திலிருந்து ரூ. 40 இலட்சமாக உயர்த்தப்படும்.

12. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் “இளம் மாணவ அறிவியலாளர்கள்  திட்டத்திற்கான” நிதி  ஒதுக்கீட்டினை ரூ. 15 இலட்சத்திலிருந்து ரூ. 25 இலட்சமாக உயர்த்துதல். (Enhancement of allocation for “Young Student Scientist Programme” of Tamil Nadu State Council for Science and Technology from Rs.15 lakh to Rs. 25 lakh))

மாணாக்கர்களை அறிவியலில் ஆர்வம் கொள்ளும் வகையிலும், ஆராய்ச்சி பணியினை மேற்கொள்ளவும், இளம் மாணவ அறிவியலாளர்கள்  திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் உள்ளாட்சி நிதி நிறுவனங்களின் பள்ளிகளில் படிக்கும் அறிவியல் மாணாக்கர்கள் தெரிவு செய்யப்பட்டு,

குறிப்பிட்ட துறைகளில், கோடைகால விடுமுறையில் 15 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு பிறகு, சில குறிப்பிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களில் இம்மாணாக்கர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். இத் திட்டத்தின் கீழ் அதிகளவில் மாணாக்கர்கள் பயன்பெறும் பொருட்டு, நிதி  ஒதுக்கீடு ரூ. 15 இலட்சத்திலிருந்து ரூ. 25 இலட்சமாக உயர்த்தப்படும்.

13. சென்னை பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையத்தில் “அறிவியல் கோளம் “ அமைத்தல். (Establishment of Globe on Science in Periyar Science and Technology Centre, Chennai)

வானவியல், புவியியல் குறித்த அறிவியல் கருத்துக்களை சுமார் 6 அடி விட்டம் கொண்ட ஒரு கோளத்தில், கணினிகளையும், ஒளிப்படக் கருவிகளையும் கொண்டு, இயக்கப் படங்களை உருவாக்கி, மாணாக்கர்களுக்கு விளக்கும் முறையே, கோளத்தில் அறிவியல் முறையாகும், இதன் மூலம், வானிலை, விமானத்தின் இடப்பெயர்ச்சி, செயற்கை கோளின் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை அறிய இயலும். மேலும், நில அதிர்வு, சுனாமி மற்றும் இதர இயற்கை நிகழ்வுகளை பொது மக்களிடையே கற்பிக்க இயலும். கோளத்தில் அறிவியல் கருவி ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அமைக்கப்படும்.

C.P. சரவணன், வழக்கறிஞர் 9840052475

Source:

உயர் கல்வித்துறை அறிவிப்புகள் - 2017-2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com