அரசு ஊழியர்கள்-அகவிலைப்படி-அடுத்து செய்ய வேண்டியது என்ன?

1757-ஆம் வருடம் கிழக்கிந்திய கம்பெனி உடன்படிக்கை சிவில் பணிக்கு (Covenanted Civil Service) ஆள் சேர்க்கப்பட்டது.
அரசு ஊழியர்கள்-அகவிலைப்படி-அடுத்து செய்ய வேண்டியது என்ன?
அரசு ஊழியர்கள் வரலாறு(History of Civil Servants)

சுதந்திரத்திற்குப் முன்

1757-ஆம் வருடம் கிழக்கிந்திய கம்பெனி உடன்படிக்கை சிவில் பணிக்கு (Covenanted Civil Service) ஆள் சேர்க்கப்பட்டது. அதன்பின் கார்ன்வாலிஸ் (1786-93) இந்திய சட்டம்-1784-இன் மூலம் அரசாளுவதை சிவில் பிரிவு, வியாபாரப் பிரிவு என இரண்டாக பிரித்தார்.,

1800-ஆம் ஆண்டு வெல்லெஸ்லி ஃபோர்ட் வில்லியம் கல்லூரியை (Fort William College) தொடங்கி CCS பணிக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.

1854-இல் மெக்காலே குழு அமைக்கப்பட்ட பின் தற்போதைய இந்திய ஆட்சிப் பணிக்கு(IAS) அடித்தளமான இந்திய சிவில் பணிக்கு (Indian Civil Service) சிபாரிசு செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது.

இந்திய அரசுச் சட்டம் 1858-இன் படி இப்பணிகள் 1886-ஆம் வருடம் முதல்  பேரரசின் சிவில் பணிக்கு (Imperial Civil Service) பணியாளர்கள் எடுக்கப்பட்டனர். அதன் படி 1941-இல் 5% இந்தியர்கள் இப்பணியில் இருந்தனர். 1942-இல் 597 பேர் இந்தியர்களும் 588 பிரிட்டீஷாரும் இருந்தனர்.

1886-ஆம் வருடம் அயிட்சிசன் கமிஷன் (Aitchison Commission) சர் சார்லஸ் உம்பர்சன் அயிட்சிசன் தலைமையில் அமைக்கப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் படி சில பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசுப் பணியில் சேர அதிகபட்ச வயது 23 எனவும், மத்திய, மாநில மற்றும் கீழ்நிலை ஊழியர்கள் என மூன்று வகையான பணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1912-ஆம் ஆண்டு பணியமர்த்தும் முறைகள் பற்றி முடிவு செய்ய இஸ்லிங்டன் கமிஷன் (Islington Commission) அமைக்கப்பட்டது. அதன்படி வகுப்பு-I வகுப்பு-II என  பணிகள் பிரிக்கப்பட்டன. 25% பெரிய பதவிகள் கொடுக்கப்பட்டன, தகுதிகாண் காலம் (Probation period) 2 ஆண்டுகாலம் என நிர்ணயம் செய்யப்பட்டது.

1919-இல் மாண்டேகு-செம்ஸ்போர்டு குழுவின் பரிந்துரையின் படி பெரும்பாண்மையான இந்தியர்களை பணிக்கு அமர்த்த வேண்டுமென்ற இந்தியர்களின் நீண்டநாள்  கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1922-இல் இந்திய சிவில் பணிக்கு (ICS) தேர்வுகள் நடத்தப்பட்டன. லீ அவர்களின் அறிக்கையின் படி இந்தியத் தேர்வாணையம் சர் ராஸ் பார்க்கர் (Sir Ross barker) தலைமையில் 1,அக்டோபர்,1926-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

1934-ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தியச் செயலரின் நேரடி கண்காணிப்பில் அனைந்திந்திய பணிகளுக்கும், மத்திய அரசுத் துறைகளுக்கும், மாநிலங்களுக்கும் தேர்வு நடைபெற்றது.

