தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

2017 – 2018 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை புதிய அறிவிப்புகள்
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

1.நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.

நபார்டு வங்கியின் நிதி அளிப்புடன், மிகவும் பழுதடைந்த ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்பாடு செய்யும் பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அ வ ர் க ளி ன் ஆணைப்படி, 2 0 1 7 - 1 8 ஆ ம் ஆண்டில் நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் 750 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

2.ஊரகப் பகுதிகளில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2500 கிலோ மீட்டர் நீளத்திற்கு இணைப்புச் சாலைகள் மேம்படுத்தப்படும்.

ஊரகப் பகுதிகளில், இணைப்புச் சாலை இல்லாத குக்கிராமங்களுக்கும், மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள குக்கிராமங்களுக்கும் சாலை வசதி  ஏற்படுத்திடும் வகையில், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, மண் சாலைகளை கற்சாலைகளாக (Metal Road) மாற்றி அமைத்திட 2017-18ஆம் நிதியாண்டில், 2500 கிலோ மீட்டர் நீளத்திற்கு கற்சாலைகள் அமைக்கும் பணி 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

3. 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் கட்டப்படும்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அ வ ர் க ளி ன் ஆணைப்படி, ஊரகப் பகுதிகளில் உள்ள ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டடங்களுக்கு சுற்றுச் சுவர் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

4. ஊரகப் பகுதிகளில் 144 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 இலட்சம் உறிஞ்சு குழிகள் அமைக்கப்படும்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அ வ ர் க ளி ன் ஆணைப்படி , ஊரகப் பகுதிகளில், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தினை மேம்படுத்திடவும், குடியிருப்புப் பகுதிகளின் சாலைகள் மற்றும் தெருக்களில்  திரவக் கழிவுகள் தேங்கி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்திடவும், ஒவ்வொரு வீட்டிலும் தலா 7,000 ரூபாய் மதிப்பீட்டில், 1 இலட்சத்து 75 ஆயிரம் உறிஞ்சு குழிகள் மொத்தம் 122 கோடியே 50 இலட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

மேலும், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி போன்ற குடிநீர் அமைப்புகளைச் சுற்றி கழிவு நீர் தேங்கா வண்ணம் தடுத்திட, தலா 8,600 ரூபாய் மதிப்பீட்டில் 25,000 சமுதாய உறிஞ்சு குழிகள் மொத்தம் 21 கோடியே 50 இலட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படும். ஆக மொத்தம், 2 இலட்சம் உறிஞ்சு குழிகள் 144 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

5. 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50,000 விவசாயிகளின் நிலங்களில் உரக்குழிகள் அமைத்துத் தரப்படும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறு, குறு விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் வீட்டுக் கழிவு மற்றும் விவசாய கழிவுகளை மக்கச் செய்து, உயிரி உரமாக மாற்றி, விவசாய நிலங்களில் பயன்படுத்திடும் விதமாக , மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, 2017-18 ஆம் ஆண்டில் தலா 15,000 ரூபாய் மதிப்பீட்டில் 50,000 விவசாயிகளுக்கு, மொத்தம் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உரக்குழிகள், அனைத்து மாவட்டங்களிலும்  அமைக்கப்படும்.

6. விவசாய நிலங்களை காக்கும் வகையில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல் வரப்புகள் அமைக்கப்படும்.

மலைப்பாங்கான மற்றும் சாய்வான நிலப் பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சிறு, குறு விவசாயிகளுடைய நிலங்களில் மண் அரிப்பை தடுப்பதற்காகவும், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், மண் வள பாதுகாப்பினை உறுதி  செய்திடவும், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, 250 கிலோ மீட்டர் நீளத்திற்கு, கல் வரப்புகள், 2017-18 ஆம் ஆண்டில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

7. ஊரகப் பகுதி களில் நான்கு ஆண்டுகளில் 2 இலட்சம் தடுப்பணைகள் கட்டப்படும்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, கிராமப் புறங்களில் தண்ணீர் சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்திடவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளிலுள்ள வாய்க்கால், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே, வரும் 4 ஆண்டுகளில் 2 இலட்சம் தடுப்பணைகள் கட்டப்படும். நடப்பாண்டில், 20,000 தடுப்பணைகள், 40 ஆயிரம் ரூபாய் முதல் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவில், மொத்தம் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

8. 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும்.

மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களுக்குப் பதிலாக, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, ஒவ்வொன்றும் 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 500 புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

9. 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும்.

