உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்! டாரட் அட்டை ஜோசியம்!

டாரட் கார்ட் (Tarait Card) ஜோசியம் பார்க்க நான் செல்வது இது முதல் தடவை அல்ல
உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்! டாரட் அட்டை ஜோசியம்!

டாரட் கார்ட் (Tarait Card) ஜோசியம் பார்க்க நான் செல்வது இது முதல் தடவை அல்ல. ஆனால் ஷ்ரத்தா நானாவதி என்பவரிடம் ஆருடம் பார்க்கச் செல்வது இதுவே முதல் தடவை.

அது சரி. டாரட் கார்ட் ஜோசியமா? இது என்ன புதுவகையான ஜோசியம் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் இது புதுசு அல்ல. டாரட் ஜோதிடம் பலரும் அறிந்த ஒன்றுதான்.

படங்களையும், குறியீடுகளையும் கொண்ட சில அட்டைகளில் அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களை இணைத்து கணிப்புகளைத் தரும் ஒருவகை ஜோசியம் தான் இந்த டாரட் அட்டை ஜோசியம். ஒரு நபரின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த அட்டைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். டார்ட் அட்டைகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கையாளப்படுகிறது. 22 மற்றும் 56 என்ற எண்ணிக்கையில் அது இருக்கும். 22 அட்டைகளை வெற்றி ஆர்க்கனாக்கள் அல்லது பெரிய ஆர்க்கனாக்கள் என்று வழங்கப்படும். 56 சிறிய ஆரைக்கனாக்கள் அல்லது பொருந்து அட்டைகள் என்று வழங்கப்படுகிறது. இந்த அட்டைகள் மூலம், வாடிக்கையாளர் தேர்ந்தெடுப்பதை வைத்துக் கொண்டு டாரட் கணிப்பு செயல்படுகிறது. இது பெரும்பாலும் கணிக்கும் ஜோசியரின் அனுபவத்தையும் உள்ளுணர்வைப் பொருத்தும் சிறப்பாக அமையும்.

தானே வரைந்த ஓவியத்தை தான் ஷ்ரத்தா டாரட் அட்டைகளாகப் பயன்படுத்துகிறார்.  என்னைப் போலவே ஷரத்தாவும் சிறு வயது முதலே இந்த டாரட் அட்டை ஜோசியத்தில் விருப்பமுடையவராக இருந்து வருகிறார் என்று அறிந்து கொண்டேன். அட்டைகளை வரிசைக்கிரமமாக அடுக்கியபின் அதை லாவகமாக அழகியலுடன் கலைத்துப் போட்டபடி ஷரத்தா என்னிடம் சொல்லியது, ‘நான் இந்த டாரட் கார்டுகளை எப்படி படிப்பது என்று ஏழு வருடங்களுக்கு முன்னால் முறையாக கற்றுக் கொண்டேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் யார் வேண்டுமானாலும் இந்தக் கலையை கற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு முக்கிய தகுதி என்னவெனில் உள்ளுணர்வுடன் நல்ல பயிற்சியும் இருக்க வேண்டும்.’ என்றார்.

இணையத்தின் வழியில் கூட இந்த ஜோசியம் பிரபலம். ஒவ்வொரு அட்டையை க்ளிக் செய்து ஆம் இல்லை என்ற பதில்களைத் தொடர்ந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் விளக்கம் கிடைக்கும்.

ஷ்ரத்தா தன்னுடைய டாரட் கார்ட் ஜோசியம் பற்றி கூறுகையில், இந்த ஜோசியத்தின் மூலம் நான் சொல்வது ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கானதாக மட்டும் இருக்கும். காலம் மாற மாற காட்சிகள் மாறும், அவரவர் தன்மையும் மாறிக் கொண்டிருக்கும். அதற்கேற்ப டார்ட் கார்ட் ஜோசியமும் மாறும்.