1935-ஆம் ஆண்டு  இந்திய அரசுச் சட்டத்தின் படி ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித் தேர்வாணையம் அமைக்க அதிகாரம் வழங்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின்

இந்திய அரசியல் தலைவர்கள் கல்வியியல் சாதனை, பயிற்சி, பணி நிரந்தரம், ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆங்கிலேய நிர்வாகத்தில் சிலவற்றை வைத்து நிர்வாக வழி வகுத்தனர். அதன் படி. அனைத்திந்திய பணி, மத்திய சிவில் பணி, மாநில சிவில் பணி என பிரித்தனர்.

அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 312 பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பணியமர்வு சம்மந்தமாக சட்டமியற்ற வழிவகை செய்தது.

முதல் நிர்வாக சீர்திருத்த  ஆனையம் ஜனவரி,1966-இல் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 1, நவம்பர்,1977-இல் 537 பரிந்துரைகளையும், மத்திய மாநில, நிர்வாகம், நிதி, சம்மந்தமாக 20 அறிக்கைகளையும் சமர்ப்பித்தது.

பொது நிர்வாகம் சம்மந்தமாக A.D.கோர்வாலா (A.D.Gorwala) ஒரு அறிக்கையை கொடுத்தது.  1956-இல் Dr.A.ராமசாமி முதலியார்  கமிட்டி சில பரிந்துரைகளை அறிவித்தது.

1962-இல் V.T.கிருஷ்ணாமாச்சாரி கமிட்டி சில நிர்வாக பிரச்சினைகளை அறிவித்தது. 1976-இல் 1976-இல் (D.S.Kothari) D.S.கோத்தாரி கமிட்டி சில நிர்வாக மாறுதல்களுக்கு வழிவகை செய்தது. 1989-இல் சதீஷ் சந்திரா கமிட்டி , 2001-இல் பேராசிரியர் யோகிந்தர் K அலாஷ் கமிட்டி 2004-இல் ஹோடா கமிட்டி என பல நிர்வாக சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.

அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், மற்றும் ஓய்வூதியர்கள் ஆகியோர் வாழும் செலவை(Cost of Living) சரிசெய்து கொள்ள அளிக்கப்படும் படி அகவிலைப்படி ஆகும். இது அவர்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட சதவீதம் அளிக்கப்படும். இதற்கு வரி உண்டு.

அகவிலைப்படி தோன்றிய வரலாறு

இரண்டாம் உலகப் போரில் உணவுப்படியாக (Dear Food Allowances) முதலில் வழங்கப்பட்டது. அகவிலைப்படி என்பது இது நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீடு என்பது அந்த நேரத்தில் பொருட்களின் விலை அல்லது சேவையில் ஏற்படும் மாற்றம் அல்லது ஏற்றமே ஆகும்.

பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் அல்லது சந்தை மதிப்பு, உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதே ஆகும்.

விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது, ஆகவே பணவீக்கம் என்பதை, பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சி என்றும் கூறலாம்.

தேவை விதியின்படி விலை உயர்ந்தால் தேவை குறையும் ஆனால் பணவீக்க காலத்தில் அடிப்படையான பொருட்களின் விலையர்ந்தாலும் தேவை உயரும். அதன் காரணம் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் பணம் அதிகமாக சேர்வதால் அவர்களின் தேவை அளிப்பை விட அதிகரிக்கிறது. குறுகிய காலத்தில் அளிப்பை அதிகரிக்க முடியாத காரணத்தால் விலை உயருகிறது.

பணவீக்கம் ஏற்பட காரணங்கள்

  1. பற்றாக்குறை திட்டத்தால் தூண்டிவிடப்படும் பணவீக்கம்
  1. அரசானது தன்னுடைய வரவுகளுக்கு மேல் செலவு செய்யும்பொழுது
  1. ஊதிய அதிகரிப்பால் ஏற்படும் பணவீக்கம்
  1. தொழிலாளர்கள் தங்களுடைய திறமை அதிகரிப்பால் அவர்களுக்கு தரும் ஊதியத்தால் ஏற்படும் பணவீக்கம்..
  1. இலாப அதிகரிப்பால் ஏற்படும் பணவீக்கம்
  1. தொழில் முனைவோர்கள் இலாபத்தை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தும் பணவீக்கம்
  1. இவை எல்லாம் சேர்ந்து செலவு உந்தும் பணவீக்கத்தை உருவாகுகிறது.