ஊரகப் பகுதிகளில் சமூகநலத் துறையுடன் இணைந்து, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, 1000 அங்கன்வாடி மையங்கள் ஒவ்வொன்றும் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 85 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

10. ஊரகப் பகுதி களில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதரச ஆவி, சோடியம் ஆவி மற்றும் குழல் தெரு விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விதி  110-ன் கீழ் சட்டமன்றப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் ஊரகப் பகுதிகளில் உள்ள 17.06 லட்சம் குழல் தெரு விளக்குகளை ரூபாய் 600 கோடி மதிப்பீட்டில் எல்.இ.டி. தெரு விளக்குகளாக மாற்றி அமைத்திடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், ஊராட்சிகள் செலுத்தும் தெரு விளக்குகளுக்கான மின் கட்டணம் ஆண்டுக்கு சுமார் 30 சதவீதம் வரை குறையதுள்ளது.

கிராம ஊராட்சிகளின் மின் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவினத்தை குறைக்கும் வகையில், அதிக மின் நுகர்வு விளக்குகளான பாதரச ஆவி விளக்குகள், சோடியம் ஆவி விளக்குகள் மற்றும் மீதமுள்ள குழல் தெரு விளக்குகள் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, 2017-18ஆம் ஆண்டில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எல்.இ.டி தெரு விளக்குகளாக மாற்றி அமைக்கப்படும்.

11. 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகங்களுக்கு ஒருங்கிணைந்த அலுவலக வளாகங்கள் கட்டப்படும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட அளவிலான பல்வேறு அலுவலகங்களுக்காக ஒருங்கிணைந்த அலுவலக வளாகக் கட்டடம் ஒன்றினை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி , ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகம் சுமார் 25,000 சதுர அடி பரப்பில், தலா 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

2017-18ஆம் ஆண்டில் விழுப்புரம், வேலூர், விருதுநகர், தேனி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

12. ஊரகப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன்சுத்தம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

ஊரக மக்களிடையே பாதுகாப்பான சுகாதார பழக்க வழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில், நேரடி தகவல் பரிமாற்ற (I n t e r - P e r s o n a l C o m m u n i c a t i o n) நடவடிக்கைகள் மூலம் மனமாற்றம் ஏற்படுத்திட சுயஉதவிக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இளைய முதாயத்தினரிடையே, அவர்களது நடத்தை, மனநிலை மற்றும் பழக்க வழக்கத்தினை சீர்படுத்தும் அமைப்புகளாக பள்ளிகள்  திகழ்கின்றன. மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன்சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சுகாதாரம் குறித்த படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கட்டுரை எழுதுதல் மற்றும் பேச்சுப்போட்டிகள், பள்ளிகள் அளவிலும், மாவட்ட அளவிலும் நடத்தப்படும். மேற்படி போட்டிகள், தேசிய மற்றும் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில், கல்வி ஆண்டில் இரண்டு முறை நடத்தப்படும்.

13. ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் சமுதாய அமைப்பு கட்டடங்கள் மற்றும் வளாகங்கள், குறிப்பிட்டகால இடைவெளியில் தூய்மையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி , ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகள் , அங்கன்வாடி மையங்கள், பொது சுகாதார மையங்கள், சமுதாய நலக் கூடங்கள், கிராம ஊராட்சி சேவை மையங்கள், சுய உதவிக்குழுக் கட்டடங்கள் போன்ற சமுதாய உட்கட்டமைப்புகள் மற்றும் அரசு அலுவலகக் கட்டடங்கள் மற்றும் வளாகங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணிகளில், ஊராட்சி அமைப்புகள், அரசு/ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகிய அரசு அமைப்புகளில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் மற்றும் மஸ்தூர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

14. ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சி செயலர்களுக்கு மாதம் 500 ரூபாய் கூடுதல் பொறுப்புப் படி வழங்கப்படும்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, கிராம ஊராட்சிகளில் வெவ்வேறு காரணங்களால் காலியாகவுள்ள ஊராட்சி செயலர்  பணியிடங்களில், கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சி செயலர்களுக்கு மாதம் 500 ரூபாய் கூடுதல் பொறுப்புப் படியாக வழங்கப்படும்.

15. கிராம ஊராட்சிகளில், குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வரும் 9,350 மேல்நிதிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்

தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளால், தற்காலிகமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 9,350 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களது மாதாந்திர தொகுப்பூதியம் மிகக் குறைந்த அளவில் உள்ளது.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் நீண்ட நாள்  கோரிக்கையினை ஏற்று, தற்காலிகமாக பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9,350 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்களது மாதாந்திர தொகுப்பூதியம் 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

16. 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறு பாசன ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி  மேம்படுத்தப்படும்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அ வ ர் க ளி ன் ஆணைப்படி , 2017-18 ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திடும் வகையில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் உள்ள சிறு பாசன ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகிய நீர்வள ஆதாரங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி, இயந்திரங்களின் மூலம் தூர்வாரி, கரைகளை பலப்படுத்த , விரிவான முறையில் புனரமைக்கப்படும்.