ஷ்ரத்தா இந்த ஜோசியத்தைப் பார்க்கும் அழகே தனி. ஒரு வயலட் சில்க் துணியை விரித்து அதற்கு மேல் செல்டிக் சிலுவை டிசைனில் இந்த கார்டுகளை அடுக்கி வைத்து ஆரம்பிக்கிறார்.  பாரம்பரிய முறைப்படி அடுக்கி  வைப்பதையே தான் பெரிதும் விரும்புவதாகச் சொல்லும் ஷ்ரத்தா நம் முன் காண்பிக்கும அந்த விந்தை உலகம் ஆச்சரியமானது. என்னை நான் புரிந்து கொள்ள அந்த அட்டைகள் உதவும் என்ற நம்பிக்கை ஒன்று தான் பிரதானம். என்னுடைய கடந்த காலம் என்னவாக இருந்தது, அது என்னை தொந்தரவு செய்கிறதா, என் வாழ்க்கை அலுப்பூட்டுவதாக உள்ளதா? புதிய விஷயங்களைத் தேடிச் செல்வேனா? புதிய பாடங்கள் கற்பேனா? நான் கடுமையான உழைப்பாளி இது போன்ற கேள்விகளை வரவழைத்து அதற்கான பதில்களையும் விரிவாகத் தருகிறார் ஷ்ரத்தா. இந்த பதில்கள் என் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. என் மனத்தை எனக்கே திறந்து காட்டுகிறது. ஆச்சரியத்தக்க விதமாக என் தோழமைகளும் குடும்பத்தாரும் என்னைப் பார்க்கும் விதத்தில் அப்படியே உள்ளது.

இன்னொரு தடவை சீட்டுக்களை கலைத்துப் போட்டு ஷ்ரத்தா தொடர்களையும் நான் ஆம் அல்லது இல்லை என்ற பதில்களை மட்டுமே சொல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு அட்டையிலும் ஒவ்வொரு கேள்வி. ஒவ்வொரு ஓவியம். விளங்கிக் கொள்ள முடியாத சில விஷயங்களை உள்ளடக்கி இருந்தது. ஒரு ஓவியத்தில் இதயத்தில் அம்புக் குறி போட்டிருந்தது, இன்னொரு ஓவியத்தில் ஒரு ராஜாங்கம், இன்னொரு ஓவியத்திலோ ஒரு மனிதன் தூக்கில் தொங்குகிறான். இப்படி சம்மந்தம் சம்பந்தமில்லாத கலவையாக ஓவியங்கள் வரும் போது அதிலிருந்து நம்முடைய உணர்வு நிலைகளை அறிந்து கொள்கிறார் ஷ்ரத்தா. கடைசியில் கேள்வி பதில் நேரத்தில் தேவையான விளக்கங்களையும் தந்துவிடுகிறார். என்னுடைய வேலை, மற்றவர்களுடனான உறவு நிலை, உடல் ஆரோக்கியம், நிதி நிலமை போன்ற கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் தந்துவிட்டார்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடிக்கடி உங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுவீர்கள், ஆனால் விரைவில் அந்நிலை மாற்றம் அடைந்து உங்களுக்கு தெளிவான வழி பிறக்கும்’ என்றார் ஷ்ரத்தா. நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஆனால் இப்போதைக்கு நீங்கள் செய்ய வேண்டியது அமைதியாக பொறுமையுடன் இருப்பதுதான்ம் வேடிக்கைப் பாருங்கள் என்னதான் நடக்கப் போகிறது என்று என்று முடித்தார். இந்த அமர்வில் என்னுடைய சொந்த வாழ்க்கை மற்றும் வேலை சார்ந்து நான் கேட்ட கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைத்ததால் எனக்கு ஒரே சந்தோஷம். ஆனால் ஒன்று தான் என்னை உறுத்திக் கொண்டிருந்தது. வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்த ஒன்று எனில் ஷ்ரத்தா எனக்கு கணித்துத் தந்த டார்ட் கார்ட் பலன்கள் பெரும்பான்மை நேர்மறையாகவே இருந்தது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவளா, எனக்கு நிவர்த்தி செய்து கொள்ளும்படியாக வேறு என்ன பிரச்னைகள் உள்ளது என்று கேட்டேன். அதற்கு அவள் உன்னுடைய ஸ்ட்ரெஸ் பிரச்னைகளை தான் அவை. முதலில் அதை சரி செய்து கொள் என்றாள்.

இன்னொரு விஷயம், எதற்கும் மனம் உடைந்து போகாதே, எதையும் இயல்பாக எதிர்கொள்ள வேண்டிய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள், மனத்தை லேசாக வைத்திரு. எல்லாம் சரியாகிவிடும். என் வாழ்க்கையில் நான் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது என்று ஆருடம் சொன்ன ஷ்ரத்தாவிடம் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

உங்களுக்கும் இதில் ஆர்வம் இருந்தால் நிச்சயம் இதை ஒரு தடவை பரிசோதித்துப் பாருங்கள்.

ஷ்ரத்தா நானாவதி, மொபைல் - 9840337463

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com