நுகர்வோர் விலைக் குறியீடு (CPI), தனிப்பட்ட நுகர்வு செலவினங்கள் விலைக் குறியீடு (PCEPI) மற்றும் GDP பணவாட்டக் காரணி ஆகியவை பெரிய விலைக் குறியீடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். பணவீக்கம் என்ற சொல், பொருளாதாரத்தின் பொருள்கள் அல்லது சேவைகளின் குறிப்பிட்ட குறுகிய தொகுப்புக்கு மட்டும் ஏற்படும் விலையேற்றத்தை விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

சரக்குகள் (இதில் உணவுப் பொருள்கள், எரிபொருள், உலோகங்கள் ஆகியவை அடங்கும்), நிதி சொத்துகள் (பங்குகள், பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகள் ஆகியவை இதில் அடங்கும்) மற்றும் சேவைகள் (பொழுதுபோக்கு மற்றும் உடல்நலம் போன்றவை இதில் அடங்கும்) ஆகியவை அடங்கும். ரியாச்சர்ஸ்-CRB பட்டியல் (CCI), உற்பத்தியாளர் விலைக் குறியீடு மற்றும் பணிச் செலவுக் குறியீடு (ECI) ஆகியவை பொருளாதாரத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் விலைப் பணவீக்கத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் குறுகிய விலைக் குறியீடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

சொத்து விலைப் பணவீக்கம் என்பது, சரக்குகள் சேவைகளுக்கு மாறாக, சொத்துகளின் விலையில் ஏற்படும் விலையேற்றமாகும். மையப் பணவீக்கம் என்பது உணவு மற்றும் ஆற்றல் விலைகள் நீங்கலாக, பரவலான விலைக் குறியீடுகளின் துணைத் தொகுப்பில் ஏற்படும் விலையின் ஏற்றத்தாழ்வுகளின் அளவீடாகும்.

உற்பத்தியாளர் விலைக் குறியீடுகள் (PPI) என்பன உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்ட, விலைகளில் ஏற்பட்ட சராசரி மாற்றங்களை அளவிடப் பயன்படும் குறியீடுகளாகும். விலைத் தள்ளுபடி, இலாபங்கள் மற்றும் வரிகள் ஆகியவற்றின் காரணமாக நுகர்வோர் அளிக்கும் தொகையிலிருந்து வேறுபட்ட தொகையையே உற்பத்தியாளர் பெறும்படி செய்யக்கூடும் என்ற விதத்தில் இது CPI இலிருந்து வேறுபடுகிறது. பொதுவாக PPI இல் ஏற்படும் ஓர் உயர்வினைத் தொடர்ந்து CPI இல் உயர்வு ஏற்பட சிறிது தாமதமும் ஆகிறது. உற்பத்தியாளர் விலைக் குறியீடானது மூலப் பொருள்களின் விலைகளால் உற்பத்தியாளர்களுக்கு உருவாகும் அழுத்தங்களை அளவிடுகிறது. இவ்விளைவு நுகர்வோரின் பொறுப்பில் "சுமத்தப்படலாம்" அல்லது இலாபத்தால் சரிசெய்யப்படலாம், அல்லது உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் ஈடு செய்யப்படலாம். இந்தியாவிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் PPI இன் முந்தைய வடிவமானது மொத்த விற்பனை விலைக் குறியீடு என அழைக்கப்பட்டது.

விலை-மிகுதி பணவீக்கம்

அதிகரிக்கும் பணவீக்கத்தினால், பணியாளர்கள் நுகர்வோர் விலைகளைச் சமாளிக்க அதிக ஊதியத்தை கேட்கும் நிலை ஏற்படலாம். ஊதிய உயர்வானது எரிபொருள் பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம். ஒட்டுமொத்தப் பேரத்தில், விலை எதிர்பார்ப்புகளின் காரணியாக ஊதியம் முன்வைக்கப்படும், பணவீக்கம் முன்னேறும் போக்கைக் கொண்டிருக்கும் காலத்தில் இது இன்னும் அதிகமாகலாம். இது கூலி சுழற்சியை உருவாக்கி விடலாம். அதாவது, பணவீக்கம் கூடுதலான பணவீக்க எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிடும்.