17. 40 இலட்சம் கிராமப்புற குடும்பங்களுக்கு இலவசமாக நொச்சிச் செடி வழங்கப்படும்.

மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதி   திட்டத்தின் கீழ் 2015-16 மற்றும் 2016-17ஆம் ஆண்டுகளில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு மாபெரும் மரம் நடவுத் திட்டம் மற்றும் சாலையோர மரக்கன்றுகள் நடும்  திட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நொச்சி எனும் மூலிகைச் செடி சிறந்த கொசு விரட்டியாக செயல்பட்டு மலேரியா மற்றும் டெங்கு போன்ற தொற்று நோய்களை தடுக்க உதவுவதுடன் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.

எனவே, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களி ன் ஆணைப்படி , தமிழகத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால்களில் நொச்சிச் செடிகள் 4 முதல் 6 மாத காலத்திற்கு வளர்க்கப்பட்டு, கிராமப் புறங்களில் வசிக்கும் 40 லட்சம் குடும்பங்களுக்கு, தலா 2 செடிகள் வீதம் இலவசமாக வழங்கப்படும்.

18. 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனங்களை வலுப்படுத்தி  சீர்மிகு மையங்களாக உருவாக்கப்படும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்  திட்டங்களை செம்மையாகவும்,  திறம்படவும் செயல்படுத்தும் வகையில், இத்துறையின் அலுவலர்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி பிரநிதிகளுக்கு மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் (SIRD) மற்றும் மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனங்கள் (RIRD) மூலம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, தரமான பயிற்சிகள் வழங்கும் விதத்தில் ஊரக வளர்ச்சி பயிற்சி இயக்குநரகம், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் (SIRD), மற்றும் மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனங்கள் (RIRD) 2017-18ஆம் ஆண்டில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு, சீர்மிகு மையங்களாக உருவாக்கப்படும்.

19. மாநில ஊரக வளர்ச்சி நிதி நிறுவனத்தில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொழில்நுட்ப பயிற்சி மையம் உருவாக்கப்படும்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் பணிபுரியும் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்களுக்கு, நவீன தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும் வகையில் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் 40 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொழில்நுட்ப பயிற்சி பிரிவு துவங்கப்படும்.

20. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்  திட்டத்தின்கீழ் செயல்படும் 5000 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 100 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலுள்ள சுய உதவிக் குழுக்கள் சுயசார்பு தன்மை அடையவும், சுய தொழில்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைவதற்காகவும், சமுதாய முதலீட்டு நிதி ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படுகிறது. மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்  திட்டத்தின் கீழ் செயல்படும் 5,000 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.

சுயதொழில் செய்ய விரும்புகிற சுய உதவிக் குழுக்களுக்கு, வறுமை ஒழிப்புச் சங்கங்களின் மூலம் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். இதற்கென 100 கோடி ரூபாய் 2017-18 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்  திட்ட நிதியிலிருந்து வழங்கப்படும்.

21. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார  திட்டத்தில் மூன்றாம் கட்டமாக 95 வட்டாரங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு ஆதார நிதியாக 6 கோடி ரூபாய் வழங்கப்படும்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், ஓவ்வொரு ஆண்டும் விடுபட்ட ஏழை மக்களைக் கொண்டு புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அத்தகைய குழுக்களின் பொது நிதியை மேம்படுத்தவும், உயரிய அளவிலான கடன், வங்கியின் மூலம் கிடைக்கப் பெறவும் ஆதார நிதி வழங்கப்படுகிறது.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்  திட்டத்தின் மூன்றாம் கட்ட 95 வட்டாரங்களில் உள்ள 4,000 சுய உதவிக் குழுக்களுக்கு, தலா 15,000 ரூபாய் வீதம் 6 கோடி ரூபாய் ஆதார நிதியாக இந்த ஆண்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார  திட்டத்திலிருந்து வழங்கப்படும்.

22. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஈஷா அவுட் ரீச் நிதிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் பெண்களுக்கு விவசாயம் சார்ந்த மற்றும் விவசாயம் சாராத பல்வேறு தொழிற் பயிற்சிகள் வழங்கப்படும்.

ஊரக ஏழை மக்களுக்காக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்  திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இத் திட்டத்தின் கீழ் விவசாயம் சார்ந்த மற்றும் விவசாயம் சாராத பல்வேறு தொழில்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஈஷா அவுட்ரீச் நிறுவனமும் (ISHA OUTREACH) விவசாயம் சார்ந்த மற்றும் விவசாயம் சாராத பல்வேறு தொழில்களுக்கான பயிற்சிகளை இளைஞர்களுக்கு வெற்றிகரமாக வழங்கி சுய வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, இந்த அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் , பெண்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சிகள் மற்றும்  திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.

