அப்படி என்ன இருக்கு 'ஜியோ’வில்?

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை
அப்படி என்ன இருக்கு 'ஜியோ’வில்?

மொபைல் போன் இல்லாதவர்கள் யாருமில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்றைய உலகம் ஆகிவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் முதியோர் வரை அனைவர் கைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது கைப்பேசி. சமூக வலைதளம் என்பதை மிகவும் தாராளமயமாக்கிய பெருமை ஜியோவையே சேரும். சமீப காலமாக அனைவரும் தங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை, பாடல்களை, வலைத்தளங்களை இலவசமாக பார்த்தும், படித்தும் பயன்பெற்றது ஜியோ  அலைகளால் தான்.

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை 2016-ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தார். அறிமுக சலுகையாக அனைத்து ஜியோ பயனர்களுக்கும் மூன்று மாதங்களுக்கு 4ஜி டேட்டா, வாய்ஸ் கால், மெசேஜ்  மற்றும் ஆப்ஸ் போன்றவை முற்றிலும் இலவசமாகவே வழங்கப்பட்டது.

கடந்த 6 மாதங்களாக வழங்கப்பட்டு வந்த அறிமுக இலவச சேவை இன்று மார்ச் 31-ம் தேதியுடன்முடிவடையும் நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டண சேவைக்கு மாறுவதற்கு முன்பாக ரூ.99 கட்டணத்தில் ரீசார்ச் செய்யும்பொழுது அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை ஜியோவின் சிறப்பு சலுகைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

ரிலைன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தை இலவசமாக பெற ஜியோ மனி எனும் ஆப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு ரீசார்ஜிலும் ரூ.50 வரை பணம் திரும்ப வழங்கப்படுகிறது. ஜியோ பிரைம் திட்டத்திற்கு ரூ.50 கேஷ்பேக் மற்றும் ரூ.303 மற்றும் அதற்கும் அதிகமான விலையை செலுத்தி ரீஜார்ஜ் செய்யும் போது ரூ.50 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்கள். இந்த ஜியோ மனி செயலியை கொண்டு ஜியோ பிரைம் திட்டத்திற்கு ரூ.99 + ரூ.303 ரீசார்ஜ் செய்வோருக்கு பிரைம் திட்டத்திற்கான ரூ.50 மற்றும் ரூ.303 திட்டத்திற்கு ரூ.50 கேஷ்பேக் வழங்கப்பட்டுள்ளது. சுருக்கமாக, ஜியோ மனி செயலியை கொண்டு ரூ.402க்கு ரீசார்ஜ் செய்யும் போது ரூ.100 கேஷ்பேக் பெறலாம். 

இதை தவிர, செயலியைப் பயன்படுத்தாமல் கடைகளுக்கு அல்லது ஆன் லைனில் மாதம் ரூ.303 செலுத்தி அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் ஒவ்வொரு ரீசார்ஜ் செய்யும் போதும் கூடுதல் சலுகைகளை பெற முடியும். ஜியோ பிரைம் ரீசார்ச் செய்த பின் ரூ.303 செலுத்தினால் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் தினமும் 1ஜி.பி. 4ஜி இண்டர்நெட் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யாமல் ரூ.303 ரீசார்ச் செய்தால் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களுடன் 28 நாட்களுக்கு 2.5 ஜிபி 4 ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

அறிமுக சலுகையில் தினமும் 4GB அளவு டேட்டா பயன்படுத்தி வந்த பயனர்களுக்கு நாளை முதல் 1GB அளவு 4ஜி டேட்டா வழங்கப்படும். இதன் படி ஜியோ வாடிக்கையாளர்கள் தினமும் 1GB அளவு டேட்டாவை நொடிக்கு 128KB என்ற வேகத்தில் பயன்படுத்தலாம். 

தினசரி அளவு கடந்து கூடுதலாக அதிகப்படியான டேட்டா பயன்படுத்த வாடிக்கைாயளர்கள் பணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் அதிகப்படியான டேட்டாவினை அதிவேகத்தில் பயன்படுத்தலாம். STV54 பேக் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது  1GB 4ஜி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. STV 301 ரீசார்ஜ் செய்யும் போது 6GB அளவு 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

இந்த நிறுவனம் தற்போது 10.5 கோடி பயனர்களை வைத்துள்ளது. இதில் 30 சதவீதம் பேர் இலவச டேட்டா சேவைக்காக ஜியோவை இரண்டாம் பட்சமாக பயன்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள 7 கோடி பேரில் மூன்றில் இரண்டு பங்கு ஜியோ பிரைம் சேவையில் இணைந்து வருகின்றனர்.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளருக்கு கூடுதல் டேட்டா, புதிய சலுகைகள் உள்ளிட்டவற்றை அறிவித்து வந்த போதிலும் ஜியோவுக்குக் கிடைத்த வரவேற்பு அனைவரும் அறிந்ததே. வர்த்தக ரீதியில் முன்னணி வகித்து வரும் ஜியோ மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ பிரைம் அல்லது ஜியோ எண்ணிற்கு வேறு எந்த ரீசார்ஜ்களையும் செய்யவில்லை எனில் குறிப்பிட்ட காலம் அதாவது ரீசார்ச் செய்யாமல் சுமார் 90 நாட்களுக்கு ஜியோ சிம் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.

ஜியோ ரிஜார்ஜ் செய்யாமல் ஜியோ சேவைகள் எதுவும் வேலை செய்யாது. இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ் எதுவும் வேலை செய்யாது. ஜியோ பிரைம் திட்டத்திற்கு மட்டும் ரூ.99 செலுத்தியவர்களுக்கு 12 மாதங்களுக்கான பிரைம் திட்டம் மட்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும். ரூ.99 அல்லாமல் மற்ற ரீசார்ச் செய்யாமல் ஜியோ சேவைகளை பயன்படுத்த முடியாது. இதனால் குறைந்த பட்சம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

எதுவும் இலகவமாகக் கிடைக்கும் போது இனிப்பாகத் தான் இருந்தது. இனி ஜியோ பயனர்கள் தங்களுடைய எண்ணை தொடர்வார்களா அல்லது கிடைத்தவரை லாபம் என்று சும்மா இருந்துவிடுவார்களா என யோசித்துப் பார்த்தால், நிச்சயம் பெரும்பாலோனர் தொடர்வார்கள் என்றே தோன்றுகிறது. எல்லா வசதிகளும் உள்ள ஒரு வீட்டில் சில நாட்கள் தங்கியிருக்க அனுமதி தந்த ஒருவர் பின்னால் அதே வீட்டில் தொடர்ந்து இருக்க, ஒரு சிறிய கட்டணம் கேட்கையில் நிச்சயம் பயன்பெற்றவர் அதை விட்டு விலகமாட்டார். இந்த எளிய லாஜிக் தான் ஜியோ விஷயத்திலும் வெற்றி பெற்றுவிட்டது. காரணம் ஒரு சேவையை பழக்கப்படுத்தி, சில நாட்கள் அதை அவர்களிடம் இலவசமாகவே தந்துவிட்டு மீண்டும் குறைந்த கட்டணத்தில் அவர்களுக்கு அதை வழங்குவதன் மூலம், ரிலையன்ஸ் தங்கள் பயனர்களை தக்க வைத்துக் கொள்ள இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று புரிந்து கொள்ளலாம். எல்லாம் சரி, அப்படி என்ன இருக்கு இந்த ஜியோவில்? அதையெல்லாம் பயன்படுத்தினால் தான் அந்த மேஜிக் புரியும் என்கிறார்கள் செல்போன்வாசிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com