ஊதியக் குழு வரலாறு

ஊதியக் கூழு என்பது அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை நிர்ணயம் செய்யும் ஒரு அமைப்பாகும். ஒவ்வொரு ஊதியக் குழுவும் ஆய்வுகளை மேற்கொண்டு அதன்படி சிபாரிசுகளை இந்திய அரசிடம் வைக்கும். குழுவில் மூத்த அரசு பணியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், பல துறை சார்ந்த வல்லுநர்கள் இருப்பர்.

  • முதல் ஊதியக் குழு 1946-இல் ஸ்ரீனிவாச வரதாச்சாரி தலைமையில் அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது.
  • இரண்டாவது ஊதியக்குழு  ஆகஸ்டு,1957-இல் ஜகன்நாத் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டது. மூன்றாவது ஊதியக்குழு ஏப்ரல்,1970-இல் திரு.ரகுபீர் தயாள் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழு 1973-இல் அறிக்கை சமர்ப்பித்தது.
  • நான்காவது ஊதியக்குழு ஜூன்,1983 இல் திரு. P.N.சிங்காள் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழு1996-இல் அறிக்கையை சமர்ப்பித்தது.
  • ஐந்தாவது ஊதியக்குழு  1994-ஆம் வருடம் நீதியரசர். S.ரத்னவேல் பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழு 2006-இல் அறிக்கையை சமர்ப்பித்தது
  • ஆறாவது ஊதியக்குழு ஜூலை,2006 இல் நீதியரசர். B N ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்டு 24,மார்ச்,2008-இல் அறிக்கையை சமர்ப்பித்தது.
  • ஏழாவது ஊதியக்குழு 28,பிப்ரவரி,2008 இல் நீதியரசர்.அசோக் குமார் மாத்தூர் தலைமையில் அமைக்கப்பட்டது

செய்ய வேண்டியது என்ன?

மத்திய அரசு ஊழியர்கள் 48.85 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள் 55.51 லட்சம் பேரும் மாநில அரசில் சுமார் 18 லட்சம் அரசு ஊழியர்களும் ஆவர். ஆக மத்திய மாநில அரசு ஊழியர்கள் மொத்த மக்கள் தொகையில் 2-3% மட்டும் கண்கிடுவதை தவிர்த்து, 98% சதவீத மக்களும் இதே நுகர்வோர் விலைக் குறியீட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும். 2014-இல், தனது சுதந்திர தின உரையில், பிரதம மந்திரி நரேந்திர மோடி, திட்டக் குழு கலைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, திட்டக் கமிஷனுக்கு மாற்றாக “நிதி ஆயோக்: அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், வரிகட்டுவோரின் பணத்தை, அதாவது பொதுப்பணத்தை (public Money) பொது மக்களைக் கணக்கில் கொள்ளாமல் அரசு ஊழியர்களின் வாழும் செலவை மட்டும் கணக்கில் வைத்துக் கொள்வது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற சமூக நீதிக்கே எதிராக உள்ளது.

வருங்காலங்களில், ஊதியக்குழுவை அமைப்பதை விட்டு பணவீக்க மற்றும் விலையேற்ற கட்டுப்பாடு குழு (Inflation Control and Price raise Commssion) அமைத்து விலையேற்றத்தை தடுத்து, அதற்கான காரணிகளை ஆராய்வது நாட்டிற்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும்  நன்மை பயக்கும்.

அமெரிக்காவில் ரிச்சர்ட் காலத்தில் இயற்றப்பட்ட பொருளாதார நிலைப்பு சட்டம்,1970 (Economic Stabilization Act of 1970) மற்றும் வாழ்க்கை செலவு கவுன்சில்(the Cost of Living Council) போன்றவற்றை அமைத்து அனைத்து மக்களுக்கான அகவிலைப் படியை யோசிக்க வேண்டும்

தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு (National Consumer Price Index Numbers) அனைத்து பொருட்களுக்கும் Branded, Imported என்ற பாகுபாடின்றி தேசிய அளவிலான பொதுவான விலை நிர்ணயம் செய்து உத்தரவிடுவது சாலச் சிறந்த வழி.

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

References:

CONSUMER PRICE INDEX,Changes in the Revised Series-(Base Year 2012 = 100)

CENSUS OF CENTRAL GOVERNMENT EMPLOYEES, APRIL, 2014

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com