23. 1000 நகர்ப்புற இளம் பெண்களுக்கு சமையலறை மற்றும் வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுதுபார்த்தல் பயிற்சியளித்து, மேற்படி சாதனங்கள் பழுதுபார்க்க மகளிர் சேவை மையங்கள் அமைக்கப்படும்.

வீட்டு உபயோக மின் சாதனங்கள், சமையலறை சாதனங்கள் பழுதினை நன்முறையில் விரைவாக செய்து முடிக்க சேவையாளர்களை உருவாக்கும் நோக்கோடு , மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, 1000 நகர்ப்புர இளம்பெண்களுக்கு வீட்டு உபயோக சாதனங்கள் மற்றும் மின்சாதனங்கள் பழுதுபார்த்தல் பயிற்சி வழங்கப்படும். மேற்கண்ட சாதனங் களுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் சேவைகளுக்கென பயிற்சி பெற்ற பெண்களை உள்ளடக்கிய ஓர் கூட்டமைப்பை உருவாக்கி, பிரத்யேகமாக உள்ள கணினி செயலி (Computer APP) அல்லது தொலைபேசி அழைப்பு மையம் (Call Center) மூலம் எவரும் எளிதில் கேட்டுப் பயன்பெறும் சேவை மையங்கள் உருவாக்கப்படும்.

இத்தகைய சேவை மையங்கள் பரீட்சார்த்த முறையில் நடப்பு ஆண்டில் பெருநகரங்களில் அமைக்கப்படும். இதன் மூலம் மக்களுக்கு தரமான சேவையும், பெண்களுக்கு  திறன் வளர்ப்பும், வருமான ஈட்டுதலும் உறுதி  செய்யப்படும்.

24. 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50,000க்குக் குறையாத மகளிர் உட்பட1,00,000 இளைஞர்களுக்கு  திறன் பயிற்சி மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட 50,000க்குக் குறையாத மகளிர் உட்பட 1,00,000 இளைஞர்கள் பயனடையும் வகையில் இவ்வாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம்  திறன் பயிற்சி மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தொழிற் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் சுய வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதில் குறைந்தபட்சம் 50,000 மகளிருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மேற்கண்ட வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு தேவையான நிதி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும்.

25. 180 கூட்டுப் பொறுப்புக் குழுக்களுக்கு தலா ரூ.2.5 இலட்சம் வீதம் குறுந்தொழில் தொடங்க 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அ வ ர் க ளி ன் ஆணைப்படி , சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத்  திட்டம் செயல்படுத்தப்படுகின்ற தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 180 கூட்டுப் பொறுப்புக் குழுக்களுக்கு தொழில் தொடங்க, தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.

26. 3,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 7 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாம்பழக் கூழ் தயாரிப்பு நிறுவனம் அமைக்கப்படும்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி , சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 3000 விவசாயிகளை உள்ளடக்கிய 190 உற்பத்தியாளர் குழுக்கள் இணைந்து பயன்பெறும் வகையில் , நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருப்பூண்டி (கிழக்கு) ஊராட்சியில் 7 கோடியே 53 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனம் அமைக்கப்படும்.

27. 15 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டடம் மற்றும் 20 மீன் வலை பின்னும் தளம் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி , சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத்  திட்டம் செயல்படுத்தப்படுகின்ற தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும்  திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள கடலோர சமுதாய மக்களின் பயன்பாட்டிற்கென 15 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 20 மீன் வலை பின்னும் கூடங்கள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

28. 2,000 மீனவர்களுக்கு கடன் மீட்பு நிதியாக 6 கோடியே 40 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி , சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத்  திட்டப் பகுதிகளான தஞ்சாவூர்,திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மீனவர்களை பெருங்கடன் சுமையிலிருந்து மீட்கவும், இடைத்தரகர்கள் மற்றும் பெரும் வியாபாரிகள் மூலம் அதிக வட்டியிலான கடன் பெறுவதை குறைக்கும் வகையிலும், கடன் மீட்பு நிதி வழங்கப்படும். இந்த ஆண்டு 2,000 மீனவர்களுக்கு கடன் மீட்பு நிதியாக 6 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவிடப்படும்.

29. 129 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு (PLFs) துயர் குறைப்பு நிதியாக 2 கோடியே 58 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள 129 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு துயர் குறைப்பு நிதியாக 2 கோடியே 58 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். இயநிதி, இயற்கை இடர்பாடுகள் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பின் துயரிலிருந்து மீள, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

Source:மானியக் கோரிக்கை எண்:42  அறிவிப்புகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com