டிஜிட்டல் திருட்டைத் தவிர்க்க 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு! 

நம் நாட்டில் நடைபெறும் கணினி மென்பொருள் தாக்குதல், தகவல் திருட்டு, சைபர் கிரைம் போன்றவற்றைத் தடுக்க சுமார் 5 லட்சம் Certified Ethical Hackers தேவை
டிஜிட்டல் திருட்டைத் தவிர்க்க 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு! 

கணினியில் உள்ள மதிப்புமிக்க தகவல்கள் இன்று பல வகைகளிலும் திருடப்படுகின்றன. நாம் அமைத்திருக்கும் பாதுகாப்பு குறியீட்டை எளிதாக தகர்த்துவிட்டு உள்ளே நுழையும் திருடர்கள் நம்முடைய ரகசியங்களைத் திருடுவதோடு, அவற்றை அழித்துவிடவும் செய்கின்றனர். இது சர்வதேச அளவில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.  இந்த நிலையில்தான், அனைத்து நாடுகளும் கணினி, இணையதளக் கள்வர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள  பல வகையான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. 

அந்த வகையில் இந்தியாவும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ். மோகன் தலைமையில், National Cyber Safety and Security Standards-I அமைத்துள்ளது. இது அரசு, ராணுவம், தொழில்துறை மற்றும் பொதுமக்களின் கணினித் தொடர்புகளைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருவதோடு, அதுதொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு Cyber Security Research Centre-ஐ நாடுமுழுவதும் தொடங்கி வருகிறது. மேலும் மாணவர்கள் வேறு பிற கல்லூரிகளிலும் Cyber Security குறித்து பயில National Cyber Defence Research centre - உதவுகிறது.

நம் நாட்டில் நடைபெறும் கணினி மென்பொருள் தாக்குதல், தகவல் திருட்டு, சைபர் கிரைம் போன்றவற்றைத் தடுக்க சுமார் 5 லட்சம் Certified Ethical Hackers தேவை என்ற நிலையில், தற்போது சுமார் 1 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. மேலும், 4 லட்சம் பேர் உடனடியாகத் தேவைப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து உள்ள குறுகியகால பயிற்சிகளில் இணைந்து பயில்வதன் மூலம் இந்தத் துறையில் உடனடி வேலை வாய்ப்பைப் பெறலாம்.

இதுதொடர்பான கல்வியை இந்தியாவில் பல நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும் 5 நாள் தொடங்கி ஓராண்டு பயிற்சியாக அளித்து வருகின்றன. நம் நாட்டைப் பொருத்தவரை லூசிடஸ் செக்யூரிங் டிஜிட்டல் (Lucideus Securing Digital) என்ற இந்திய நிறுவனம் மத்திய அரசுடன் இணைந்து நாடு முழுவதும் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் கல்வியை வழங்கி வருகிறது. 

இந்த நிறுவனம் சர்வதேச அளவில் வியாபார நிறுவனங்கள், அரசு, கல்வி நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு, ஆலோசனை மற்றும் செயல்பாட்டு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் ஆய்வு மையங்களையும் அமைத்துள்ளது.

லூசிடஸ் நிறுவனம் மத்திய அரசுடன் இணைந்து இந்தியாவில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வையும், பயிற்சியையும் அளித்து வருகிறது. இதில், உலக அளவிலான சைபர் செக்யூரிட்டி குறித்து மாணவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட கன்ஸ்ரீண்க்ங்ன்ள் Lucideus Certified Ethical Hackers Grade-I என்ற பயிற்சியையும், அதற்கு அடுத்த நிலையில் புதிய இணையதள, தொலைத் தொடர்பு தாக்குதல் குறித்து தொழில்துறையினர், நிறுவனங்கள், மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையிலும், எதிர்கொள்ளும் வகையிலும் Lucideus Certified Ethical Hackers Grade-2 என்ற பயிற்சியையும் லூசிடஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

சைபர் செக்யூரிட்டி படிப்பில்  பல பாடத்திட்டங்கள் இருந்தாலும், தகுதிமிக்க முக்கிய குறுகியகாலப் பயிற்சியாகக் கருதப்படுவது Certified Ethical Hackers மட்டுமே. இதனால்தான், பல்வேறு நிறுவனங்களிலும் இந்தப் படிப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 

International council of Electronic Commerce consultants (EC-Council) என்ற மெக்ஸிகோ நிறுவனம் சர்வதேச அளவில் Certified Ethical Hacker- ஐ முக்கிய பயிற்சியாக அளித்து வருகிறது.  இந்த நிறுவனம் EC Council University மூலம் Online cyber Security Degree, Grading System, Bachelor of Science in Cyber Security, Master of Science in Cyber Security போன்ற கல்வியையும் அளித்து வருகிறது.

இவை மட்டுமல்லாமல், Graduate Certification Programme என்ற அளவில், Digital Forensic, Disaster Recovery, Executive Information Assurance, Information Security Professional, IT Analyst போன்ற பயிற்சிகளும் இந்தத் துறையில் வழங்கப்பட்டு வருகின்றன. 

சர்வதேச அளவில் தற்போது 15 லட்சம் Certified Ethical Hacker மட்டுமே உள்ள நிலையில், 2019-இல் இதன் தேவை 60 லட்சமாக உயரும் என கருதப்படுகிறது. அதேபோல, 2015-இல் சைபர் செக்யூரிட்டி மார்க்கெட்டில் புழங்கிய ரூ. 7700 கோடி தொகை, வரும் 2020-இல் ரூ.17 ஆயிரம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  இத்துறையில் தொடக்க நிலையில், ஆண்டுக்கு ரூ. 2 முதல் 5 லட்சமும், 3 முதல் 5 ஆண்டு அனுபவத்திற்குப் பிறகு ஆண்டுக்கு ரூ. 10 முதல் 12 லட்சம் அதற்கு மேலும் திறமைக்கேற்ப ஊதியம் பெறும் வாய்ப்பு உள்ளது.

டிஜிட்டல் செக்யூரிட்டி துறையில் பயிற்சி பெற கல்வித்திட்டம், கால அளவு, கல்வி நிறுவனங்களைப் பொருத்து ரூ. 6000 முதல் 65 ஆயிரம் வரை செலவாகும். குறிப்பாக Ethical Hackers கோர்ஸ் பயில ரூ. 6000 முதல் ரூ. 20 ஆயிரம் வரை தேவைப்படும். கூடுதல் விவரங்களுக்கு http://www.lucideus.com என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com